கால்வாய் நீர் -ர. பிரகாஷ் ராஜ்
கால்வாய் நீர்
-ர. பிரகாஷ் ராஜ்
நதியினை போல் தான் எனது ஓட்டமும்
நிறவாகுபெயரால் அடையாளம் காணப்பட
காரணம் நானே
இதுவரை எதையும் செயல்படுத்திடாத எனக்கு
தனக்கென மூளை மறந்து
மெய்யோடுபவர்கள்
முட்டாள்களாகின்றனர்
போகும் வழியில் கண்ட
ஏராளமான பிரச்சனைகளால்
கோபித்து கொள்வதா
புன்னகைச் சூடிக் கொள்வதா
ஏதுமறியாது திகைக்கிறேன்
தவறுகள்
திருத்தம்
மறைவு
சுத்திகரிப்பு
தவறுகளென மீண்டுமொரு சுழற்சி
Comments
Post a Comment