Posts

Showing posts from March, 2024

கூதிர் பருவம் -4, ஏப்ரல் 2024

Image
கூதிர் பருவம் -4, ஏப்ரல் 2024   தொகுப்பாசிரியர் பகுதி       இந்த மாத இதழ் தீனனின் முறுகேறிய மொழியில் வெளிப்பட்டுள்ள கவிதைகளுடன் தொடங்கியுள்ளது. ஜெயதே எழுதியுள்ள டி.கே. டூ டி.எம் கட்டுரை சமகாலப் பொருத்தப்பாட்டிற்கு வரலாற்றை முன்னுதாரணமாகக் கொள்ளும் கட்டுரை ஆகும். டி.கே. பட்டம்மாள் முதல் டி.எம்.கிருஷ்ணன் வரை கர்நாடக இசைக்குள் புதுமை புகும் போதெல்லாம் ஒவ்வொருமுறையும் எப்படியான எதிர்வினைகள் நிகழ்ந்துள்ளன என்கிற சிந்தனைக்குரிய தோற்றுவாயாக ஜெயதேவின் கட்டுரை அமையுமென நம்புகிறோம். பாண்டிச்சேரியில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆர்த்தி என்கிற சிறுமியின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட அகிலா சுப்பரமணி எழுதிய கவிதையோடு உளமொழியெனில் என்ற தலைப்பில் தி.கு.இரவிச்சந்திரனின் கட்டுரையில் தொடங்கி படைப்பு மொழிக்கான சான்றை சுந்தரராமசாமியிடமிருந்தும் சமூக மொழிக்கான சான்றை இராசேந்திரச்சோழனிடமிருந்தும் பெற்ற அழகுராஜ் எழுதிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. மொழியின் பலவாறான சிந்தனைகளைத் தொகுத்துக் கூற முற்படும் முயற்சியாக இதனைக் கொள்ளலாம். இராமன் மற்றும் இராவணனை வைத்து தமிழில் நூற்றுக்கணக்கான கவிதைகள் எழுதப்பட்

கவனிக்க -அழகுராஜ் ராமமூர்த்தி

                                       கவனிக்க - அழகுராஜ் ராமமூர்த்தி       பிப்ரவரி மாதம் கூதிர் இதழில் நான் எழுதிய “ ஜெய் ஹே ஆசையின் இரண்டு கவிதைகள் ” என்ற கட்டுரையில் ஏதோவொரு ஆவேசத்தில் கம்பனின் இராமன் மனிதன் என்று கூறியிருக்கிறேன் . ஆனால் கம்பனின் இராமன் மீது தான் தெய்வீகத் தன்மை போர்த்தப்பட்டிருக்கிறது . இந்தியாவெங்கும் இருக்கும் இராமயண கதைகளில் இராமன் மனிதனாகவும் தெய்வமாகவும் இரு வேறு நிலைகளில் கதைக்குள் இருக்கிறான் . சில கதைகளில் இராமனை எதிர்மறையாகவும் இராவணனை நேர்மறையாகவும் கூறுவதும் உண்டு . இராபனைப் பற்றிய ஆராய்ச்சியை ஒதுக்கி வைத்துவிடுவோம் . அந்த சிறு கட்டுரை பேசுவது இலக்கிய ஆராய்ச்சி அல்ல . அரசியல் என்பதையும் இந்த இடத்தில் தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன் . என்னுடைய கட்டுரையில் இருக்கும் தவறை எவரும் சுட்டிக்காட்டப்படாததை என்னவென்று சொல்வது ? எவரும் சொல்லாததால் நானே சொல்ல வேண்டிய நிலை .         டி . எம் . கிருஷ்ணாவிற்கு மியூசிக் அகாதமி “ சங்கீத கலாநிதி ” விருதை அறிவித்ததையொட்டி எழுந்த விவாதங்கள்
  வாசகர் பகுதி   அப்படியென்ன                                               - அரம்பன்       கூதிர் மூன்றாம் இதழ் பெண்ணியத்தை மையப்படுத்திய இதழாக வருமென எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான். நினைவின் தவிப்பை பேசும் இராகுலனின் கவிதைகளும் அதன் தொடர்ச்சியாக கொள்ளத்தக்க வகையில் இளவெயினி கவிதையும் இருந்தது. அருண் எழுதியுள்ள எழுத்தாளராதல் எளிது என்கிற பகுதி இன்று வாசிப்பு, எழுத்து, ஆய்வு என சிந்தனைத்தளத்தில் பயணிக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பகுதி ஆகும். தொடர்ந்து கொள்கையில் உறுதியாக தீராத உழைப்பும் சோர்வற்ற முயற்சியும் கொண்டு செயல்படும் ஒருவர் அதற்கான பலனை அடைவார் என்கிற நம்பிக்கையை அருணின் எழுத்து மூலம் தெரிந்துகொள்ளலாம். சத்யா தொடர்கதையில் தாயுக்கும் மகனுக்குமான உறவு மையம் கொண்டிருக்கிறது. தீனன் எழுதிய ஐந்தாவது முத்திரை கட்டுரைக்காகவே இதழ் வெளியாகிறதோ என நினைக்கும் வகையில் இதழின் அதிக பகுதியை ஆக்கிரமித்து ஒரு முத்திரையாக அந்த கட்டுரை விளங்குகிறது. குற்றவுணர்வின் பல பரிமாணங்களை காட்சிப்படுத்தும் கட்டுரையின் மொழி குற்றவுணர்வு வேண்டுமா? வேண்டாமா? என நினைக்க வைக்கிறது. மேலும் கட்ட