வாசகர் பகுதி

 

வாசகர் பகுதி

     கூதிர் இணைய இதழ் நான் முறையாக முழுவதுமாக படித்து வரும் இதழாக இருந்து வருகிறது. இதன் முதல் இதழின் முகப்பில் இதழின் பொறுப்பாசிரியர்களுள் ஒருவராகிய மோகன் குறிப்பிட்ட அடிகள் "எழுதுவதை தள்ளிப் போடாதீர்கள், எண்ணங்கள் விரிவடைய எழுதுங்கள்" என்னும் தொடர் என்னை திரும்பிப் பார்க்க வைத்தது. அத்தொடர் தொடர்ந்து இதில் படைப்புகளை வழங்கி வரும் படைப்பாளர்கள் தொடர வழி வகுத்திருக்கலாம். குறிப்பாக எனக்கு கவிஞர்களை பற்றி கவிதைகளைப் பற்றி எதுவும் தெரியாது, ஆனால் தினேஷ்குமார், வேலாயுதம் பொன்னுசாமி, றாம் சந்தோஷ், திரமிளன் முதலானோர் படைப்புகள் பிடிக்கும்

 

   அத்தோடு விசித்திரனின் சத்யா தொடர் எனது சிறுவயது நினைவுகளை கிளறுவதாக உள்ளது. குறிப்பாக இரண்டாம் இதழில் சிறுவர்களின் செயல்பாடு எனது பள்ளிப் பருவத்தை நினைவூட்டியது. அழகுராஜ் கட்டுரைகள் பெரும்பாலும் நான் மறுவாசிப்பிற்கு உட்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. மேலும், இதழில் வாசகர் பகுதியில் இடம்பெறும் அரம்பனை உற்று நோக்குவதுண்டு. மேலும், வரும் இதழில் மயிர் விடு தூது பற்றிய அரம்பனின் அறிமுக கட்டுரை எதிர்பார்ப்பை சற்று அதிகரித்திருக்கிறது. மயிர் விடு தூதை எதிர்நோக்கி உள்ளேன்.

   ஒவ்வொரு இதழிலும் இடம்பெறும் எடுத்தாலும் பகுதி மிகுந்த சிரத்தையுடன் நேர்த்தியாக குறிப்பிட்ட பொருண்மையில் இடம்பெறுகிறது. அது  நான்  விரும்பி வாசிக்கும் பகுதியாகும்.

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு