கூதிர் பருவம் -2 (பிப்ரவரி -2024)
கூதிர் பருவம் -2 (பிப்ரவரி -2024)
தொகுப்பாசிரியர் பகுதி
"சாதிப் பிரிவு சமயப்பிரிவுகளும்
நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும்,
மூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சிசெய்தே
ஓடச் செய்தால் நமையும் ஓடச் செய்வார் என்பேன்"
எனும் பாவேந்தரின் வரிகளுக்கேற்ப இந்த மாத இதழில் நம் நாட்டில் திணிக்கப்பட்டு வரும் சமயத்தினை எதிர்த்து ஒரு சாரார் செய்துள்ள செயலினை விமர்சித்து வந்துள்ள கவிதை இந்த இதழின் முக்கியப் பகுதி. அந்தச் செயலின் பின்னணியை சிந்திக்கும் வரலாறு கவிதைக்குள்ளேயே இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. மேலும், ராமராஜ்யம் பற்றிய பல்வேறு கட்டுரைகளின் இணைப்புகளை பார்வைக்கு வைத்துள்ள இரண்டு கவிதைகள் பற்றிய கருத்துகளோடு ஏன் ஒரு மாநிலத்திற்கு மட்டும் சலுகை என்பதை பேசு பொருளாக்கியுள்ள காசி அனுபவக் கட்டுரை, நாட்டுப்புற வழிபாடுகள் மற்றும் சடங்குகளோடு பன்மைக்கு ஆதரவான குரல் எழுப்பும் அனுபவக் கட்டுரை முதலானவை ஒரே நிலையில் நிற்கின்றன. புதுமைப்பித்தன் கதையில் இருந்து சிறு பகுதி இந்த இதழின் எடுத்தாளப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஒரு கைம்பெண்ணின் ஏக்கத்தை உணர்ந்த வண்ணத்துப்பூச்சியின் இரக்கத்தை பதிவு செய்யும் கவிதை, ஒரு படைப்பாளியின் படைப்பை விமர்சனம் செய்து வியாபாரம் ரீதியில் வரவேற்பை எதிர்ப்பார்க்கும் மற்றொரு படைப்பிற்கு தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள நான்கு கவிஞர்களது பதிவுகளோடு சென்ற மாத படைப்புகளின் தொடர்ச்சியும் தொடர் கவிதைகள் உட்பட பிற கவிதைகளும், இம்மாத இதழில் வெளியாகியுள்ளன. பத்தாண்டு கால பரமபத ஆட்டம் இறுதி பாம்பினை நெருங்கியுள்ளது. விழப்போவது கொடிகள் மட்டுமல்ல இந்த இந்தியா [மன்னிக்கவும் (பாரத்)]வும் தான்.
-தொகுப்பாசிரியர் குழு
தொகுப்பாசிரியர்கள்
ரா.அழகுராஜ்
ஜெ.மோகன்
ஆ.கிரண்குமார்
ச.தணிகைவேலன்
முகப்போவியம்
சந்தோஷ் தா.
உள்ளடக்கம்
முட்டாள் வண்ணத்துப்பூச்சி - கோ. பிரதீபா
தொடர்புக்கு: pradeepag961@gmail.com
தொடர்புக்கு: mjmohan582@gmail.com
தொடர்புக்கு: thanigaisaga@gmail.com
உந்துதலுக்கான மூல விசை - வேலாயுதம் பொன்னுசாமி
தொடர்புக்கு: velayuthamponnusamy8@gmail.com
கேலியல்ல வன்மம் (விகடனுக்கு கண்டனம்)
சீமைச்சாமந்தி -கவி கோ. பிரியதர்ஷினி
தொடர்புக்கு: priyadharshini5797@gmail.com
இரண்டு புள்ளி சுழியமும் இரண்டாயிரத்து இருபத்து நான்கும் -உரையாடல்
தொடர்புக்கு: alaguraj437@gmail.com
மாயோன் தொழில் - ஆர்.கே.சுரேஷ் லலிதன்
தொடர்புக்கு: sureshlalithan@gmail.com
ஜெய் ஹே - ஆசையின் இரு கவிதைகள்
எடுத்தாளப்பட்ட பகுதி [கடவுளின் பிரதிநிதி -புதுமைப்பித்தன்]
இதழில் வெளியாகும் படைப்புகளுக்கு அதன் படைப்பாளர்களே பொறுப்பிற்குரியவர்கள்.
குறிப்பு
படைப்புகள் மற்றும் இதழில் வெளியான படைப்புகள் குறித்த கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
Pdf வடிவில் இதழை வாசிப்பதற்கு👇
கூதிர் பருவம் -2, பிப்ரவரி 2024
கூதிர் இதழைப் பக்கத்தைத் திருப்பி வாசிக்கும் வசதியுடன் வாசிக்க👇🏽👇🏽
https://online.fliphtml5.com/mjgzp/sbhf/
தொடர்புக்கு
மின்னஞ்சல் முகவரி
முதல் பத்து இதழ்களுக்கு
புலனம் மற்றும் அலைபேசி
88073 39644
63699 12549
95973 81055
98949 44640
Comments
Post a Comment