கிருத்திகா கவிதைகள்


கிருத்திகா கவிதைகள்


அவள் கொஞ்சம் பயந்த சுபாவம்

காலிடுக்கில் கௌரவம் புதைத்து

ஒரு துளி உதிரத்தில் கற்பைப் புதைத்த

இச்சமூகத்தைக் கண்டு

அவள் கொஞ்சம் பயந்த சுபாவம்

*****


அவளுக்கு ஒன்றும் தெரியாது

பெற்றுவிட்டால் வளர்த்துவிட்டால்

அவளுக்கு ஒன்றுமே தெரியாது

பிள்ளையின் சிரிப்பைத் தவிர்த்து

அவளுக்கு ஒன்றும் தெரியாது

பாவம் அவளே ஒரு பேதை

அவளுக்கென்ன தான் தெரியும்

*****


பத்தாண்டுகளோ

பதினான்கு ஆண்டுகளோ சிறைவாசம்

என் மார்பை கசக்கி

ஆண் குறி துளைத்து

உதிரம் பீறிட்டு

நகங்கள் கீறிய

இப்பிண்டதுக்கு வாழ்நாளே

சிறை வாசமோ?

*****


திரும்பும் இடமெல்லாம் காவிநிறம்

கேட்கும் ஒலிகளிலோ ஒன்றும் விளங்கவில்லை

புரியாத சொற்களால் நிறைந்த வங்கிப் படிவம்

ஓய்வூதியம் வேண்டி ஒருமணி

நேரப் போராட்டம்

மொழியே தெரியாத

என் தாய் தமிழ்நாட்டில்

***

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு