Posts

Showing posts from April, 2024

எடுத்தாளப்பட்ட பகுதி

எடுத்தாளப்பட்ட பகுதி  கலையில் இலட்சியமும் வீரனும் -நா.வானமாமலை       இலட்சியத்தால் வழிகாட்டப்பட்டுச் செயல்படும் வீரர்களைக் கலை படைத்துள்ளது. மக்களது சமூக உணர்வென்னும் நாடித் துடிப்பை உணர்ந்து சமூகப் பொறுப்போடு இலக்கியம் படைக்கும் படைப்பாளி காலத்தின் லட்சியத்தையும் காலத்தின் நடைமுறையையும் இணைக்கிறான். சமூக வரலாற்றின் நிகழ்காலத்தையும் அதன் வருங்காலத்தையும் இணைக்கும் இலட்சிய வீரர்கள் கலைப்படைப்பாக உருவாக்கப்படுகிறார்கள்.       இலட்சியம் சமூக யதார்த்தத்திலிருந்து தோன்றுகிறது. சங்க கால இலட்சியங்கள் வள்ளுவர் காலத்தில் மறைந்து போயின. வள்ளுவர் கால இலட்சியங்கள் கம்பன் காலத்தில் மறைந்த போயின. கம்பன் காலத்து இலட்சியங்கள் தற்காலத்தில் மறைந்து போய்விட்டன. இலட்சியங்கள் என்றைக்கும் நிலைத்து மாறாமல் இருக்கக்கூடியவை அல்ல; அவை நிறைவேற்றப்படும்பொழுது மனிதனுக்குத் திருப்தி தராமல் போய் அவற்றைவிடச் சிறந்த இலட்சியங்களை அவன் வகுத்துக் கொள்ளுகிறான்.       இலட்சியங்கள் ஒரு வரலாற்றுக் காலத்து வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பிரதிபலிப்பதில்லை. வாழ்க்கையின் அடிப்படையான மதிப்புகளும் விரும்பத்தக்க அம்சங்களும் ஒன்

ஆல்யன் கவிதைகள்

  ஆல்யன் கவிதைகள்   பரிணாம வளர்ச்சியின் முன்னோடிகள்  பலரின் கோஷம் பைத்தியமாய் எதைக்கேட்டாலும் அது குழந்தை பாவம்  கால் வலிக்கும் தூங்க வேண்டும் வெய்யில் வேற இனி அர்ச்சனை தட்டில் கண் மை டையப்பர் ஜான்சன் பேபி பேக் நல்லவேளை கண்ணனுக்கு கோவில் கட்டவில்லை கோபியர் கூட்டம் சன்னதி கேட்டு டாஸ்மாக் வரிசையாய் நீண்டு இருக்கும் வீட்டின் மூலையில்  புன்னகைச் சிரிப்புடன்  நான்கு மாதங்களாய் தூசு படிந்த புத்தர் என்றைக்கு கைகூடுமோ வில்லனுக்கு முதிர்ச்சி ******* செந்நிற நாயின் இரைப்பையில்  வருடும் நீர் தீரா காதலென எண்ணியது மனதால் வடிந்த சிலையும் பெரு உளி நகர்வில் சிதைந்த சித்திரமும் இருள் கடலின் தேக்கத்தில் து(தூ)க்கமின்றி தன்துணையாய் ******* அரைவேக்காட்டு அதீத நம்பிக்கையில் சிலர் கூர்மையான அரிவாளை விட வார்த்தை ஜலத்தில் ஆன் "அது எப்படி சாத்தியம்" செத்துப்போன சில்லரை  சித்தார்ந்தம் அது சிவப்பு சட்டைகாரன் பதிலுக்கு பசித்த மனிதனின் நெஞ்சுக்கூட்டில் கனவு காணும் இதயம் இதயத்தின் வேட்டைக்கு சகமனித அக்கறை "எல்லோருக்கும் எல்லாம்" ******* போகும் வழியே பிரியர்களின்  புகழ் பெற்ற இடம் குருவிகள் கூட்ட