குழம்பும் எழுத்துகள் - ம.வீ. கனிமொழி
குழம்பும் எழுத்துகள்
- ம.வீ. கனிமொழி
எழுத்துகள் வரிசையாய்
அணிவகுத்து நின்றன
என் கவிதைக்காக
எந்த வரியில் எந்த
எழுத்தை எந்தச் சொல்லை
நிரப்புவது எனக்
குழம்புகிறேன்
மீன் பிடிக்க
கற்றுக் கொள்ளும்
சிறுமி போலச் சொற்களைப்
பிடித்துவிட எண்ணுகிறேன்
ஒவ்வொரு முறையும்
தூண்டிலில் மாட்டிய மீனை
வெளி எடுக்கையில்
தப்பித்து விடுவதைப் போல
சொற்கள் நெஞ்சக் குளத்தில்
மூழ்கிப் போகிறது
திடீரெனக் கேட்கும்
குக்கரின்
விசில்
சத்தத்தில்
Comments
Post a Comment