சிறகுகளை உடைய நம்பிக்கை -எமிலி டிக்கன்சன் -பிரகதி (தமிழில்)
சிறகுகளை உடைய நம்பிக்கை -எமிலி டிக்கன்சன்
-பிரகதி
(தமிழில்)
நம்பிக்கை பறவை அதன்
சிறகுகளை கொண்டு–
ஆத்மாவை ஒரு வசிப்பிடமாக்கி
வாழ்கிறது.
சொற்களற்ற அப்பறவை
இசை இசைக்கிறது.
ஓயாத அவ்விசை எப்பொழுதும்
கேட்டுக்கொண்டே இருக்கிறது.
பலத்த காற்று வீசும் பொழுதும்
அந்த இசை கேட்டுக்கொண்டே இருக்கும்.
ஆனால் வலிமிகுந்த புயல் வீசும்போது
அந்த சிறிய பறவை காணாமல் போனது.
எங்கிருந்தோ அப்பறவை ஒரு பாதுகாப்பை கொடுக்கிறது.
அந்த பறவையின் பாடலை
குளிர்பிரதேசத்திலிருந்து கேட்கிறேன்.
புதிரான கடலில் இருந்தும் கேட்கிறேன்.
எந்த ஒரு முடிவில்லா நிலையிலும்
அதற்கென ஒரு சிறிய துண்டு உணவு கூட
என்னிடம் கேட்டதில்லை.
Comments
Post a Comment