கூதிர் பருவம் –9 செப்டம்பர்- 2024

    

கூதிர் பருவம் –9 செப்டம்பர்- 2024








தொகுப்பாசிரியர் பகுதி

          கூதிர் இதழ் தொடங்கப்பட்டு ஒன்பது மாதங்கள் ஆகின்றன. இதுவரை எட்டு இதழ்கள் வெளிவந்துள்ளன. குறைந்தது பத்து இதழ்களையேனும் வெளியிட வேண்டும் என்ற முடிவுடனேயே இதழ் தொடங்கப்பட்டது. தற்போது குறைந்தபட்ச அளவினை எட்டுவதற்கு காத்திருக்கிறோம்இதழ் செயல்பாட்டு அனுபவம் பெற வேண்டும் என்கிற ஆர்வத்தின் பேரில் தொடங்கப்பட்ட கூதிர், பத்தாவது இதழோடு நின்று விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டுஅவ்வப்போது இதழை வாசித்து கருத்துகளை தெரிவித்தவர்களுக்கும் இதுவரை  படைப்புகளை அனுப்பியவர்களுக்கும் எங்களுடைய நன்றி. இந்த ஒன்பதாவது மற்றும் பத்தாவது இதழ்களையும் வாசித்து கருத்துக்களை பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம். ஆல்யன், கிருத்திகா, .மதன்,அரா ஆகியோரின் கவிதைகளோடு அகிலா சுப்பரமணி எழுதிய ஔவை தோட்ட பல்கனிகள் என்ற இசையின் ஔவை பற்றிய கட்டுரைகளின் வாசிப்பு அனுபவக் கட்டுரை, அழகுராஜ் ராமமூர்த்தி எழுதிய உளன்று உலாவும் மனம், பேதைமை என்பது பொதுச்சொல் ஆகிய கட்டுரைகளோடு வழக்கம் போல விசித்திரனின் சத்யா தொடர்கதையும் மயிர்விடு தூது சிற்றிலக்கியத்தின் காப்புச் செய்யுளும் இவ்விதழில் வெளியாகியுள்ளதுஉண்மையா? பொய்யா? என்பதை கடந்துஇப்படி ஒரு பதிவு உண்டு என்பதை வெளிக்கொணரும்  வண்ணம் எடுத்தாளப்பட்ட  பகுதியில் விந்தனின் ‘‘பாரதி வாழ்ந்த பாண்டி’’ என்ற கட்டுரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

-தொகுப்பாசிரியர்கள்

 


தொகுப்பாசிரியர்கள்

ரா.அழகுராஜ்

ஜெ.மோகன்

ஆ.கிரண்குமார்

ச.தணிகைவேலன்

  

முகப்போவியம்

நெ. சிவசக்தி

 

 

உள்ளடக்கம்


ஆல்யன் கவிதைகள்

உளன்று உலாவும் மனம் -அழகுராஜ் ராமமூர்த்தி

மயிர்விடுதூது, காப்புச் செய்யுள்  -குவிரன்

ஔவை தோட்ட பல்கனிகள் -அகிலா சுப்பரமணி

கிருத்திகா கவிதைகள்

சத்யா –விசித்திரன்

உனக்காக வேண்டிக்கொள்கிறேன்! -.மதன்

பேதைமை என்பது பொதுச்சொல் -அழகுராஜ் ராமமூர்த்தி

அரா கவிதைகள்  

எடுத்தாளப்பட்ட பகுதி 


 

இதழில் வெளியாகும் படைப்புகளுக்கு அதன் படைப்பாளர்களே பொறுப்பிற்குரியவர்கள்.


Pdf வடிவில் இதழை வாசிப்பதற்கு👇

கூதிர் பருவம் -9


தொடர்புக்கு

மின்னஞ்சல் முகவரி 

koothirmagazine@gmail.com


முதல் பத்து இதழ்களுக்கு


புலனம் மற்றும் அலைபேசி 

88073 39644

63699 12549

95973 81055

98949 44640

 

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு