மனப்பிதற்றல் -குரு

மனப்பிதற்றல்

                                        -குரு




இரவாத

தனிமையில்

சுட்டுக்கொண்டிருக்கும்

தேகமும்

வான்திறந்த

மேகம் கானகமாய்

மாறிக்கொண்டே இருக்க

ஒளிந்து வழிந்து

கொள்ளும் அரூப

உயிர்களும்

மீண்டும் மீண்டும்

தோற்று போகும்

ஒவ்வொரு இரவும்

மயக்கம் தெளிந்த நிலையில்

இருட்டில் வாழும் மின்மினியும்

நான் ரசிப்பதை

வைத்துக்கொள்ளும் ஆழ்மனங்களும்

என்ன செய்து என்னை

நான் அடைவது

இடறித் தவறி

சுற்றும் முற்றும் 

பிதற்றி

வழிபோக்கும் வர்ண பூக்கள்

என்னை சூழ்ந்தாலும்

அவற்றைப் பார்க்கவோ

ரசிக்கவோ விநாடி

இல்லை காலம்

என்னை காலம் காலமாய்

தின்று கொன்று

குவிக்கிறது ஒரு

சிதறிய இடத்தில்

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு