இலக்கியமும் இசையுமுமான வாழ்வு கவிஞர் சுகுமாரனுடனான உரையாடல் சந்தித்தோர்: வேலாயுதம் பொன்னுசாமி, குமரேஸ்வரன், அழகுராஜ், கருப்பண்ணா அழகுராஜ்: பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் மொழிபெயர்ப்புகள் குறித்துத் தங்களுடைய கருத்து என்ன? சுகுமாரன்: பிற மொழிகளில் உள்ள நல்ல படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் பலர் மொழிபெயர்க்கிறார்கள். ஆனால், தமிழ் மொழிக்குக் குறிப்பிட்டத்தக்க ஏதேனும் ஒரு பங்களிப்பை அல்லது சிறப்பைச் சேர்க்கும் என்றால் மட்டுமே அந்த மொழிபெயர்ப்புக்கு உண்மையான மதிப்பு இருக்கும். அப்படியான மொழிபெயர்ப்புகளே இங்கு நிலைத்து நிற்கும். அழகுராஜ்: பிற மொழித் தழுவல்கள் அல்லது பாதிப்பில் உருவாகும் படைப்புகள் போலச்செய்தல் (Copy/Plagiarism) ஆகிவிடாதா? தமிழ் எழுத்தாளர்களுக்கு இது ஒரு நெருக்கடியை உருவாக்குமா? சுகுமாரன்: நிச்சயமாக இல்லை. எந்தவொரு படைப்பும் திடீரென்று ஆகாயத்தில் இருந்து இறங்கி விடுவதில்லை. அது ஏதேனும் ஒரு படைப்பின் கிளையாகவோ அல்லது பாதிப்பாகவோ உருவாகிறது. உதாரணமாக, நமது பெரும் காவியமான கம்பராமாயணம், வால்மீகியின் ராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டிருந்...
மிகச்சிறப்பு. தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.
ReplyDeleteநன்றி
Delete