Posts

Showing posts from September, 2026

கல்லூரிகள் டூ பல்கலைக்கழகங்கள் -மா. அன்பரசு

Image
  கல்லூரிகள் டூ பல்கலைக்கழகங்கள் -மா. அன்பரசு பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கல்வி வளர்ச்சியின் அடையாளமா? அல்லது ஏற்கெனவே இருக்கும் கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்துவதுதான் உண்மையான வளர்ச்சியா? தமிழ்நாட்டில் உயர்கல்வி தொடர்பான புதிய விவாதத்திற்கு வழிவகுத்திருக்கிறது, செப்டம்பர் 8, 2026 அன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டம், 2026. தனியார் பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான சில நிலம் மற்றும் நிதி நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் ஏற்கெனவே செயல்பட்டு வரும் சில கல்லூரிகள் எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களாக மாறுவதற்கான பாதை எளிதாகலாம். இது உயர்கல்வி வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்பா? நிச்சயமாக சில நன்மைகள் இருக்கின்றன. ஆனால் இந்தச் சட்டத்தைப் பற்றி பேசும்போது ஒரு கேள்வியைத் தவிர்க்க முடியாது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருக்கும் அரசு பல்கலைக்கழகங்களும் அரசு கல்லூரிகளும் போதுமான அளவு வலுப்படுத்தப்பட்டுள்ளனவா? எண்ணிக்கை அதிகரிப்பதா… தரம் உயர்வதா? தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னணி மாநிலங்களில் ஒன்று. ஏராளமான பல்கலைக்கழகங்களும் ஆயிரக்க...

யாரும் தேடாத இடம் - மா. அன்பரசு

Image
                யாரும் தேடாத இடம் - மா. அன்பரசு 2009-ஆம் ஆண்டு. பாலக்காடு மாவட்டம், அயலூர் கிராமம். மாலை நேரம். வீட்டின் பின்புறம் இருந்த பழைய கிணற்றின் அருகே சஜிதா நின்றுகொண்டிருந்தாள். ரஹ்மான் எதிரே இருந்த புளியமரத்தில் சாய்ந்திருந்தான். சில நொடிகள் இருவருக்கும் இடையில் பேச்சு இல்லை. “வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டாங்க.” ரஹ்மான் நிமிர்ந்து பார்த்தான். “அடுத்த மாசம் நிச்சயதார்த்தமாம்.” அவள் குரல் நடுங்கியது. ரஹ்மான் எதுவும் பேசவில்லை. “நம்ம விஷயத்தைச் சொல்லலாமா?” “சொன்னா?” அவள் அவனைப் பார்த்தாள். “என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப மாட்டாங்க. உன்னையும் விட மாட்டாங்க.” கிணற்றுக்குள் ஒரு கல் விழுந்த சத்தம் கேட்டது. இருவரும் அந்தச் சத்தத்தையே கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த இரவு ரஹ்மானுக்கு உறக்கம் வரவில்லை. அடுத்த சில நாட்கள் அவர்கள் வெளியூருக்குச் சென்று வாழ்வது பற்றிப் பேசினர். வேலை இல்லை. பணம் இல்லை. தங்க இடமில்லை. வீட்டிலிருந்து வெளியேறியவுடன் காவல்துறை தேடத் தொடங்கிவிடும். ஒரு இரவு ரஹ்மான் நீண்ட நேரம் அமைதியாக இருந்துவிட்டு சொன்னான். “எல்லாரும் உன...