உனக்காக வேண்டிக்கொள்கிறேன்! -ஏ.மதன்
உனக்காக வேண்டிக்கொள்கிறேன்! -
நீ காயப்போட்ட துணிகள்
கீழே விழாமலிருக்க
'கிளிப்'பிடம் வேண்டுகிறேன்!
நீ தடையின்றி IPL பார்க்க
WiFi -யிடம் வேண்டுகிறேன்!
பிறர் கண்களும் மூக்கும் அறியாது
உன் வயிற்றைச் சென்றடைய
ஆம்லெட்டிடம் வேண்டுகிறேன்!
உனக்காக வேண்டுகிறேன்
நான்
உனக்காகவே வேண்டுகிறேன்!
சாலையில் உன் விரல்களை
முட்டாமல் செல்ல
கற்களிடம் வேண்டுகிறேன்!
உன்னைப் பத்திரமாக
பஸ்ஸில் ஏற்றிவிட
அஸீஸிடம் வேண்டுகிறேன்!
உன் 500ரூபாய் தாளுக்கு
கோபங்கொள்ளாமல் சில்லறை கொடுக்க
கண்டக்டரிடம் வேண்டுகிறேன்!
போகும் வழியில்
அறுபடாமல் இருக்க
செருப்பிடம் வேண்டுகிறேன்!
உனக்காக வேண்டுகிறேன்
நான்
உனக்காகவே வேண்டுகிறேன்!
நீ பேசும் ஹஸ்கி சொற்கள்
சத்தமாகக் கேட்க
செவியிடம் வேண்டுகிறேன்!
எப்பொழுதும்
உன்னைத் திட்டாமல் இருக்க
என் நாவிடம் வேண்டுகிறேன்!
ரயிலே கவிழ்ந்தாலும்
நீ மட்டும் பிழைத்திட
இறைவனிடம் வேண்டுகிறேன்!
உனக்காக வேண்டுகிறேன்
நான்
உனக்காகவே வேண்டுகிறேன்!...
*********
Comments
Post a Comment