கூதிர் பருவம் – 3, மார்ச்- 2024

கூதிர் பருவம் – 3, மார்ச்- 2024

                தொகுப்பாசிரியர் பகுதி                        
கடந்த மாத இதழ்களைப் போலவே இம்மாத இதழும் அருமையான படைப்புகளைத் தாங்கி வெளிவருகிறது. "வாழ்க்கை என்பது துன்பமயமானது" என்ற உண்மை புத்தர் எளிதில் சொல்லிச் சென்று விட்டார். இந்த சுரமற்ற வாழ்க்கையில் பீடிக்கப்பட்டு இருக்கும் மனிதனின் உளகிடக்கைக்கு களிம்பாய் இராகுலன் மற்றும் குரு கவிதைகள் அமைந்துள்ளன. எழுத்தாளர்களின் சிந்தனை மனம் அரசியல் காரணிகளால் எவ்வாறெல்லாம் ஊனப்படுத்தப்பட்டு சிதைக்கப்படுகிறது என்பதை அப்பட்டமாக 'எழுத்தாளரால் எளிது' என்ற நா. அருணின் பதிவு அமைகிறது. குற்றவுணர்வினை திரைப்படங்களை மையமிட்டு பாரதியின் வரிகளோடு கலந்து கவிதையும் உரைநடையுமாக ஒரு சேர கட்டுரை வார்த்த தினேஷ்கண்ணன் கட்டுரை இம்மாத இதழின் மேன் ஆஃப் தி மேட்ச். பள்ளிப்பாடத்தோடு பாடத்தோடு மறந்த அவ்வையை நீலி இதழில் வெளியான களி நெல்லிக்கனி என்ற தொடர்கட்டுரை மூலம் கவிஞர் இசை இருத்தி வருவதையை வெளிக்கொணருகிறது செல்வா அவர்களின் கட்டுரை. வழக்கம்போல் வாசிப்புக்கு சலிப்பு தட்டாத அரா மற்றும் திரமிளன் கவிதைகள், இன்னலில் இன்பம் காணும் 'சத்யா' தொடர்கதை பேறு இல்லாத பெண்ணின் துயரத்தை பேசும் பெருமாள் முருகனின் மாதொருபாகன் பற்றி கூறும் ஶ்ரீகாந்த் கட்டுரை கு.ப.சேது அம்மாளின் நாட்டுடைமையாக்கப்பட்ட பகுதி என இம்மாத இதழும் படைப்புகளால் நிறைந்துள்ளது. எடுத்தாளப்பட்டப் பகுதி, வாசகர்கள் பகுதி என இம்மாத இதழ் வெளியாகியுள்ளது. இம்மாத இதழ் வெளிவர உதவி செய்த ஸ்லைடு சங்கர், முகப்பு ஓவியம் வரைந்த அ.திலகக்கனி ஆகியோர்க்கு நன்றி 

தொகுப்பாசிரியர்கள்

ரா.அழகுராஜ்

ஜெ.மோகன்

.கிரண்குமார்

.தணிகைவேலன்

முகப்போவியம்

                         அ. திலகக்கனி


                    உள்ளடக்கம்             

                

  இரா. இராகுலன் கவிதைகள்


 இசையின் அவ்வை - செல்வா


 எழுத்தாளராதல் எளிது! -அருண்.நா


நேசி! –இளவெயினி


சத்யா – விசித்திரன்


 அந்த இரண்டு குவளைகள் -திரமிளன்


 ஐந்தாவது முத்திரை -கி. தினேஷ்கண்ணன்


 மனப்பிதற்றல் -குரு


 பூவரசு பேசும் பூவை ரசம் -ஶ்ரீகாந்த் ராஜ்குமார்


 அரா கவிதைகள்


 எடுத்தாளப்பட்ட பகுதி - புயல் ஓய்ந்தது -கு.ப.சேது அம்மாள்


 வாசகர் பக்கம்


இதழில் வெளியாகும் படைப்புகளுக்கு அதன் படைப்பாளர்களே பொறுப்பிற்குரியவர்கள்.


குறிப்பு

    இந்த மாத இதழை பெண்கள் சிறப்பிதழாகக் கொண்டு வர முயற்சி நடந்தது. அந்த முயற்சியின் போது வந்த படைப்பு ஒன்றை செம்மைப்படுத்தச் சொன்ன இதழின் தொகுப்பாசிரியர் ஆணாதிக்க மனநிலையுடன் பெண்ணியம் என்ற போர்வைக்குள் நுழைந்து கருத்து தெரிவிப்பவரென சாடப்பட்டார். இதற்கு மத்தியில் இதழ்ப்பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. படைப்புகள் மற்றும் இதழில் வெளியான படைப்புகள் குறித்த கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி 

 koothirmagazine@gmail.com 


Pdf வடிவில் இதழை வாசிப்பதற்கு👇

கூதிர் பருவம் – 3, மார்ச் 2024


கூதிர் இதழைப் பக்கத்தைத் திருப்பி வாசிக்கும் வசதியுடன் வாசிக்க👇🏽👇🏽


https://online.fliphtml5.com/mjgzp/tfvx/


தொடர்புக்கு

மின்னஞ்சல் முகவரி 

koothirmagazine@gmail.com


முதல் பத்து இதழ்களுக்கு


புலனம் மற்றும் அலைபேசி 

88073 39644

63699 12549

95973 81055

98949 44640

 

 

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு