கூதிர் பருவம் –7 ஜூலை- 2024

  

கூதிர் பருவம் –7 ஜூலை- 2024




தொகுப்பாசிரியர் பகுதி


           ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் வரவேண்டிய  கூதிர் ஏழாவது இதழ் மாத இறுதியில் வெளியாகிறது.  இவ்விதழில் திருநங்கையர், சிறுகதைகள், கவிதை, திரைப்படம், சிற்றிலக்கிய முன்னுரை என பல்வேறு வகைப்பட்ட கட்டுரைகளோடு தொடர்கதை மற்றும் கவிதைகளும் வெளியாகிறது. 

   புதுவை பகுதியைச் சார்ந்த திருநங்கைகளுடன் நிகழ்த்திய உரையாடலின் விளைவாக எழுதப்பட்ட பரசுராமனின் கட்டுரை, சாகித்ய அகாதமியின் 2024ஆம் ஆண்டு  யுவ புரஸ்கார் பட்டியலில் இடம்பெற்ற  கவிதை நூல்களை பற்றிய பதிவு, கூதிர் ஐந்தாம் இதழில் வெளியான பிரபஞ்சனின் ‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’ சிறுகதை தொடர்பான வாசக அனுபவம் வெளியானது. அதன் தொடர்ச்சியாகவே கோ.வெங்கடாசலத்தின் ‘யார் தான் பாவம் இல்லை’ கட்டுரை இவ்விதழில் வெளியாகிறது. கல்விப்புலம் மற்றும் மாணவர் மனநிலை, கிறிஸ்தவத் தொன்மம் ஆகியவற்றை முன் வைக்கக்கூடிய கட்டுரை இவ்விதழுக்கு வலு சேர்க்கிறது. மேலும் மதில் திரைப்படம் பார்த்த அனுபவம், மயிர் விடு தூது என்கிற சிற்றிலக்கிய படைப்பை அறிமுகப்படுத்தும் முகமாக அரம்பனால் எழுதப்பட்ட ‘நானும் மயிரை விட்டேன்’ கட்டுரையோடு ஏ.மதன், தீனன், நிலா, இலக்கியா வெங்கடேசன், அரா ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. வழக்கம் போல விசித்திரனின் சத்யா தொடர்கதை வெளியாகியுள்ளது.எடுத்தாளப்பட்ட பகுதியில் மா. ராசமாணிக்கனாரின் புதிய தமிழகம் நூலிலுள்ள வரலாறு உண்டாக்கிய நாட்டுப் பிரிவுகள் என்ற பகுதியை பயன்படுத்தியுள்ளோம். இவ்விதழின் முக்கிய பகுதியாக அமைவது ‘’மயிர் விடு தூது’’ என்கிற சிற்றிலக்கிய படைப்புக்கான முன்னுரை ஆகும். கூதிர் இதழ் மரபிலக்கியத்திற்கும் இடமளிக்கிறது என்பதை பறைசாற்றும் விதமாக அக்கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. வரக்கூடிய பிந்தைய இதழ்களில் மயிர் விடு தூது என்ற படைப்பு இடம்பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

         கூதிர் முதல் இதழுக்கு கவிதை அனுப்பிய றாம் சந்தோஷ் மற்றும் மூன்றாவது இதழுக்கு கவிதைகள் அனுப்பிய இரா.இராகுலன் ஆகியோர் இந்த ஆண்டு யுவ புரஸ்கார் பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றனர். அவர்களுக்கு கூதிர் இணைய இதழ் சார்பாக வாழ்த்துகள். 

-தொகுப்பாசிரியர்கள்

 


தொகுப்பாசிரியர்கள்

ரா.அழகுராஜ்

ஜெ.மோகன்

ஆ.கிரண்குமார்

ச.தணிகைவேலன்

  

முகப்போவியம்

மு.உமாசங்கர்

 

 

உள்ளடக்கம்


ஏ.மதன்கவிதைகள்

புதுச்சேரி திருநங்கையரின் வாழ்வியல் சடங்குகள்

                                                                                                     -நா. பரசுராமன்

நாடகத்தின் நான்காம் காட்சி –தீனன்

நானும் மயிரை விட்டேன் -அரம்பன்

இலக்கியா வெங்கடேசன் கவிதை

2024 யுவ புரஸ்கார் விருதிற்கான இறுதிப்பட்டியலில் கவிஞர்கள்                                                                                            -அழகுராஜ் ராமமூர்த்தி

நிலா கவிதைகள்

மதில்  -அழகுராஜ் ராமமூர்த்தி

சத்யா –விசித்திரன்

யார் தான் பாவம் இல்லை  -கோ. வெங்கடாசலம்

அரா கவிதைகள்

எடுத்தாளப்பட்ட பகுதி (புதிய தமிழகம்  -மா.ராசமாணிக்கனார்)                 


இதழில் வெளியாகும் படைப்புகளுக்கு அதன் படைப்பாளர்களே பொறுப்பிற்குரியவர்கள்.


Pdf வடிவில் இதழை வாசிப்பதற்கு👇

கூதிர் பருவம் -7


தொடர்புக்கு

மின்னஞ்சல் முகவரி 

koothirmagazine@gmail.com


முதல் பத்து இதழ்களுக்கு

புலனம் மற்றும் அலைபேசி 

88073 39644

63699 12549

95973 81055

98949 44640

 

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு