கவி இளவல் ம. ஹரிபிரசாத் கவிதைகள்

கவி இளவல் ம. ஹரிபிரசாத் கவிதைகள் 

 சட்டசபை


வெள்ளை உடைகளுக்குப் பின்னால்

சிவப்புக் கம்பளம் 

விரித்துக் கிடக்கிறது.

சாமானியனின் ரத்தத்தால் நனைந்த

ஆயிரம் கனவுகளின் சாட்சியாக,

குளிரூட்டப்பட்ட அறையின் மேஜைகளில்

உருட்டப்படும் வார்த்தைகளுக்குத் தெரியாது,

வெளியே கொதிக்கும் வெயிலில்

ஒரு விவசாயியின் மௌனம்

எப்படிச் சாம்பலாகிறது என்று.

கோரிக்கைகள் இங்கே

காகிதங்களாக மடிக்கப்படுகின்றன,

அதிகாரத்தின் கைகளில் சிக்கி

அவை காகித கப்பல்களாகவோ அல்லது

குப்பைகளாகவோ உருமாறுகின்றன.

கேள்விகள் கேட்கப்படாத போது

மௌனம் ஒரு சட்டமாகிறது,

பதில்கள் இல்லாத போது

புன்னகை ஒரு அரசியலாகிறது

*****


காலச் சக்கரம்


அன்று...

கிணற்றடியில் கயிறு இழுத்த கைகளுக்கு

தண்ணீர் என்பது இறைவனின் தீர்த்தம்,

ஊர் கூடிப் பார்த்த அந்த ஒற்றைத் தொலைக்காட்சி

திருவிழாக் காலத்துத் தேரோட்டம்,

கடிதம் சுமந்து வரும் தபால்காரர்

வாசலில் வந்து நின்ற ஒரு வாழும் வசந்தம்

சிக்கனம் என்பது அவர்களின் சிம்மாசனம்.

ஆடம்பரம் என்பது அவர்கள் அஞ்சி ஒதுங்கிய தீ.

இன்று...

குழாயைத் திறந்தால் கொட்டும் நீரும்,

உள்ளங்கைக்குள் சுருங்கிய உலகமும்

மூச்சுக்காற்றைப் போன்றதொரு கட்டாயம்.

அன்று ஆடம்பரம் என ஒதுக்கப்பட்ட மிதிவண்டி,

இன்று தெருவோரத்துத் துருப்பிடித்த பழமையாக கிடக்கிறது.

வேகம் எனும் இயந்திரச் சுழற்சியில் 

அவசரம் இப்போது அத்தியாவசியத்தின் முகவரி!

*****


பசி


திருமண மண்டபத்தின் 

பின்புறம் உள்ள குப்பைத்தொட்டியில்,

ஒரு ஏழைச்சிறுவனின்

ஒரு வாரப் பசி

கிடைக்கிறது.

யாரோ ருசித்து

மீதமென உதறிய

எச்சில் இலைகளில் தான்

அவன் வாழ்வின்

அன்றைய விடியல் ஒட்டியிருக்கிறது.

அலங்கார மின்விளக்குகளுக்கு

அடியில் நடக்கும்

ஆடம்பரப் பசியை விட,

இருட்டுத் தொட்டிக்குள்

கையை விட்டுத் தேடும்

இவன் பசிக்குத் தான்

உயிர் அதிகம்

*****


https://www.facebook.com/61554987526965/posts/pfbid0dUa3gjpg6Arjwp4KrQoRfhgLHk3BJK3abcQDWKCSMtTrtGKEK9guiGn77T6rM1VSl/


https://www.instagram.com/p/DcgLIDFFPsu/?utm_source=ig_web_copy_link


https://www.instagram.com/p/DcgLM0SlBM3/?utm_source=ig_web_copy_link


https://www.instagram.com/p/DcgLQq-FIEL/?utm_source=ig_web_copy_link

Comments

Popular posts from this blog

மா. அன்பரசு குறுங்கதைகள்

மெய் முறிந்தால் மெய் (எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்)

தீனன் கவிதைகள்