கூதிர் பருவம் – 6 ஜூன்- 2024
கூதிர் பருவம் –6
தொகுப்பாசிரியர்
பகுதி
காலதாமதமாக கூதிர் ஆறாவது இதழ் வெளியாகியுள்ளது.
இந்த இதழில் சுற்றுச்சூழலுக்கு முதன்மை இடம் கொடுக்கும் விதமாக கானகன் நாவலில் ஆழ்நிலைச்
சூழலியலைப் பொருத்தியிருக்கும் கோ.வெங்கடாசலம் கட்டுரை, பிழைத்தல் மற்றும் வாழ்தலுக்கு
இடையிலான நுணுக்கமான வேறுபாட்டைக் கூறும் ஜியோடாமினின் பிழைத்தல் அல்ல வாழ்தல் தொடரை அறிமுகப்படுத்தும் கட்டுரை ஆகியன
வெளியாகியுள்ளன. ம.வீ.
கனிமொழி, ர. பிரகாஷ் ராஜ், திரமிளன்,
அரா ஆகியோரது கவிதைகளோடு விசித்திரனின்
தொடர்கதையும் “கைரேகைக்
கொடியில் கனவுப்பூ” என்ற கவிஞர் பா.இரவிக்குமாரின் கவிதைத் தொகுப்பை மையமிட்டு அழகுராஜ் எழுதிய கைக்குள் பிரியும் ரேகைகள் கட்டுரையும் இதழில் இடம்பெற்றுள்ளன.
திரு.வி.கவின் இந்தியாவும் விடுதலையும் என்ற நூலிலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ள எடுத்தாளப்பட்ட
பகுதியில் எங்களுக்கு சில முரண்பாடுகள் இருப்பினும் முக்கியத்துவம் கருதி அதனையும்
சேர்த்துள்ளோம்.
-தொகுப்பாசிரியர்கள்
தொகுப்பாசிரியர்கள்
ரா.அழகுராஜ்
ஜெ.மோகன்
ஆ.கிரண்குமார்
ச.தணிகைவேலன்
முகப்போவியம்
அ.
திலகக்கனி
உள்ளடக்கம்
குழம்பும்
எழுத்துகள் - ம.வீ. கனிமொழி
சூழலியல் திறனாய்வு நோக்கில் கானகன் நாவல்
கால்வாய் நீர் -ர.
பிரகாஷ் ராஜ்
கைக்குள்
பிரியும் ரேகைகள் -அழகுராஜ் ராமமூர்த்தி
சமகால பிழைப்பும் வாழ்வும் -அழகுராஜ்
(இந்தியாவும்
விடுதலையும் -திரு.வி.க)
இதழில் வெளியாகும் படைப்புகளுக்கு அதன் படைப்பாளர்களே பொறுப்பிற்குரியவர்கள்.
Pdf வடிவில் இதழை வாசிப்பதற்கு👇
கூதிர் இதழைப் பக்கத்தைத் திருப்பி வாசிக்கும் வசதியுடன் வாசிக்க👇🏽👇🏽
https://online.fliphtml5.com/mjgzp/rtap/
தொடர்புக்கு
மின்னஞ்சல் முகவரி
முதல் பத்து இதழ்களுக்கு
புலனம் மற்றும் அலைபேசி
88073 39644
63699 12549
95973 81055
98949 44640
Comments
Post a Comment