இலக்கியா வெங்கடேசன் கவிதை


அப்பா கட்டிய பாசக்கயிறு

முடிச்சுகள் பெருகி

மேற்சுவரிலேறி

தூக்குக் கயிறாகிறது

 

ஒவ்வொரு முடிச்சுக்குள்ளும்

தன்னிச்சையான முடிவுகளை 

அடுக்கி வைக்கும் மகள்

தன் காதலனின் பெயரைச்

சொல்லிய மாத்திரத்தில்

வளைவேறி ஆடுகிறது கயிறு

-இலக்கியா வெங்கடேசன்

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு