Posts

Showing posts from February, 2024

அரா கவிதைகள்

  அரா கவிதைகள் நிசப்தத்தின் பெரும் சப்தம் இருளின் ஊடே இரைகிறது.. சிறுத்தையின் கண்கள் சின்ன முயலின் பாதத்தை சிந்தை சிதறாமல் கவனிக்க ஒற்றை ரவை ஓரமாய் நின்ற மரத்தின் பழத்தை துளைக்க மறு நொடியில் சிறுத்தை மாய்ந்து விழுந்தது.. பாய்ந்து சென்ற முயலின் பின்னே.. ***** ஒரு பெட்டிக்குள் முழு உடலையும் பொருத்தும் பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது அங்கு விதவிதமான பெட்டிகளோடு ஆட்டம் தொடங்குவதாக தெரிகிறது ஒவ்வொரு முறை பயிற்சியின் போதும் ஒப்பனைகள் மாற்றப்படுகிறது ஒத்திகை காட்சிகளில் கதாபாத்திரங்கள் பொருத்தமற்று மாறுவது இயல்பாகி விட்டது எழுந்திடுவோம் இங்கு தான் இருக்கிறோம் இதெல்லாம் வேண்டும் அவ்வளவுதான் இறக்கிவிடு முடிந்தது தூக்கிப் போடு நன்றாக கும்பிட்டுக் கொள் எல்லோரும் போகத் தான் போறோம் அங்க போனா பாத்துக்கிடுவோம் நல்லவர் தான் ஆனா அப்படி என விதவித சொற்கள் அவரைத் தெரியாதோர் வாயிலும் உதித்த போது  அன்றைய இரவுக்கான நட்சத்திரங்கள் பகலிலேயே இராத்திரி பார்த்துக் கொள்வதாக குத்தாட்டம் போட்டது ***** ஹால்ஸ் மிட்டாய் வாங்கும் போதெல்லாம் அவ்வளவு உறைக்கிறது தொண்டை ஹால்ஸ் என்ற சொல் வெளிவரவே  திக்கு முக்காடுகிறது வாய் அந

எழுத்தாளராதல் எளிது -அருண் நா

Image
எழுத்தாளராதல் எளிது! இன்று தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளராகுதல் அத்தனை எளிதல்ல. ஆனால், எவன் உதவியுமின்றி எவனுக்கும் வாழ்த்துமடல் வாசித்துக் கொண்டிருக்காமல். தன் சுயத்துடன் எழுத்தாளராவதற்கு, அதுவும் இந்திய அரசின் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் எழுத்தாளராக அறிமுகமாக ஓர் அரிய வாய்ப்பினை வழங்குகின்றது ஒன்றிய அரசு. "பிரதமர் இளைய எழுத்தாளர்" என்ற திட்டத்தினை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் அறிவித்து இந்தியா முழுக்கவுமிருந்து 75 எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களின் நூல்களை தேசியப் புத்தக அறக்கட்டளையின் மூலம் வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து தமிழ் மொழிக்காக மூவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள். கடந்த ஆண்டே எழுதலாம் என்றிருந்தேன். ஆனால், கடந்த ஆண்டிற்கான பொருண்மை “மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள்.” தேர்வு செய்யப்பட்ட நூல்களின் தலைப்புகளை நீங்கள் கவனித்தால் பேசப்படாத அம்பாள்களுக்காகவும் அத்திம்பேர்களுக்காகவும் பேசினால் தேர்வாவோம் என்று சுதந்திர வேள்வியில் பல பக்தர்கள் குதித்துவிட அஃது என் வழியல்ல என்று ஒதுங்கிக் கொண்டேன். கடந