என்று மீளுமோ - திரமிளன்
என்று மீளுமோ -
திரமிளன்
செவ்வோடையில் மிதக்கிறது
ஒரு எழுதுளைக் கொண்ட உருண்டை -அதில்
எட்டாவது துளையாக துப்பாக்கியின் தோட்டாக்கள்
என்று மீளுமோ
சூறையாடப்பட்ட என் நிலம்
வேட்டையாடப்பட்ட என் மக்கள்
எரிக்கப்பட்ட எமது நூலகம்
பறிக்கப்பட்ட எமது தாயகம்
மீண்டும் கிடைக்குமா
துரத்தபட்ட நம் சொந்தங்கள்
அழிக்கப்பட்ட நம் வரலாறு
தடுக்கப்பட்ட நமது சுதந்திரம்
குலைக்கப்பட்ட நமது அமைதி
நிறைந்த வாழ்க்கை
அடர்காட்டின் நடுவே
இரத்த ஓடையில்
ஆங்காங்கே மிதக்கும் தடைகற்களாய்
மண்டை ஓடுகள்
Comments
Post a Comment