Posts

கூதிர் பருவம் -5, மே-2024

Image
  கூதிர் பருவம் -5, மே-2024 தொகுப்பாசிரியர் பகுதி         இந்த மாத இதழில் பட்டினியில் நாள்தோறும் செத்து மடியும் மக்களை நினைவில் கொள்ளாமல் கல்லுக்குள் உறங்க நேரம் ஒதுக்கி வழிபாடு செய்யும் ஆட்சி அதிகாரத்தை அப்பட்டமாக்கும் ஆல்யன் கவிதைகளோடு சின்ன சின்ன சிந்தனைகளை அழகியலோடு பரிமாற்றும் அகிலா சுப்பரமணியின் கவிதைகளும் அதனோடு அரா கவிதைகள் மற்றும் மாற்று அணுகல் முறையிலான விசித்திரனின் சிரஞ்சீவி கதையும் இடம்பெற்றுள்ளது.      வரலாற்றை மாற்றி எழுதுவோம் எனக் கொக்கரிக்கும் கூட்டத்திற்கு குறியீட்டு முறையில் வலிமையான எதிர்வினை கொடுப்பதாக வல்லிசை நாவல் எப்படி இருக்கிறது என்பதை வரலாற்று தகவல்களுடனும் அசுரன் படத்தின் இறுதிக்காட்சியில் தனுஷ் பேசும் வசனத்தை நினைவுபடுத்தும் வகையிலான கல்வி பற்றிய காட்சிகளையும் ஒடுக்கப்படுதலுக்கு காரணமாக பறை இருக்கிறதென பறையெதிர்ப்பை பட்டியலின கூட்டமைப்பு முன்னெடுத்துச் சென்றதுமாக விரிவானதொரு கட்டுரையாக அழகுராஜ் ராமமூர்த்தியின் வரலாற்றின் ஒலி வல்லிசை கட்டுரை இந்த இதழில் வெளியாகியுள்ளது. அத்துடன் திராவிடச் சிறைக்குள் இருக்கும் பாரதிதாசன் பொதுவுடைமைக்குள் உலவியதை திரமிளன் கட்ட

சந்திப்பு - அழகுராஜ்

                                                                   சந்திப்பு                               -அழகுராஜ்         சந்திப்பு என்கிற தலைப்பில் வெளியான மூன்று தமிழ் எழுத்தாளர்களது சிறுகதைகள் மற்றும் சந்திப்பு என்ற பெயரில் தமிழில் ரகுநாதனால் மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்ய எழுத்தாளர் மாக்சீம் கார்க்கியின் கதை ஆகியவற்றை தலைப்பினை மையமிட்டு ஒப்புமைப்படுத்திப் பார்ப்பதாக இக்கட்டுரை அமைகிறது. ஒப்புமைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நான்கு கதைகளும் 1942 முதல் 1960க்கு இடைப்பட்ட காலங்களில் வெளியானவை. இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் தமிழ் மூலத்தில் வெளியான மூன்று கதைகளும் 1942, 1957, 1960 முறையே கலைமகள், கல்கி, தாமரை ஆகிய இதழ்களில் ஜூன் மாதத்தில் வெளியாகியுள்ளது. ஜூன் மாதம் என்பதிலிருந்தே ஒப்புமையைத் தொடங்குவதற்கான வெளியை சிறுகதைகள் வெளியான விவரங்கள் திறந்துள்ளது. ஜூன் மாதம் என்பதால் வெயில் விடுமுறை காலத்தில் சந்திப்பதற்காக நிகழ்ந்த பயணங்களே (நா. பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி) கதையாகி இருக்கலாம் என கருதுவதற்கு போதுமான இடமுண்டு.       சந்திப்பு என்ற கதைத்தலைப்பைக் கூர்மையாக கவனிக்க வேண்டிய

அரா கவிதைகள்

  அரா கவிதைகள்   பரந்து விரிந்த தோளும் வியர்வை வடியும் தோலும் அம்சமாக அமையப் பெற்ற மரம் வெட்டுபவனின் பழுத்துப் போன விரல்களின் பிடியில், வேகமாய் நகர்ந்த கோடாரி வேங்கை மரத்தை சாய்க்க மரத்தின் மத்தியில் கூடு கட்டியிருந்த குருவி குமுறி அழுது பறந்தது.. அந்த மரத்தைத் தொட்ட ஆசாரியின் உளி இசையுடன் ஒரு குருவிக் கூட்டை கட்டி முடிக்கும் முன்பே குருவிக் குஞ்சுகள் பறந்தது.. நிலைக் கதவின் ஓரத்தில்… ***** அழுக்கு மண்டிய தோளில், கட்டுக்கட்டாய் சுமந்திட்ட நிலைப்பாடு எல்லாம் கரைந்தவாரே கடலினை எதிர்நோக்கும் அந்த நொடி.. காலத்தின் பகடியாட்டம்! ***** இடையில் சொருகிய சுருக்குப் பையின் இத்துப்போன நூல் திரிந்த துரிதத்தில், இங்கும் அங்கும் சுற்றிய ஈரனாவின் இடைவிடா அலைச்சல் ஓய்ந்தது.. பாக்கை மென்று ஒதுக்கி விரலிடையில் ப்ளிச் என்று துப்பிய கிழவனின் பொக்கை வாய் டப்பென மூடியது பட்டணத்தைச் சுற்றியுள்ள கண்களால்.. பழைமை அடிபட்டு பட்டணங்களில் ஊற அட்டைகளில் அசலும் எண்களில் முதலும் தேய்ந்து சுருண்டு உதட்டு இடுக்கில்  போதை தலையிலேற கண்கள் சுருங்கி விரிகிறது மூடித் திறந்து பார்க்கும்  ஒவ்வொரு முறையும்  ஒரு கிலோமீட்டர் தள்ள

அகிலா சுப்பரமணி கவிதைகள்

அகிலா சுப்பரமணியன் கவிதைகள்  முத்தமழைப் பொழிகின்றாள் இராமனும் இராவணனும் திரைச்சீலைக்கு பின்னால் ***** அண்ணாந்திருக்கும் சிறுவர்கள்  கோபுரத்தின் உச்சியில்  கொடுக்காப்புளிகள் ***** காதலரோ? தெரியவில்லை  பின் தொடர்கின்றன  நடக்கும் கால்கள் ***** ஊர் விருந்து  உண்ணாமல் கிடக்கிறது  கவுக்கப்பட்ட சொப்புசாமான் ***** யார் முதலில் பேசுவது நீயா? நானா? வென்றது ஈகோ ***** காலம் காட்டிப் போனது உன் மீது வைத்த காதலை கல்லறையின் மேல் பூக்கள்  *****