ஆல்யன் கவிதைகள்
ஆல்யன் கவிதைகள்
ஏனோ என் கைகள் இறுகி
பிணைக்கப்படுகிறது
என்றோ காக்கை விட்டுச்சென்ற
எச்சத்திலிருந்து ஆலமரம்
தீடீரென்று
மேலும் பிணைப்பு
உடல் முழுவதும்
என்றோ பாட்டியிட்ட
வேப்புருண்டை குமட்டுகிறது
கவலை வேண்டாம்
உங்களின் மீது தெறிக்காது
நீங்கள் அடுக்கின் மேல்
சிவப்பு செம்மட்டி எடுத்து
கெடா தாத்தா கதையை
காண ஆசை
*******
கனத்துப் பெருகிய இதயத்தின்
எல்லாப் பகுதிகளிலும்
இறங்குகிறது
கண் உறங்கிய போதும்
கூர்முனை கருவிழியை
ஆரத்தழுவ
தப்பித்து ஊர்கிறது
படும் குத்துகள் எங்கே?
திடீரென்று நிசப்தம்
அவளின் குரல்
ஒரு முறைப்பு
கனத்த மௌனம்
Comments
Post a Comment