கூதிர் பருவம் –8 ஆகஸ்ட்- 2024
கூதிர் பருவம் –8 ஆகஸ்ட்- 2024
தொகுப்பாசிரியர் பகுதி
கூதிர் எட்டாவது இதழ் தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதம் ஆயிற்று. பிழையின்றி கச்சிதமாய் குறித்த நேரத்தில் நடப்பது எங்களுக்கு சாத்தியமாகவில்லை. இந்த மாத இதழானது கவிதைகள், கட்டுரைகள், சிறுகதை, தொடர்கதை, வாசகர் பக்கம், எடுத்தாளாப்பட்ட பகுதி ஆகியவற்றை கொண்டிருக்கிறது.
இம்மாத இதழின் இதயமாக குவிரனின் ''மயிர் விடு தூது'' அமைந்துள்ளது. கடந்த மாத இதழில் வெளிவந்த அரம்பனின் ''நானும் மயிரை விட்டேன்'' என்ற கட்டுரை வாசகர் மத்தியில் நல்ல ஆர்வத்தைத் தூண்டியதை வாசகர் பக்கம் மூலம் அறிந்தோம். தொடர்ந்து இது போன்று மின்னஞ்சல், புலனம் வலைப்பூவின் கருத்து பகுதி என்று ஏதேனும் ஒரு வகையில் எங்களிடம் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தீனனின் பூனையின் கண்கள் கவிதை, பிரகதியின் மொழிபெயர்ப்பு கவிதை, அரா கவிதைகள், கூதிர் இரண்டாம் இதழில் வெளிவந்த சுரேஷ் லலிதனின் 'மாயோன் தொழில்' கவிதையின் தொடர்ச்சியுமாக இம்மாத இதழின் கவிதைகள் அமைந்திருக்கின்றன. மேலும், யுவபுரஸ்கார் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்றான றாம் சந்தோஷின் சொல் வெளித் தவளைகள் குறித்த கலந்துரையாடல் அழகுராஜ் ஒருங்கிணைப்பில் 20.6.2024 அன்று இணையவழியில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பகிரப்பட்ட கருத்துகளை கட்டுரையாக செம்மைப்படுத்தி கொடுத்துள்ளார் ஜெ.காமாட்சி காயத்ரி. அழகுராஜ் ராமமூர்த்தியின் பஞ்சாமிர்தம்-100 என்ற கட்டுரை மாதவையாவின் இதழியல் பங்களிப்பினை அறிமுகப்படுத்துகிறது. வழக்கம் போல விசித்திரனின் சத்யா, மூடநம்பிக்கை பகடி செய்யும் ஆல்யனின் உத்தமபுரம் சிறுகதை, வாசகர் பக்கம் ஆகியன இடம் பெற்றுள்ளது. தமிழ் எழுத்து குறித்த விவாதத்தில் பாரதியாருக்கு வ.உ.சி ஞானபாநு இதழில் அளித்த பதில் எடுத்தாளாப்பட்ட பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
-தொகுப்பாசிரியர்கள்
தொகுப்பாசிரியர்கள்
ரா.அழகுராஜ்
ஜெ.மோகன்
ஆ.கிரண்குமார்
ச.தணிகைவேலன்
முகப்போவியம்
ஏ.நிவேதா
உள்ளடக்கம்
றாம் சந்தோஷின் “சொல் வெளித் தவளைகள்” வேறு சில பார்வைகள் -ஜெ.காமாட்சி காயத்ரி
மாயோன் தொழில் பகுதி-2
பஞ்சாமிர்தம் 100 -அழகுராஜ் ராமமூர்த்தி
சிறகுகளை உடைய நம்பிக்கை -எமிலி டிக்கன்சன்
எடுத்தாளப்பட்ட பகுதி -தமிழ் எழுத்துக்கள்
(ஸ்ரீமான் வ.உ.சிதம்பரம்பிள்ளையவர்கள் எழுதியது)
இதழில் வெளியாகும் படைப்புகளுக்கு அதன் படைப்பாளர்களே பொறுப்பிற்குரியவர்கள்.
புலனம் மற்றும் அலைபேசி
88073 39644
63699 12549
95973 81055
98949 44640
Comments
Post a Comment