சீமைச்சாமந்தி - கவி கோ பிரியதர்ஷினி
சீமைச்சாமந்தி
பெருங்கலயத்தின் விளிம்புகளில்
நக்கி நக்கி நஞ்சுண்டேன்;
காமப்பந்துகளை அறுத்து அண்ணீரகத்தின்
வெதுவெதுப்பில் முக்கி எடுத்தேன்!
உப்பரிகையில் நின்றிருந்த கூகைச்சேவல்
பெட்டைக் கோழியின் அல்குல் அரிந்தெடுக்க
நாற்புரமும் அலையாடித் திரிந்தது
மீட்பை பெறும் முன்பே நக்கித் தீர்ந்திட
வேண்டும்.
அல்குல் கழற்றி நெருப்பில் சுட்டெறித்தேன்
அரிவதற்கு அல்குல் இல்லாமல் போனபின்பும்
நஞ்சுண்டேன் நஞ்சுண்டேன்!
நக்கித் திமிர்ந்தபின்னும் சேலாப்பழமாய் சதைக்கனிக்குள்
கிண்டி நிமிரும் பூலோகப் பாதையின்
நடுவே சீமைச்சாமந்தியின் அல்குல்
திருடுபவர்களே...
போம்....
போம்...
பூட்டூசி வேண்டாம்
பூட்டூசி வேண்டாம்...
-கவி கோ பிரியதர்ஷினி
Comments
Post a Comment