உத்தமபுரம் -ஆல்யன்

 

 உத்தமபுரம் -ஆல்யன் 

    கோவிந்தா… கோவிந்தா..கோவிந்தா  என  கூட்டம் உற்சாகமாக கத்தியது. பூசாரி அவுட் உடனே பூச தட்டு எடுத்து எப்பவும் ஆட்டுற மாதிரி மணியை பொறுமையா ஆட்டுனாரு வயசான ஆளு 60 வயசு இருக்கும். இந்த வயசுலயும் முறுக்கு எடுத்து திரிவாறு. நாராயணன் வலது கையை தூக்கி ஆள்காட்டி விரலை அசைச்சி பம்பகாரங்களை அடி போட சொன்னான்.மீசை எல்லாம் நல்லா முளைச்சு வளர்ந்திட்ட பருவம் அவனுக்கு. அவ அப்பன் புள்ளையாரு பயிர் வைக்கிறதும் ஆடு வியாபாரமும் தான் தொழில். திருவிழா நேரத்துல ஒரு ஆட்டை அறுத்து கூறு போட்டு வித்துருவாரு அதனால ஆடு பார்க்க  வெளியூருக்கு போயிட்டாரு.அந்த அம்மாவுக்கு திருவிழா தொடங்கி மூணு நாளைக்கு முன்னாடியே காப்பு கட்டி ஊர் பூரா லைட் செட்டு வீட்டுக்கு ஒரு கொடி ஊரே கலகட்டும்.மூணு நாளும் கொடம் வரும் சின்ன குடத்த எடுத்து பம்பக்காருங்க சீவி சிங்காரிச்சு அலங்காரம் பண்ணா அந்த அம்மாவே அந்த கொடத்துல  உட்கார்ந்துட்டு இருக்காங்க மாதிரி இருக்கும்.கொடத்த சிங்காரிக்கும்போது எப்பவும் நாட்டார் வீடு கழுனிலதான் தான் செய்வாங்க நல்ல ரெண்டு மாமரம் "அப்ப கொடத்த தூக்கலாமானு பம்பகாரன் கேட்க” கவுன்சிலர் மீசையை முடிக்கி விட்டு தலைய ஆட்டி சைகை தந்தார்.கவுன்சிலர் கோவிந்தன் ரெம்ப வெறுப்பான ஆலு எவனாவது பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சு வளர்ந்த அவனை அழிக்க பார்பான், அவன் தம்பி வாசு, அவன் மச்சான் பஞ்சா ரெண்டு பேருக்கும் பேச்சு திறமை அதிகம் எடுபுடி வேல மட்டும் எப்பவும். கடைக்கார் அவரோட அம்மா தான் அந்த கோவில் கட்ட சொன்னாங்க அந்த உரிமையும்,சாமர்த்தியமும்,ஊர்ல பெரிய தலக்கட்டும் பங்காளியும் அதிகம் உண்டு அவருக்கு. சாமி அழைச்சா அவரு மேல் தான் சாமி வந்து ஆடும்..பழனி ஊரோட நாட்டார் குடும்பம் நல்ல சொத்து பத்து. அவரு தாத்தா நாட்டார இருந்தாரு அதனாலே பழனிக்கு ஒரு இடம் உண்டு இந்த கூட்டத்துல.திருவிழாவை எடுத்து நடத்துருவங்க இவங்க தான். எந்த வாட்டி இல்லாம இந்த வருஷம் ஒரு தலைக்கு பிரிவு 2000 ரூபாய் போட்டாங்க. புருஷன் இல்லாத வீட்டுக்கு அரை பிரிவு சொன்னாங்க அதுவும் இந்த வாட்டி இல்ல.தெருக்கு ஒரு தூரி வசூல் செஞ்சி தலம தூரி வாசுக்கிட்ட போக அவரு கவுன்சலர் கிட்ட கொடுத்தாரு. கவுன்சலர் வாசுக்கிட்ட புது நோட்டு வாங்கி கணக்கு எழுத சொன்னாரு.மொத்தத்துல 200 வீட்டு தலக்கட்டு  தான் ஊரு..எப்பவும் மிச்சம் வர பணத்தை நம்ம ஊரு ஆளுக்கே வட்டிக்கிவிடலாம் இல்லனா இருக்காற பணத்தை கோவில் பேங்க்ல போடலாம் என்று கூறினார். நாராயண மனக்கணக்கு போட்டா எவ்வளவு வரும் அப்படின்னு.

 

 

     போனவாட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் தொகை 8 லட்சம். மாரியம்மன் கோவில் கணக்கு கூட்டத்துல நாராயணன் கணக்கு கேட்க மொதல்ல வாசு மூஞ்ச மொறச்சிப்பாக்க அப்புறம் எல்லோரும் கேட்டாங்க சரியான கணக்கு வராமா அப்புறம் கணக்கு ஒதச்சிடிச்சி.. ஏதேதோ சொல்லி பழைய சண்டைய கேலரி விட்டான்  பஞ்சா.கூட்டம் யசுக்கு  புசுக்கா போயி முடிய சேந்தரம் ஆறு மணி ஆச்சு. பால் சுசைட்டுல பால் ஊத்த போன பொம்பளைங்க வேடிக்கபார்த்துக்குனுபோனாங்க. கூட்டத்துல எப்பவும் ஒரு பொட்ட குழந்தை கூட இருக்காது இது ஊரோட வழக்கம்‌. இப்படித்தான் இந்த கூட்டத்துல ஒரு தடவை கடக்கார் தம்பி பெண்ணு சல்சா வந்து கணக்கு கேட்டா.கவுன்சிலர் “பொம்மனாட்டி வந்து கேள்வி கேட்குறல வா நீயே வந்து திருவிழாவ நடத்து”.நீயே எல்லாத்தையும் பாத்துக்கோன்னு நேக்கா வார்த்தை சொல்ல கூடியிருந்த கூட்டத்துல எல்லா ஆம்பளைங்க அமைதியத்தான் இருந்தாங்க.கூட்டம்  எப்போதும் பள்ளிக்கூடத்து திண்ணையில தான்நடக்கும்.அடிச்சு புடிச்சு போக 28 ஆயிரம் கணக்கு ஒதைக்க மோளக்காரன்,  கூத்துக்காரன், பம்பகரன்,சரக்கு செலவு கணக்குக்கு வரல  இதுபோக கூத்தாடிக்கு வேற சாப்பாடு செலவு வரல மொத்தமா கணக்கு பண்ணி  வீட்டுக்கு ஒரு ஜெராக்ஸ் போட்டு வரும் பஞ்சா திறமையை காமிச்சாரு.

 

 

    இது சரிப்பட்டு வராது இதை பார்த்த இளவட்ட பசங்க எல்லாம் ஒன்னும் சேர்ந்து அந்த வாட்டி வார்டு நம்பர் எலக்சன்ல கவுன்சிலர் நிக்க வச்ச ஆள தோக்கடிச்சிபுட்டாங்க.. அன்னிக்கு இருந்து இன்னைக்கு வரை ஒரு வருஷம் ஆட்சி கரண்ட் போனா உடனே கரண்ட் வருது, தெரு லைட் எல்லாம் எப்பவுமே எரியுது, எதனா ரிப்பேர் ஆச்சுன்னா ரிப்பேர் பண்றாங்க,வீட்டுக்கு ஒரு குழா அப்படின்னு போட்டு எந்நேரமும் தண்ணி வருது. இதெல்லாம் பார்த்து மூக்கு வேர்த்தது..கவுன்சிலர் பொங்கல் போட்டி மேடையில் சாடைமாடையா  பேசி புட்டாரு.. வந்துச்சு எல்லாருக்கும் கோபம் அதுக்கப்புறம் திருவிழா பேண்ட் செட் இல்லாம தான்  நடக்கணும் சொல்ல அதைக் கேக்க போன பசங்க அவங்க கிட்ட நீங்க குடிச்சிட்டு கும்மாலம் போட்டு சண்டை போடுவீங்க ஒரே அடாவடி தான்…இதை கேட்டு இன்னும் ஆத்திரப்பட்டாங்க பசங்க ..எங்களுக்கு பேண்ட வச்சாதானு ஒரே சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க ..இதை பார்த்து ஊர் பெரியவர்கள் எல்லாம் என்னென்ன சொன்னாங்க… சின்ன பசங்க எல்லாம் சேர்ந்து ஊரஅழிக்க போகுதுங்க அப்படின்னு பேசிக்கிட்டாங்க…நாராயணனுக்கு சின்ன வயசுல இருந்து கொடத்து மேல சின்ன கண்ணு..சின்ன வயசுல சாமியாட்டத்துல கூட அம்மா வேசம் போட்டுக்குனு அவன் மட்டும் தான் ஆடுவான் யாரையும் சாமியாட விட மாட்டான். வாட்டர் கேன்ல மோளம் அடிக்கிக்குனு வேப்பிலை எடுத்து திருவிழாவுலா நடக்குறதுஅப்படியே பார்த்து வச்சுக்குனு பிசுறு தட்டாம அதை அப்படியே பண்ணுவான் அப்படியே கத்துவான், அப்படியே குதிப்பான், கைய முறுக்கு வா.. கெடா வெட்டும்போது மட்டும் அம்மா கொஞ்சம் தூரமா தள்ளி கூட்டிட்டு போய்டுவாங்க தலைச்சம்புல்ல பாக்க கூடாது அப்படின்னு .. இந்த வருஷம் மூணாவது நாள் அவங்க தெரு சந்தாலா ஒரு ஆள் தூக்கும். அவன் தான் தூக்கணும் முடிவு பண்ணி தூரி கிட்ட சொல்லி வச்சிட்டா அவனும் சரின்னு சொல்லிட்டாரு.இரண்டாவது நாள்  கொடம் கிளம்பிகொஞ்ச நேரம் ஆன பிறகு பொளியாள் கூட சேட்டை பண்ணிட்டு வந்தாங்க பசங்க.. போன்ல வீடியோ எடுக்கிறது,கத்துரத்து, அப்படி இப்படின்னு இருந்தானுங்க. வீடியோ எடுக்குறத்த பார்த்த உடனே பொளிக்காரன் குஷியாகி கத்திக்கிட்டு என்ன ஆட்டம் போட்டா.. கவுன்சில் வீடு வந்த உடனே நாராயண சும்மா இல்லாம பம்பகாரனப்பார்த்து ஆனந்தம் பாட சொல்ல பம்ப காரனோ போட்டா நல்லா ஆனந்த பாட்டு. பக்கத்துல இருந்த பொம்பளைக்கு மெரலு வந்து ஓடி  கவுன்சிலர் பொண்டாட்டி கையிலிருந்த பூசை தட்டு தட்டி விட்டா.. கவுன்சிலர் கோபமா பம்பகாரன பாக்க பம்பகாரன் நாராயணண பார்த்தான்.. புள்ளையாருக்கு பொறந்த புள்ளைக்கு  பேரு வச்சிருக்காங்க பாரு நாராயணணு ஏடா குடமா..எந்த நேரத்துல பெத்தானுங்களோ ராவுகாலம். அந்த மாதிரி  சொன்னாவுடனே  நாராயணனக்கு எங்க இருந்து வந்ததோ கோபம் அடிக்க போய்ட்டான்.. ஊரு பூரா ஒன்னுக்கு ஒன்பதா கதை போச்சு சில பேரு அந்த பயன் சாராயம் குடிக்குது, ஹான்ஸ் போடுது  நான் பார்த்திருக்கிறேன் ஆத்தங்கரையில மாடு மேய்க்கும் போது அப்படின்னு ஊரு ஆம்பள பொம்பள எல்லாரும் கதை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க…இந்த கலவரத்துல மெரலு வந்த பொம்பள மயங்கி கிடக்க பூசாரி ஓடிப்போய் இதுதான் சாக்குனு மார் மேல கையை வச்சி பசங்கள தண்ணி ஊத்து தண்ணி ஊத்துன்னு சொன்னாரு. ஒரே சிரிப்பு எல்லாருக்கும் அவுட்ட பார்த்தூ..

 

    புள்ளையாரு காதுக்கு விஷயம் போய் அவர் கேட்க, உன்ன பத்தி தப்பா சொன்னாப்பா அதான் அடிக்க போயிட்டேன் அப்படின்னு அவன் செல்ல பிள்ளையார் எதுவும் கேட்டுக்கல மறுநாள் திருவிழா காலயில அஞ்சு மணிக்கு எல்லா அபிஷேகம் முடிந்து அலங்காரம் பண்ணி புடவை கட்டிவிட்டு பாட்டை போட்டு வெளியே வந்த பூசாரி அவுட்டு கீழ் படுத்துக்குனு இருந்த நாய் வால மெறிக்க அது என்ன சும்மா இருக்குமா வெறி புடிச்சது பாரு வெரைக்கொட்டைய நல்ல புடச்சி கடிச்சிடுத்து..கொட்டையிலிருந்து ரத்தம் ஊத்துது. இந்த விஷயம் கேட்டு ஓடி வந்தா அவன் பொண்டாட்டி ஒரே கத்து. போற வழி எல்லாம் நாய்க்கு கச்சி கிழவனுக்கு வெரக்கொட்டையில ரத்தம் பொல பொல பொலனு ஊத்துதுனு பொலம்பிக்குனு போனா.. எலவட்ட பசங்க எல்லாம் சொல்லி சிரிக்கிறானுங்க வயசான காலத்துல எங்கனா ஏறிக்கூனு இருந்தது அவுட்டு.. அதுக்கு இப்ப அவுட்.. ஒரே சிரிப்பு ரொம்ப பெருமையா இருக்கு ..எல்லாம் சொல்லி சிரிச்சிட்டு டாமாஸ் பண்ணிக்குனு இருக்கானுங்க.. அவுட்டுக்கு நாய் கடிச்சிடிச்சாமேனு சோகமா கேக்குற  ஆளுங்க எல்லாம் எங்கன்னு கேட்க ?வெறக்கொட்டனு சொன்ன உடனே சோகம் போய் புளிய மரத்துல ஏறிக்குனு வாய்விட்டு சிரிச்சாங்க.. சின்ன பொண்ணுங்க மட்டும்” பாவம் தாத்தா” அப்படின்னு சோக பட்டாங்க.அவுட்டு கோவில படைக்குற எல்லாத்தையும் வீட்டுல இருந்து வாழ இல அறத்து எடுத்து சின்ன பசங்களுக்கு மொதல தருவாரு.

 

 

  கொடத்த தூக்க ஆசையா போன நாராயணன் கிட்ட, உன்னால்  தூக்கமுடியாது  நீ சின்ன பையன் கொடம் பலுவா இருக்கும் கொடத்த மாத்த கூடாது ஒரு நாள் பூற சாப்பிட இருக்கனும் மயக்கம் வரும் சாக்குக்கு சொல்லி தூரி வேணான்னு சொல்லிட்டாரு. நாராயணன் புரிஞ்சிக்குனு கோவத்தோட அமைதியா இருந்தான்.. திருவிழா நல்லபடி போகட்டும் எல்லாருக்கும் வச்சுக்கலாம்.. ராத்திரி சாமி ஊர்வலம் பேன்ட் செட் இல்லாம போச்சி.அஞ்சான் மொளத்தை வச்சி நல்லா  அடிப்போட்டுக்குனு கவுன்சிலர் விட்டான்ட இன்னும் ஆட்டம் போட்டாங்க பசங்க எல்லாம்.சாமி ஊர்கோலம் முடிஞ்சி குத்தாட்ட நிறுத்த வெடிங்காத்தாள 3 மணிக்கு மேல ஆச்சி

 

செவ்வாய்க்கிழமை திருவிழா முடிய  எதிர் வேற ஞாயிறு கூட்டம் நடக்குதுன்னு சொல்லி அன்னைக்கு கூட்டம் தொடங்குவதற்கு முன்னாடியே கவுன்சிலர் வந்து தொடங்கும் போதே  கேள்வி கேட்டு சண்டை வந்தது. ஒரு வழியா கணக்கு முடிந்து போய் மேற்கொண்டு 40 ஆயிரம் இடிக்குதுனு  சொன்னா வாசு…கோயில் அக்கவுண்ட்ல காசு இல்ல. பூ ஜோடிப்பு, பம்மைகாரங்க, கூத்துக்காரங்க நிக்கிறாங்க..யாருன வச்சிருந்த  தாங்க சும்மால இல்ல வட்டிக்கு தான் யாருக்கிட்டயும் எந்த பதிலும் இல்ல …வெடுக்குனு வாசு பாக்கெட்ல இருந்து கைவிட்டு பெரிய கட்டாய் எடுத்து 40 ஆயிரத்தை எண்ணி மீதி காசை பாக்கெட்ல போட்டு என்கிட்ட 40000 இருக்கு அடுத்த வாட்டி பிரிவு போடும்போது 40 ஆயிரத்தை வட்டியோட கொடுத்துடுங்க அப்படின்னு சொல்லி பெருந்தன்மையா வச்சா காச.. வெடுக்குனு எங்க இருந்து வந்ததோ ஞாபகம் புடிச்சான் கோழிய

 

 

அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி முனியம்மா பொண்ணு கல்யாணத்துக்கு ஐம்பதாயிரம் கல்யாண கடனா வங்குனாங்க. அதை அவ பொண்ணு முந்தாநேத்து காலையில கூடுத்தாங்களே வட்டியோட அந்த அம்பதாயிரம் எங்க அப்படின்னு கேட்டான்.முனியம்மா பாவம் புருஷன் வீட்டு போய்ட்டான் மூணு பொண்ணு ஓத்த பொம்பள படிக்க வச்சி கரைச்சேர்த்தா.. கடைசி பொண்ணு கல்யாணத்துக்கு மட்டும் ஐம்பதாயிரம் கோயிலுக்கு காசுல கடை வாங்கி இருந்தான் அடைக்காம போயிட்டா..  அந்தக் கடன என்னிக்கா இருந்தாளும் அடைச்சு தான் ஆகணும் அப்படின்னு அவ பொண்ணு  வட்டியும் முதலமா சேர்த்து கொடுத்தா.

கோயில் காசு அம்பதாயிரம் கொடுத்து அஞ்சு வருஷம் மேலாவது இப்பவர யாருக்கிட்டயும் அந்த கணக்கு சொல்லவே இல்ல

 

 

அப்புறம் கேட்டான் இன்னொன்னு எல்லாரும் இல்லாதப்பா குடை செய்யற இடத்துல பேங்குல காசு 92,000 இருக்குன்னு கவுன்சிலர் சொன்னது எப்படி கேட்டான் தெரியல.. பேங்க் காசு 92,000 இருக்கு இப்பவே வாங்க பேங்குக்கு போலாம் எனக்கு தெரியும் நீங்க பேசுனத கேட்ட அப்படின்னு சொன்ன.. உடனே கவுன்சிலருக்கு மூஞ்சி இல்ல போட்டா கொக்கு வெடிய கூட்டத்துல…கொஞ்ச நேரம் முன்னாடி தான் வாசு பேங்க் அக்கவுண்ட்ல காசு இல்ல என் காசு தர சொன்னத வச்சு புடிச்சான்…

 

அப்போ இன்னொரு கணக்க கேட்டான், இந்த வாட்டி கோவில்ல நேந்துவிட்ட வெட்டுன பத்து கெடா ஏலத்துல விட்ட  காசு கணக்கு வரலையே. கவுன்சிலரோட பேச்சு திறமை  “நீயே பார்த்துக்க முன்னாடி இருந்து ”சொல்ற பேச்சு திறமை எல்லாம் இப்ப இல்ல.. ஊருக்குள்ள எல்லாம பேச ஆரம்பிச்சாங்க, அந்த ஆளு ரோடு போட்டு, தண்ணி இல்லாத இடத்துல தடுப்பணை கட்டு அப்படின்னு கவர்மெண்ட் ஏமாத்தி சேர்த்து செத்து எல்லாம் பத்தலனு கோயில் காசு வேற.. திருவிழா முடிஞ்சுஒரு வாரத்துல அவன் பொண்ணு கார் டிரைவர் ஆண்டி புள்ள சரவணன் ஓட 50 சவரன் நகை பத்து லட்சம் காசு அப்படின்னு எடுத்துகிட்டு ஓடிட்டா,அடுத்த வருஷம் ஊர் ஆலமரம் நல்லா பச்சை பசேல்னு சூரிய வெளிச்துல மின்னிக்கிட்டு இருந்துச்சு..

 

 

 

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு