கூதிர் பருவம் -5, மே-2024

 கூதிர் பருவம் -5, மே-2024


தொகுப்பாசிரியர் பகுதி 

      இந்த மாத இதழில் பட்டினியில் நாள்தோறும் செத்து மடியும் மக்களை நினைவில் கொள்ளாமல் கல்லுக்குள் உறங்க நேரம் ஒதுக்கி வழிபாடு செய்யும் ஆட்சி அதிகாரத்தை அப்பட்டமாக்கும் ஆல்யன் கவிதைகளோடு சின்ன சின்ன சிந்தனைகளை அழகியலோடு பரிமாற்றும் அகிலா சுப்பரமணியின் கவிதைகளும் அதனோடு அரா கவிதைகள் மற்றும் மாற்று அணுகல் முறையிலான விசித்திரனின் சிரஞ்சீவி கதையும் இடம்பெற்றுள்ளது.

     வரலாற்றை மாற்றி எழுதுவோம் எனக் கொக்கரிக்கும் கூட்டத்திற்கு குறியீட்டு முறையில் வலிமையான எதிர்வினை கொடுப்பதாக வல்லிசை நாவல் எப்படி இருக்கிறது என்பதை வரலாற்று தகவல்களுடனும் அசுரன் படத்தின் இறுதிக்காட்சியில் தனுஷ் பேசும் வசனத்தை நினைவுபடுத்தும் வகையிலான கல்வி பற்றிய காட்சிகளையும் ஒடுக்கப்படுதலுக்கு காரணமாக பறை இருக்கிறதென பறையெதிர்ப்பை பட்டியலின கூட்டமைப்பு முன்னெடுத்துச் சென்றதுமாக விரிவானதொரு கட்டுரையாக அழகுராஜ் ராமமூர்த்தியின் வரலாற்றின் ஒலி வல்லிசை கட்டுரை இந்த இதழில் வெளியாகியுள்ளது. அத்துடன் திராவிடச் சிறைக்குள் இருக்கும் பாரதிதாசன் பொதுவுடைமைக்குள் உலவியதை திரமிளன் கட்டுரை விளக்குகிறது. த.பவித்ரா, த.சத்தியப்பிரியா, ஜெ.காமாட்சி காயத்ரி, அகிலா சுப்பரமணி ஆகியோர் எழுதிய எழுத்தாளர் பிரபஞ்சனின் 'மரி என்கிற ஆட்டுக்குட்டி' சிறுகதை பற்றிய வாசகப் பார்வையுடன்,  ஒப்பியல் நோக்கில் சந்திப்பு சிறுகதைகள் குறித்த அழகுராஜின் கட்டுரையும் அதிகாரத்தை சமூகப் பார்வையுடன் திரைப்படம் மூலம் அணுகும் தினேஷ்கண்ணன் கட்டுரையோடு எடுத்தாளப்பட்ட பகுதியில் அழகியலுடன் பாட்டாளி வர்க்கத்தினைப் பேசும் நா. வானமாமலையின் கலையில் இலட்சியமும் வீரனும் என்ற பகுதி இந்த மாத இதழில் வெளியாகியுள்ளது. வழக்கம்போல அரம்பனின் 'அப்படியென்ன' மட்டுமே வாசகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வாசகர்கள் தங்கள் கருத்துகளை கீழேயுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது புலன இணைப்பிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

-தொகுப்பாசிரியர்கள்



                                                   தொகுப்பாசிரியர்கள்

ரா.அழகுராஜ்

ஜெ.மோகன்

ஆ.கிரண்குமார்

ச.தணிகைவேலன்


முகப்போவியம்

மு.உமாசங்கர்



உள்ளடக்கம்

ஆல்யன் கவிதைகள்

வரலாற்றின் ஒலி வல்லிசை -அழகுராஜ் ராமமூர்த்தி                 

அகிலா சுப்பரமணி கவிதைகள்    

திராவிட கவிஞரின் பொதுவுடைமை – திரமிளன்

சிரஞ்சீவி – விசித்திரன்

பிரபஞ்சனின் 'மரி என்கிற ஆட்டுக்குட்டி’     

சந்திப்பு -அழகுராஜ்

அரா கவிதைகள்  

அதிகாரம் - ஒரு சமூகவியல் நோக்கு -கி. தினேஷ் கண்ணன்              

எடுத்தாளப்பட்ட பகுதி

வாசகர் பகுதி



இதழில் வெளியாகும் படைப்புகளுக்கு அதன் படைப்பாளர்களே பொறுப்பிற்குரியவர்கள்.


Pdf வடிவில் இதழை வாசிப்பதற்கு👇

கூதிர் பருவம் -5


தொடர்புக்கு

மின்னஞ்சல் முகவரி 

koothirmagazine@gmail.com


புலனம் மற்றும் அலைபேசி 

88073 39644

63699 12549

95973 81055

98949 44640

 



Comments

Popular posts from this blog

கூதிர் பருவம் -2 (பிப்ரவரி -2024)

கூதிர் பருவம் -4, ஏப்ரல் 2024

கூதிர் பருவம் – 3, மார்ச்- 2024