Posts

Showing posts from January, 2024

கூதிர் பருவம் -2 (பிப்ரவரி -2024)

Image
  கூதிர் பருவம் -2 (பிப்ரவரி -2024) தொகுப்பாசிரியர் பகுதி  "சாதிப் பிரிவு சமயப்பிரிவுகளும் நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும், மூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சிசெய்தே ஓடச் செய்தால் நமையும் ஓடச் செய்வார் என்பேன்"      எனும் பாவேந்தரின் வரிகளுக்கேற்ப இந்த மாத இதழில் நம் நாட்டில் திணிக்கப்பட்டு வரும் சமயத்தினை எதிர்த்து ஒரு சாரார் செய்துள்ள செயலினை விமர்சித்து வந்துள்ள கவிதை இந்த இதழின் முக்கியப் பகுதி. அந்தச் செயலின் பின்னணியை சிந்திக்கும் வரலாறு கவிதைக்குள்ளேயே இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. மேலும், ராமராஜ்யம் பற்றிய பல்வேறு கட்டுரைகளின் இணைப்புகளை பார்வைக்கு வைத்துள்ள இரண்டு கவிதைகள் பற்றிய கருத்துகளோடு ஏன் ஒரு மாநிலத்திற்கு மட்டும் சலுகை என்பதை பேசு பொருளாக்கியுள்ள காசி அனுபவக் கட்டுரை, நாட்டுப்புற வழிபாடுகள் மற்றும் சடங்குகளோடு பன்மைக்கு ஆதரவான குரல் எழுப்பும் அனுபவக் கட்டுரை முதலானவை ஒரே நிலையில் நிற்கின்றன. புதுமைப்பித்தன் கதையில் இருந்து சிறு பகுதி இந்த இதழின் எடுத்தாளப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.  ஒரு கைம்பெண்ணின் ஏக்கத்தை உணர்ந்த வண்ணத்துப்பூச்சியின் இரக்கத்தை பதிவ

முட்டாள் வண்ணத்துப்பூச்சி

Image
  முட்டாள் வண்ணத்துப்பூச்சி                                                        -கோ.பிரதீபா காற்றோடு மோதிக் கொண்டிருந்த வெள்ளைத் துணி ஒன்றில்  இளைப்பாறுவதற்கு அமர்ந்த வண்ணத்துப்பூச்சி ஒன்று  தன் சாயங்களை விட்டுச் சென்றது,  பார்ப்பவர்களுக்கு முட்டாளாய் தென்பட்டாலும் , அந்த வண்ணத்துப்பூச்சிக்குக் கூட தெரிந்திருக்கிறது  அந்த கைம்பெண்ணின் வெள்ளைச் சீலையும் வண்ணங்களுக்காக ஏங்குகிறது என்று !

ஜெய் ஹே ஆசையின் இரண்டு கவிதைகள்

Image
  ஜெய் ஹே ஆசையின் இரண்டு கவிதைகள்                                 -அழகுராஜ் ராமமூர்த்தி  ______________________________________________  இரண்டு ராமராஜ்யங்கள்  இரண்டு ராமராஜ்யங்கள் உள்ளன ஒன்று  சீதையின் கற்பைத்  தலைநகராகக் கொண்டது இன்னொன்று  சீதையின் துயரைத்  தலைநகராகக் கொண்டது ஒன்றில்  சீதைக்கென்று  எப்போதும் அக்னி எரிந்துகொண்டிருக்கும் இன்னொன்றில்  சீதைக்காக ராமனே  எப்போதும் அக்னியில் இறங்குவான் ஒன்றில் ஒரே ஒரு ராமன்தான்  மீதமுள்ள எல்லோரும் அனுமன்கள் நிமிடந்தோறும்  நெஞ்சைப் பிளந்து  அதன் உள்ளே சீதையற்ற ராமன்  படத்தைக் காட்ட வேண்டியவர்கள்  காட்ட மறுப்போரெல்லாம்  வாலிகள் ராவணன்கள்  கும்பகர்ணன்கள் தாடகைகள்  சூர்ப்பநகைகள்  வதம் செய்ய வேண்டியவர்கள் இன்னொன்றில்  எல்லோருமே ராமர்கள்  அவர்களாகவே தம் நெஞ்சைப் பிளந்து காட்ட  அதில் அனுமன்கள் சீதைகள்  வாலிகள் இராவணன்கள் கும்பகர்ணன்கள் தாடகைகள்  சூர்ப்பநகைகள்  தெரிவார்கள் ஒன்றில் ஒரே ஒரு சிம்மாசனம் மட்டும்  இருக்க  அதில் வீற்றிருந்து ஆட்சி செய்யும்  ராமனின் பாதுகைகள் இன்னொன்றில்  சிம்மாசனமே இருக்காது இரண்டு ராமராஜ்யங்களும் சந்தித்துக்கொண்டன ஒன்று &

வாசகர் பகுதி

 ஐயா வணக்கம்.  கூதிர் மின்னிதழைப் படித்தேன். ஆய்வுக் கட்டுரைகள், புதுக்கவிதைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. மரபுக் கவிதைக்கும் வாய்ப்பளித்திருக்கலாம். தமிழின் மேன்மைக்கும், தமிழின் சிறப்பிற்கும் மரபுக் கவிதைகள் தாம் அடிப்படை. தமிழ் இன்றளவும் அழியாமல் இருப்பதற்கு மரபுக் கவிதைகளால் இயற்றப்பட்ட சங்க இலக்கியங்கள் தாம். -பாவலர் கருமலைத்தமிழாழன் இதழ் வடிவமைப்பு, முகப்பு ஓவியம் , ஆசிரியர் பக்கம், கூதிர் தொடர்பான தரவுகள், ஆழமான படைப்புகள் ஆகியன எளிமையாகவும் அதே சமயத்தில் அழகியல் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. மின்னிதழின் பின்னணியில் உள்ள பணித் தன்மைப் போற்றுதலுக்குரியது, அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது உள்ளார்ந்த வாழ்த்துகள் என்றும் உரியது. -இர.கண்ணதாசன் “படைப்பாளியை முன் நிறுத்தாமல் படைப்பை முன்னிறுத்துவதே" முதன்மையான‌ அறம் என்பர். அந்த வகையில் கூதிர் மின்னிதழின் முதல்  பருவம் படைப்புகளை முன்னிறுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்விதழில் தமிழ் சைவம் வைதீகத்திற்கு எதிரான ஒரு மரபாக வளர்ந்த வரலாற்றைப் பேசுவது என்னை மிகவும்‌ ஈர்த்தது.இவ்விதழை இதழுக்கான கவிதைகள், இலக்கிய மற்றும் அரச

இரண்டு புள்ளி சுழியமும் இரண்டாயிரத்து இருபத்து நான்கும்

Image
இரண்டு புள்ளி சுழியமும் இரண்டாயிரத்து இருபத்து நான்கும்   காசி தமிழ் சங்கமம் 2.0 - 2023 பயண அனுபவம் -அழகுராஜ்       காசி தமிழ் சங்கமத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏற்படுத்தியதன் நோக்கம் தமிழ்நாட்டிற்கும் உத்திரப்பிரதேசத்தின் காசி நகர்க்கும் இடையிலான பண்பாட்டுத் தொடர்பை மக்களுக்கு தெரியப்படுத்துவதும் மீளுருவாக்கம் செய்து புதிப்பிப்பதுமே ஆகும். சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட சங்கமத்தின் வெற்றி இந்த ஆண்டும் சங்கமத்தை நடத்த வைத்துள்ளது என்றே கருத வேண்டியிருக்கிறது. இந்த பயணத்தின் சிறப்பம்சங்களில் முக்கியமானது நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தும் அரசு அமைப்புகள் அனைத்தும் ஒரே புள்ளியில் சங்கமித்திருப்பது தான். இந்தியக் கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் சென்னை இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், இந்திய இரயில்வே துறை, இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் ஆகியவற்றோடு உத்திரப்பிரதேச அரசும் ஒன்றிணைந்ததன் விளைவு தான் பயணம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படுவதற்கான முக்கிய காரணம்.       தமிழில் செலவு என்ற சொல்லால் பயணத்தைக் குறிப்பிடுவர். செல்தல், சென்