இசையின் அவ்வை - செல்வா

       இசையின் அவ்வை -  செல்வா
 

                              கவிஞர் இசையின் அவ்வை எழுத்துகளை உற்று நோக்கினால் இன்றைய நவீனயுக அதியனாகவே காட்சியளிக்கிறார். அவ்வை மற்றும் அவரது படைப்புகள் குறித்து நீலி மின்னிதழில் எழுதி வரும் கவிஞர் இசை, சில இடங்களில் குழந்தையாக, ரசிகனாக, வாசகராக, எழுத்தாளராக, ஆய்வாளராக பரிணமிக்கிறார். 

                களிநெல்லிக்கனி தொடரின் அறிமுகத்திற்கு அவர் இட்டத் தலைப்பான வாயிலில் எட்டு அவ்வைகளைக் குறிப்பிடுகிறார். இந்த குறிப்பு தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனின், ‘அவ்வையார் படைப்புக் களஞ்சியம்’ என்கிற நூலில் இருந்து எடுத்தாளப்பட்டது என்று சொல்லும் நேர்மையில் ஆய்வாளராகிறார் கவிஞர் இசை. 

                  அவ்வை குறித்தான தனது எழுத்துக்கள் நவீன வாசகர்களை முன்னிலைப்படுத்தியது என தன்னிலை விளக்கமளிப்பது. வாசகர் மேல் இவர் வைத்திருக்கும் பேரன்பை உள்ளுறையாக உணர்த்துகிறது. 

                    ஏதோ ஒரு வகையில் கவிஞரின் வாழ்வில் மாயங்களைச் செய்திருக்கிறாள் அவ்வை. முதல் கவிதை, முதல் உரைநடை என அழகாய் விரிக்கிறாள் அவ்வை. 

                    தமிழரின் அவ்வையாக கே. பி. சுந்தராம்பாளை குறிப்பிடும் பாங்கு மனதிற்கு நெருக்கமானது. கே. பி. சு மட்டுமல்ல அவர் பாட்டி பேச்சியம்மாளும் அவ்வை தான் என மொழிவது பண்பாட்டு நகல் எனத் தரும். பாணர் குடி அவ்வையில் தொடங்கி தரிசனப் பத்து எழுதிய அவ்வை வரை எழுதியுள்ள பாடல்களின் ரசத்தை தனது எழுத்துகளில் தர இசைவாய் இருக்கிறது என இசைந்த இருக்கிறார் கவிஞர் இசை. 

கைகவர் முயக்கம்:

                           இத்தொடரின் தொடக்கத்தில் உரையாசிரியர்களின் பணியை மெச்சியும் அவர்களது உடைமை உணர்வை அடிக்கோடிட்டும் உரை மீதான தன் மிகுதியால் அழுத்தப் பிணைந்த கைகளின் மயக்கம் “கைகவர் முயக்கம்” என்று அவ்வையின் இரு சொற்களை சிலாகித்து பேசுகிறார். 

                   இத்தொடரில் அவ்வையைத் தாண்டி சங்க இலக்கியப் பாடல் செய்திகளை ஆங்காங்கே தரித்துக்கிறார். வெள்ளி வீதி, ஆதி மந்தி போன்ற புலவர் பெயர்கள் வேறு புலவரால் பாடலில் சுட்டப்பட்டிருத்தல், மூன்று குட்டிகளை என்ற பெண் புலியின் மீதான ஆண் புலியின் கடமையாகும் கலந்த காதல் நேசம், வேங்கையின் இருபொருள் முனை என்று ஒரு கணம் நிதானிக்க வைக்கிறது இப்பதிவு. 

                              கூத்து மாலை என்று அவ்வைப்பாடலில் சுட்டப்பட்டுள்ளதை வெண்ணிறக் கொடி மலர் என்று எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை வழி நிறுவுகிறார் இசை. 

                        பேய் கண்ட கனவில் என்ற அவ்வைத் தொடரை இப்படியெல்லாம் புரிந்துகொள்ளலாம் என்னுமளவிற்கு நகை கலந்த சிந்தனை வெளிப்படுத்துகிறது. 

               பேய் கனவு காணுமா அக்கனவு இனியதா (அ) கெட்டதா? பேய் கனவில் அதைவிட கொடிய பேய் வருமோ? என்ற புனைவு ஐயங்கள் இன்றைய மழலையர் விரும்பும் சித்திரங்களை நினைவூட்டுகிறது. 

                      இவ்வளவில் மட்டுமில்லாது, பாரி, கபிலர், நகுலன், தமிழினி எழுத்தாளர்கள் பொற்கொல்லரின் உழைக்கும் ஓசை பலரையும் அறிமுகம் செய்கிறார் கவிஞர். 

   

உன் ஆசைக்கு யாருமில்லை:   

                            இத்தொடர் அவ்வையின் காதல் பாடல்களை நமக்கு பல்வேறு கோணங்களில் காட்டிச் செல்கிறது. ஆலமரத்து பஞ்சாயத்துகள் எல்லாம் இப்பொழுது தோன்றியவை அல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன்னே சொல் தவறாத கோசர் மரபில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று அவ்வைப் பாடலின் வழி விளக்குகிறார் கவிஞர். 

                         தலைவியின் மெலிவு என்பது சங்கப்பாடல்களில் காணலாம் உள்ளுறைகளின் பெட்டகம் ஒரு பாட்டில் தலைவி மெலிவதும் அன்னை வருந்துவதும் அகவன் மகளே குறியின் வழி தோழி தலைவியின் காதல் உணர்த்துவதும் பாடலின் அழகு மற்றும் ஆழம் இப்பாடலில் கவிஞர் இசையின் கற்பனா நிறத்தில் மொழிந்த இருந்தால் தனிச்சிறப்பாக அமைந்திருக்கும். 

                    எங்கும் நிறைந்த காதலுக்கு ஆயிரமாயிரம் ரூபங்கள், அந்தக் காதலின் தீவிரத்தை தாங்கவொனா தலைவியின் அலறலை பதிவு செய்யும் அவ்வையின் அழகான குறுந்தொகை 25 ஆம் பாடல். 

                       இரவு நேரத்தில் தனிமைத் துயரில் தத்தளிக்கும் தலைவி அமைதியில் உறங்கும் ஊரைப் பார்த்து முட்டி முட்டி எழுப்புவேனா? தாக்கி வருந்துவேனா? வெறிக் கொண்டு கத்துவேனோ என்று புலம்பும் சொற்கள் பெண்ணின் உச்சபட்ச அமைதியின் ஆங்காரத்தை வெளிப்படுத்தும். 

                  முலைச்சிறப்பை எப்படியெல்லாம் சமூகம் பார்க்கிறது என்பதை முலையிடை முனிநர் என்னும் தொடரின் வழி சொல்லிச் செல்கிறார் கவிஞர். 

                 இத்தொடரில் தலைவன் – தலைவி – தோழி – செவிலி – பரத்தை என பல்வேறு பரிமாணங்களுக்கிடையில் காதல் ஒளியை பரவச் செய்த கவிஞர் இசையின் கருத்துக்கள் படிக்க படிக்க அவ்வை தூண்டும் என்பதில் ஐயம் எழவில்லை. 

                   காதலர் கைப்பிடித்து நடக்கும் காதல் இருவரையும் மாறிமாறிக் கண்டு அருகில் சிரிக்கிறது என்றும் இசையின் வரிகள் காதல் மீதான தரிசனத்தை வாசகர்களுக்கு தானாகவே எழச்செய்கிறது. 

         

தொழுது ஆற்றா தியாகம்:

                            சென்ற தொடரில் அவ்வையின் அகம் பாடிய கவிஞர் இத்தொடரில் புறம் பாடுகிறார். புறத்தில் அவ்வை அதிகம் பாடியது அதியனைத்தான். 

                      அவ்வை – அதியமான் – நெல்லிக்கனி என்றும் சங்கிலித்தொடரின் பிண்ணனியில் அத்தனை எத்தனை கதைகள் விரிந்து செல்கிறது. இளமை வரத்தையருளும் நெல்லியின் பின் விட்டமின் சி மட்டுமல்ல 2000 ஆண்டுகால தமிழும் அவ்வையும் அதியனும் பொறுத்திருக்கிறார்கள். 

                      அதியனின் மேல் தீராப்பற்று கொண்ட அவ்வை தன்னைச் சோதிக்கும் நிலையாக பரிசில் தீராத அதியனைப் பார்த்து “எத்திசை செல்லினும் அத்திசைச் சோறு” என்று கிளம்பி விடுகிறாள். 

                              தனக்கென்று பாராது நெல்லியின் பயனையும் சொல்லாது ஈந்த அதியனைச் சிவனுக்கும் ஒப்பாக்கினாள். பாணர் குல விறலி அவ்வை. 

 அவ்வை, 

               அதியனின் உடன்பிறப்பா? 

               அவைப்புலவரா? 

                மதிப்புமிகு உறவா? 

                கூடிக் கள்ளருந்தும் குடித் தோழமையா?

என்று அவ்வையைப் படிப்பவர்களுக்கு எழும் கேள்விகளுக்கு அவளே பதிலும் சொல்கிறார். மழலை மொழி மீது தந்தைக்கிருக்கும் வாஞ்சைப் போன்றது அதியன் – அவ்வை உறவு என்று கவிஞர் சொல்லிக் செல்லும் முறை சிறப்பிற்குரியது. 

                             அதியனின் வலிமை, வீரம், கொடை போன்ற பண்புநலன்களை அவ்வை தனது பாடல்களில் கொண்டாடிக் தீர்ந்திருக்கிறார்.

                      ஒரு நாளைக்கு எட்டுத்தேர் செய்யும் தச்சன் ஒரு மாதம் சிரத்தையோடு ஒரு தேர்க்கால் செய்தால், அது எவ்வளவு வலிமையோடு இருக்குமோ? அவ்வளவு பலம் பொருந்தியவன். முடிவில் போதும் காற்றுச் கூட போர்முரசாக அதியனின் செவிகளில் விடுமாம். பேராற்றல் பொருந்திய அதியன் எளியவர்க்கு நீர் துறையில் இளைப்பாறும் பெருங்களிறு ஆனால் பகைவருக்கோ கொளல் கொடுங்கள் இரு தொண்டைமானிடம் தூது சென்ற அவ்வை அதிகனின் படைக்கலங்களை வஞ்சப்புகழ்ச்சியாக சொல்லி பயமுறுத்தி இருக்கிறாள். அது என்னை மட்டுமல்லாமல் பாசத்தோடு அவன் மகன் பொருட்டெழுதியின் இளமை வளத்தையும் போர் திறத்தையும் ஒருசேர பாடியிருக்கிறாள். இப்படி சுவாரஸ்யமாக ஔவை அது எனின் தொடர்பை நட்பை நேசத்தை பாராட்டும் கவிஞர், அன்றைய போறையும் இன்றைய போரையும் ஒப்பிட்டு வருந்துவதை கட்டுரையின் நோக்கமாக நிறைவு ஆகிறது. 

தனிப்  பாடல்கள்

      அவ்வை என்கிற பெயரைச் சுற்றி ஆயிரம் கதைகள். ஆதி பகவன் மகனாக பாணர் வீட்டில் பிறக்கும் அவ்வையை பகவன் பாணல் வீட்டிலேயே விட சொன்னதால் அன்னை மனம் கலங்க குழந்தை ஔவை வெண்பா பால் கலக்கத்தை நிவர்த்தி செய்கிறாள். வெண்பாவில் இடம்பெறும் முட்ட முட்ட பஞ்சமே என்னும் மரியே கவிஞர் சிலாகிக்கும்போது பஞ்சம் நம் கண் முன்னே நிழலாடுகிறது. அவ்வையின் சமகாலப் புலவரான கம்பர் சோழனின் அவையில் மதிப்பும் செல்வமும் புகழும் நிரம்ப இருந்தவர், அவரை அவ்வை எல்லா வளமும் சூழ்ந்த விரகர் என்று கூறுவது வியப்பளிக்கிறது. எவையெல்லாம் அழகு என்று நாம் நினைக்கிறோமோ அதிலிருந்து மாறுபட்டு அழகுக்கு ஒரு பட்டியல் இடுகிறார்

விரதம் இருந்து இளைத்த மேனி

கொடுத்து இளைத்த வள்ளல்

வீரன் வாங்கிய வடு

வீழ்ந்த வீரனை நடுகல்

இத்தனை அழகையும் அர்த்தமாக சொல்கிறாள். அவ்வை அழகை மட்டும் அல்ல அன்பில்லா பெண்களைப் பேய் என்றும் சாதி இருக்கிறாள். அவ்வையின் நேர்மை துணைச்சலுக்கு மற்றும் ஒரு சான்று பாடல் சோழ நவையில் அவ்வையும் துணிமணிகளும் வீட்டிற்கு அரசனின் கவனம் ஆடைகளில் ஆடம்பரம் மீது குவிந்து இருக்க கண்டிப்புடன் பாடுகிறாள். எவ்வளவு பெரிய விலை கொடுத்து ஆடை வாங்கினாலும் கிழிந்து விடும் ஆனால் என் பாட்டு என்றும் கிழியாது என்று சொல் சாட்டை சுழற்றுகிறார். இங்கனம் பாடும் அவ்வை பசியை பற்றியும் பாடி இருக்கிறாள். என்று கவிஞர் நவிழும்போது அப்பாடல்களில் மனம் பகைக்கிறது. அன்பற்ற ஒருவனுக்கு மான் போன்ற ஒருத்தையை இணையாகச் சேர்ந்த பிரம்மனின் தலைகளை கிள்ளி எரிய வேண்டும், தீவினையை விட்டு பொருள் ஈட்டல் வேண்டும், நம் உறவு ஒன்று மரணிக்கும் போது, நம்முடைய ஒன்றும் சேர்ந்தே மடிகிறது. உலகிலேயே பெரியது தொண்டர் உள்ளம் என்று தனிப்பாடல்கள் ருசியை விருந்தாக்குகிறார் கவிஞர். 

      குலமகளையும் வேசிமகளையும் ஒரு செய்தியில் வேறுபடுத்துகிறார். குலமகள் கூசி தன் கற்பில் நிலைக்க வேண்டும். வேசி கூசினால் கெட்டொழிவாள்‌ என்று ஆகப் பெரும் கவிஞர்கள் பேசக் கூசும் கருத்தை நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல இலேசில் கூறிச் செல்கிறாள் அவ்வை.

              இலக்கணம் கற்ற கவிகளுக்கும் மூடருக்கும் தன் பாடலில் உவமை சொல்லும் அவ்வையின் சொல்லாற்றல் அபாரம். கவிகளின் சொல் தேடலை கமலத்தை நாடிச் செல்லும் வண்டு. மூடனின் சொல் தேடல் தலைக்குறை கமலத்தை நாடிச் செல்லும் ஈ

             பொய்யிற்கும் புலவருக்குமான உறவைப் பாடும் அவ்வை உண்மையின் சாரத்தை உணர்த்துகிறார்.

காதலியின் ஊடலை தீ தணிக்கும் காதலன் அவளை வர்ணிக்க போர்க் கருவிகளை உவமிப்பதும் வள்ளலுக்குப் பொன் துரும்பு என்று பாடுவதும் அவ்வையின் தனிச்சிறப்பு

           கவிஞர் இசை களிநெல்லிக்கனி வாயிலில் தொடங்கிய இத்தொடர் தனிப்பாடல் வரை வடிவம் பெற்று கவிகளின் மேல் கொண்ட காதலையும் அவ்வை மேல் கொண்ட நேசப்பற்றையும் தெளிவாக சொல்லி வருகிறது.

            ஒவ்வொரு தொடரிலும் அவ்வை மட்டுமல்லாது சங்ககாலம் முதல் நவீன காலம் வரை பரவியுள்ள காலக் கவிஞர்களையும் செய்திக்குறிப்புகளையும் தாங்கிய நவீன வரலாற்றுத் தொடராக அமைந்திருப்பதில் ஐயமேதுமில்லை.

        தமிழ் யாவரையும் எத்துறையைச் சார்ந்த வரையும் தன் ஆளுமையால் வசிகரிக்கும் என்பதற்கு சான்று மருத்தாளுநர் சத்தியமூர்த்தி கவிஞர் இசையாக மாறியிருப்பதே‌

              உள்ளன்போடும் உணர்வோடும் ஆய்வுப்பார்வையோடும் அவ்வையை அணுகிவரும் கவிஞர் இசை அவர்களுக்கு செல்வாவின் வணக்கமும் வாழ்த்தும்

வாழ்க! அவ்வை வளர்க இசைப்புலமை! 

எடுத்தாளப்பட்டவை:

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு