Posts

Showing posts from August, 2026

ரித்விக் கட்டக் நாடகங்கள், நேர்காணல் மற்றும் கட்டுரை வாசிப்பதற்கான இணைப்புகள்

Image
  ரித்விக் கட்டக் நாடகங்கள்,  நேர்காணல் மற்றும் கட்டுரை  வாசிப்பதற்கான இணைப்புகள் ரித்விக் கட்டக்: ஒரு புரட்சிக்காரனின் மனசாட்சி - தீனன் புதிய யதார்த்தவாதம்: ரித்விக் கட்டக்கின் நாடக இயங்கியல் - சாமிக் பந்தோபாத்யாய் (தமிழில் -தீனன்) கருப்பு நதி (முதல் அலை - முதல் காட்சி) கருப்பு நதி (முதல் அலை -இரண்டாம் காட்சி) கருப்பு நதி (முதல் அலை - மூன்றாம் காட்சி) கருப்பு நதி (இரண்டாம் அலை - நான்காம் காட்சி) கருப்பு நதி (இரண்டாம் அலை - ஐந்தாம் காட்சி) கருப்பு நதி (இரண்டாம் அலை - ஆறாம் காட்சி) குடும்பத்தேர் (முதல் அலை , முதல் பாகம்) குடும்பத்தேர் (முதல் அலை , இரண்டாம் பாகம்) குடும்பத்தேர் (இரண்டாம் அலை) குடும்பத்தேர் (மூன்றாம் அலை , முதல் பாகம்) குடும்பத்தேர் (மூன்றாம் அலை இரண்டாம் பாகம்) உயிர்வலி (பகுதி - 1)  உயிர்வலி (பகுதி - 2) உயிர்வலி (பகுதி - 3)  உயிர்வலி (பகுதி - 4) தீக்குரவை -முதல் அலை தீக்குரவை -இரண்டாம் அலை தீக்குரவை -மூன்றாம் அலை தீக்குரவை  -  நான்காம் அலை அணங்கு (பகுதி - 1) அணங்கு ( பகுதி - 2) அணங்கு ( பகு...

காயத்ரி ரவீந்திரன் கவிதைகள்

காயத்ரி ரவீந்திரன் கவிதைகள்  தொட்டிக்கட்டு வீடு  ஆலம் விழுதுகளுக்கிடையே பாசித்தூண்கள் வெடிப்பேறியிருந்தன பதினாறு அறைகளில் எதற்கும் கதவுகளில்லை எண்பத்தாறு வருடப் பழைய கிணற்றுக்குள்  கையுடைந்த பிளாஸ்டிக் பொம்மை மிதந்து கொண்டிருந்தது வரவேற்பறையின் நடுவே  உருக்குலைந்த பெண்ணின் சிலை சரிந்து கிடந்தது செடி முளைத்திருந்த குசினிச் சுவரினை‌ மெதுவாக வருடிப் பார்க்கிறேன் அம்மம்மாவின் மடியிலமர்ந்து நிலவு பார்த்து உறங்கிய இரவுகள் ஜமுனாப்பாரி ஆட்டுப்பால் குடித்து வளர்ந்த சிறுபருவம் நண்டுக்கால் சதை ஊட்டிவிடும் ஐயாவின் கைவாசனை குழல் புட்டோடு மாம்பழம் சேர்த்து இனிப்பூறிய காலை உணவு சப்பாணி கட்டியிருந்து பலாச்சுளை எடுத்துண்ட மாலை நேரங்கள் மரவள்ளி அவியலொடு இடிச்ச சம்பலும் கருவாட்டுப் பொரியலும்  இப்படியான ஞாபகங்கள் படிந்திருக்கும் தொட்டிக்கட்டு வீட்டுக்குள்  என் முன்னோரின் மூச்சுக்காற்று கேட்டபடி இருக்கின்றது ***** எல்டர்பெர்ரி வைன் (Elderberry Wine ) இறுதியாக அவளைப் பார்த்தபோது வைன் நிரம்பிய குடுவையொன்றுக்குள்  அவளை ஊறவைத்திருந்தார்கள் நீலம்பாரித்திருந்த உடல் மெழுகுச்சிலை ...

ச. இராஜ்குமார் கவிதைகள்

 ச. இராஜ்குமார் கவிதைகள் மாலையின் மங்கலில் பறவைகள் ஒவ்வொன்றாகத் திரும்புகின்றன தங்கள் மரத்திற்குள். சிறகுகள் மடங்கி, கிளைகள் நிறைந்து, மரம் முழுவதும் பறவைகளால் நிரம்புகிறது. தொலைவில் நின்று பார்க்கையில் மரமா அது? அல்லது பறவைகளால் உருவான ஒரு பெரும் பறவையா? இருள் இறங்கியதும் மரத்தின் உருவம் மறைந்து, மரம் முழுவதையும் ஒரு பறவையாகக் காட்டுகிறது இரவு. ******* நான் ............... என்னைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறேன்... ஒவ்வொரு கவிதையின் முடிவிலும் இன்னும் ஒரு வரி மீதமிருக்கிறது. நான். சொற்களுக்குள் தொலைந்த என்னை தேடுகிறேன் . ஓர் புள்ளிக்குள்  வட்டமாய் விழுந்து கிடக்கிறேன் என்பதறியாமலே ..! வட்டமாய் ஒரு கோடு  ***** https://www.instagram.com/p/DcqLO-mFB8c/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/DcqLSLFlIkI/?utm_source=ig_web_copy_link https://www.facebook.com/61554987526965/posts/pfbid02RjyTkfcYFzLdZACe1dwQ7aDpSF57itmtjf8UEw8KtSzhH6x3fvVfVS3zAWX6gzKSl/

நமக்கான சினிமாவைத் தேடும் பயணம் –மாரி மகேந்திரன்

Image
  நமக்கான சினிமாவைத் தேடும் பயணம் –மாரி மகேந்திரன்       சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனம் அல்ல. அது மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் ஒரு கலை வடிவம். மனிதனின் கனவுகள், துயரங்கள், நினைவுகள், சமூகப் போராட்டங்கள், அன்பு, தனிமை, ஆன்மீகத் தேடல் என வாழ்க்கையின் ஆழமான பகுதிகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு மொழி. ஆனால் இன்று சினிமா என்ற கலை வடிவம் பெரும்பாலும் வணிகத்தின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியுள்ளது. குறிப்பாக வணிகச் சினிமா உருவாக்கிய பிரம்மாண்டமான பிம்பம், சினிமா என்பது சாதாரண மனிதனால் அணுக முடியாத ஒரு உலகம் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது.        ஒரு கவிஞன் ஒரு பேனாவுடன் கவிதை எழுத முடியும். ஒரு எழுத்தாளர் ஒரு சிறிய அறையில் அமர்ந்து நாவல் எழுத முடியும். ஆனால் ஒரு திரைப்படக் கலைஞன் தனது முதல் படத்தைப் பற்றி சிந்திக்கும்போதே, அவனுக்கு முன்னால் கோடிக்கணக்கான முதலீடுகள், நட்சத்திரங்கள், தொழில்நுட்பங்கள், பிரம்மாண்டமான காட்சிகள் ஆகியவை ஒரு பெரிய தடையாக நிற்கின்றன.          இதனால் சினிமா ஒரு எளிய கலை அனுபவமாக இல்லாமல், ஒரு சூத...

செந்தி கவிதைகள்

செந்தி கவிதைகள்   வேட்டை   ஒன்றற்ற ஒன்றில் மிளிரும்  மின்மினிகளின் பறத்தலில் ஒரு வானம்  திறந்து மூடப்படுகிறது. பெரு நிலத்தின் வெளியில் சாம்பல் பூத்த நீலி கருநீலக் கூந்தலில் வனத்தைச் சுருட்டி நடைபயிலத் தொடங்கிய கணத்தில்  வந்திறங்கிய ராஜகுமாரன் கைபிடித்து  புரவியில் பறக்கத் தொடங்கினாள். அப்போதிறங்கிய  விண்கற்கள்  புதுப்புனலை உமிழ்ந்து திளைத்தன. திசைகள் கடந்து பெரும் பயணம் நீண்டுகொண்டிருந்தது. நீலநிறச் சிறகுகள் முளைத்தவளாய் காட்சியளிக்கத் தொடங்கியவள் ராஜகுமாரனை  மெல்ல அணைத்து முத்தமிடத் தொடங்கினாள். பள்ளத்தாக்குகள் கடந்து  ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி  அத்துவானக் காட்டில்  இருக்கும்  உச்சிமரக் கிளைப்பொந்தின் கிளியில்  அவனது உயிர் ஒளிந்திருக்கிறது. மாயக் கிறுக்கனொருவன்  அவன் உயிர் பிடிக்க பின் தொடர்கிறான். ***** ரயிலடி மாலை ஏகாந்தமாகக் கிடக்கிறது இவ் ரயில்நிலையம். திக்கற்றவர்களின் புகலிடமாகவும்  இது இருக்கிறது. பருமனான உடல் கொண்ட ஒருவன்  சட்டையணியாமல்  நடைமேடை பெஞ்சில் அமர்ந்து  காற்றில் கைநீட்ட...

மொழிபெயர்ப்பு கவிதைகள் (தமிழில் ஹவி)

  மொழிபெயர்ப்பு கவிதைகள் (தமிழில் ஹவி) தரிசு நிலம் தரிசு நிலத்தின் சந்திரிகா சேச்சி பின் கதவு வழியாக மட்டுமே  நுழையும் வீடுகளை குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறாள் முன் கதவு வழியாக நுழையும் அடுக்குமாடி குடியிருப்புகள் - தாழ்வார விளக்கு எரியும் வீடுகள். தினமும் சந்தையிலிருந்து  வாங்கி வரப்படும் மீனும்  அவளும் -  ஒரே பாதையைப் பகிர்ந்து கொள்கின்றனர் - பின் கதவு வழிப்பாதை. ஒரே பாதை வழியாக நுழைகையில் ஆகஸ்ட் 15 அன்று  தொலைக்காட்சியில்  அலறியபடி கேட்கிறது அந்த உறுதிமொழி  - அனைத்து இந்தியர்களும்  என் சகோதர சகோதரிகள். •• மலையாளத்தில் - விஜிலா சிரப்பாட் ஆங்கிலத்தில் - சஞ்சீவ் கும்பெணபள்ளி தமிழில் - ஹவி              விஜிலா சிரப்பாட் மலையாளத்தில் எழுதும் ஒரு தலித் பெண் கவிஞர். கேரளத்தின் கம்யூனிச வரலாறு சாதியற்ற சமூகத்தை அடைய எதுவும் செய்யவில்லை என்பதை அவரது கவிதைகள் உணர்த்துகின்றன.         அவரது கவிதைகள் வீடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பெண்கள் எதிர்கொள்ளும் அன்றாட சிரமங்களை பிரதிபலிக்கின்றன.  அட...

மா. அன்பரசு குறுங்கதைகள்

Image
மா. அன்பரசு குறுங்கதைகள் கைமாத்து திருச்சி கருமண்டபத்தில் ஒரே தெருவில் வசித்தார்கள் சந்தியாவும் சுமதியும். சந்தியாவின் வீடு பெரியது. சுமதியின் வீடு இரண்டு அறைகள் கொண்டது. வீடுகளுக்கிடையே வித்தியாசம் இருந்தது. அவர்களுக்கிடையே இல்லை. சந்தியா அழைத்தால் சுமதி ஓடிவந்துவிடுவாள். வீட்டு வேலை, தோட்ட வேலை, கார் ஓட்டுவது என எதுவாக இருந்தாலும் மறுப்பதில்லை. அவளுக்குக் கிடைத்த கூலியை வாங்கிக்கொள்வாள். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் ஒருபோதும் செய்யவில்லை. பணம் கேட்கவில்லை. “உனக்கு ஏதாவது தேவைப்பட்டா என்னிடம் கேட்கலாமே?” என்று ஒருநாள் சந்தியா கேட்டாள். “நீங்க வேலை கொடுக்கிறீங்களே அக்கா. அதுவே போதும்.” “அப்படியென்றால் அவசரச் செலவு?” “லட்சுமிகிட்ட கைமாத்து வாங்கிக்குவேன். திருப்பிக் கொடுத்துடுவேன்.” அந்தப் பதில் சந்தியாவுக்குள் ஏதோ ஒன்றை அசைத்தது. என்னிடம் ஏன் கேட்பதில்லை? மறுநாள் லட்சுமியிடம் பேசினாள். “இனிமே சுமதிக்குப் பணம் கொடுக்காதே.” “ஏன் அக்கா?” “சும்மா கொடுத்துக்கிட்டே இருந்தா பழக்கமாகிடும்.” அந்த வார்த்தை சுமதியிடம் போய்ச் சேர்ந்தது. அவள் எதுவும் சொல்லவில்லை. மறுநாள் சந்தியா அழைத்தாள். “சுமதி, க...

திண்டுக்கல் திலகவதி கவிதைகள்

  திண்டுக்கல் திலகவதி கவிதைகள்  கவனம் முழுவதையும் எதோ ஒன்றின் மீது குவித்து விட்டு சுற்றிலும் பார்க்கிறேன் யாவும் குவித்து வைத்தவையாகவே தெரிகிறது சுற்றத்த்தின் அதீதங்கள் நீர் தேங்கிய விழிகள் கவலை படர்ந்த முகங்கள் யாவும் தெரியவே இல்லை பவுடர் பூசிய என் முகத்திற்கு அகக் கண்களை இலகுவாக திறக்கவே முயற்சி செய்கிறேன் பள்ளத்தாக்கில் விழுந்து மேல் நோக்கி எழ போராடும் அருவி நீராய் ...      ***** முன்னிரவு தாண்டி நள்ளிரவாகி கொண்டிருக்கிறது பயமேறிய  கண்களில் பார்வை திகிலூட்டியது தெருவின் மூலையில் ஊளையிடும் நாய்களும் தங்க நிறக் கண்கொண்டு சன்னலின் வழியாக உற்றுப் பார்க்கும் பூனையும் அச்சத்தைக் கூட்ட கரண்ட் கம்பியில் இறைதேடும் ஆந்தையின் உர் உர் சத்தம் உயிரைக் கிழிக்க  இப்படியே  ஒரு இரவு மட்டுமல்ல ஒவ்வொரு இரவும்  ***** https://www.facebook.com/61554987526965/posts/pfbid02PnW6Qgc6eQerpYgDf5YLYQDZDWJSDg13HW2T9NBh4Ku9bKkWYwsiUr55TPBu6Gc4l/ https://www.instagram.com/p/DcgLiAeFOr2/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/DcgLkOUFG4u/?utm_source=ig_we...

கவி இளவல் ம. ஹரிபிரசாத் கவிதைகள்

கவி இளவல் ம. ஹரிபிரசாத் கவிதைகள்    சட்டசபை வெள்ளை உடைகளுக்குப் பின்னால் சிவப்புக் கம்பளம்  விரித்துக் கிடக்கிறது. சாமானியனின் ரத்தத்தால் நனைந்த ஆயிரம் கனவுகளின் சாட்சியாக, குளிரூட்டப்பட்ட அறையின் மேஜைகளில் உருட்டப்படும் வார்த்தைகளுக்குத் தெரியாது, வெளியே கொதிக்கும் வெயிலில் ஒரு விவசாயியின் மௌனம் எப்படிச் சாம்பலாகிறது என்று. கோரிக்கைகள் இங்கே காகிதங்களாக மடிக்கப்படுகின்றன, அதிகாரத்தின் கைகளில் சிக்கி அவை காகித கப்பல்களாகவோ அல்லது குப்பைகளாகவோ உருமாறுகின்றன. கேள்விகள் கேட்கப்படாத போது மௌனம் ஒரு சட்டமாகிறது, பதில்கள் இல்லாத போது புன்னகை ஒரு அரசியலாகிறது ***** காலச் சக்கரம் அன்று... கிணற்றடியில் கயிறு இழுத்த கைகளுக்கு தண்ணீர் என்பது இறைவனின் தீர்த்தம், ஊர் கூடிப் பார்த்த அந்த ஒற்றைத் தொலைக்காட்சி திருவிழாக் காலத்துத் தேரோட்டம், கடிதம் சுமந்து வரும் தபால்காரர் வாசலில் வந்து நின்ற ஒரு வாழும் வசந்தம் சிக்கனம் என்பது அவர்களின் சிம்மாசனம். ஆடம்பரம் என்பது அவர்கள் அஞ்சி ஒதுங்கிய தீ. இன்று... குழாயைத் திறந்தால் கொட்டும் நீரும், உள்ளங்கைக்குள் சுருங்கிய உலகமும் மூச்சுக்காற்றைப் போன்...