முட்டாள் வண்ணத்துப்பூச்சி
முட்டாள் வண்ணத்துப்பூச்சி
-கோ.பிரதீபா
காற்றோடு மோதிக் கொண்டிருந்த வெள்ளைத் துணி ஒன்றில்
இளைப்பாறுவதற்கு அமர்ந்த வண்ணத்துப்பூச்சி ஒன்று
தன் சாயங்களை விட்டுச் சென்றது,
பார்ப்பவர்களுக்கு முட்டாளாய் தென்பட்டாலும் ,
அந்த வண்ணத்துப்பூச்சிக்குக் கூட தெரிந்திருக்கிறது
அந்த கைம்பெண்ணின்
வெள்ளைச் சீலையும் வண்ணங்களுக்காக ஏங்குகிறது என்று !
Comments
Post a Comment