திரமிளன் கவிதை
நாட்டு மக்களே வறுமையில்
நாலாயிரம் கோடி ரூபாய் பெருமையில்
நரேந்திரனின் ஒருமையில்
நாசமானது அவர் கை மையில்
அலுவலகங்களுக்கு விடுப்பு
அரை வேலைப்பாடோடு முடிப்பு
சங்கிகள் சாப்பாட்டில் இல்லை உவர்ப்பு - சொல்லுகிறேன்
ஆர்.எஸ்.எஸ் சிறப்பு
பேதம் வளர்க்கப்
பெரும் பெரும் புராணங்கள்
சாதிச் சண்டை வளர்க்கத்
தக்க இதிகாசங்கள் என்று
அடுக்கிக் கொண்டே போகலாம்
இந்நாட்டிலே
காவிக் கொடி ஏற்றினர் திருச்சபை மேட்டிலே
குதிரை யாகத்தில் பிறந்தவனுக்கு
குடமுழுக்கு சிறப்பு
குடியரசுத் தலைவருக்கு
அனுமதி மறுப்பு
அம்பானி அதானி அழைப்பு
ஆலயங்கள் ஓர் நாள் துடைப்பு
இது அத்தனையும் ஓர் நடிப்பு
ஜஹாங்கிர் வந்தார்
ஓவியம் வளர்ந்தது
ஷாஜகான் வந்தார்
கட்டடக்கலை சிறந்தது
ஔரங்கசீப் வந்தார்
ஒற்றுமை பிறந்தது
இராமன் வந்தான்
சந்தேகம் பரந்தது,
கலகம் பிறந்தது.
இறுதியாக சொல்லுகிறேன்,
சமாதி ஒன்று இடிப்பு
மதம் ஒன்று திணிப்பு
சாமானியனுக்கு மறுப்பு
இதுவே
“இராமர் கோயில் திறப்பு”
-திரமிளன்
Comments
Post a Comment