திண்டுக்கல் திலகவதி கவிதைகள்
திண்டுக்கல் திலகவதி கவிதைகள்
கவனம் முழுவதையும்
எதோ ஒன்றின் மீது
குவித்து விட்டு சுற்றிலும்
பார்க்கிறேன்
யாவும் குவித்து வைத்தவையாகவே
தெரிகிறது
சுற்றத்த்தின் அதீதங்கள் நீர்
தேங்கிய விழிகள் கவலை
படர்ந்த முகங்கள் யாவும்
தெரியவே இல்லை பவுடர்
பூசிய என் முகத்திற்கு
அகக் கண்களை இலகுவாக
திறக்கவே முயற்சி செய்கிறேன்
பள்ளத்தாக்கில் விழுந்து
மேல் நோக்கி எழ போராடும் அருவி நீராய் ...
*****
முன்னிரவு தாண்டி நள்ளிரவாகி
கொண்டிருக்கிறது
பயமேறிய கண்களில் பார்வை
திகிலூட்டியது
தெருவின் மூலையில் ஊளையிடும்
நாய்களும் தங்க நிறக் கண்கொண்டு
சன்னலின் வழியாக உற்றுப் பார்க்கும்
பூனையும் அச்சத்தைக் கூட்ட
கரண்ட் கம்பியில் இறைதேடும்
ஆந்தையின் உர் உர் சத்தம்
உயிரைக் கிழிக்க இப்படியே
ஒரு இரவு மட்டுமல்ல ஒவ்வொரு
இரவும்
*****
https://www.instagram.com/p/DcgLiAeFOr2/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/DcgLkOUFG4u/?utm_source=ig_web_copy_link
Comments
Post a Comment