மாயோன் தொழில் பகுதி-2
மாயோன் தொழில் பகுதி-2
மூன்று நாட்களாக இடது கால் நடுவிரல்
துடித்துக் கொண்டிருப்பதற்கான காரணத்தை
காட்டில் தேடிக் கொண்டிருந்தான் மேய்ப்பன்
விரைத்து போன பிணத்தை காகங்கள் கொத்தித் தின்னும் சத்தம்
காதைக் கீறுகிறது
காய்ந்து போன குருதி வாடையில்
ஊமைப் பொந்து வீங்கி கொண்டிருப்பதை
கண்களால் போர்த்தினான்
கையில் கப்பி கற்களோடு
காலை நகர்த்தி பொந்துக்குள் புகுந்தான்
ஊமைப் பொந்து பேச
தொடங்கியது
(தொடரும்.....)
-ஆர்.கே.சுரேஷ் லலிதன்
Comments
Post a Comment