அகிலா சுப்பரமணி கவிதைகள்

அகிலா சுப்பரமணியன் கவிதைகள் 

முத்தமழைப் பொழிகின்றாள்
இராமனும் இராவணனும்
திரைச்சீலைக்கு பின்னால்
*****

அண்ணாந்திருக்கும் சிறுவர்கள் 
கோபுரத்தின் உச்சியில் 
கொடுக்காப்புளிகள்
*****

காதலரோ? தெரியவில்லை 
பின் தொடர்கின்றன 
நடக்கும் கால்கள்
*****

ஊர் விருந்து 
உண்ணாமல் கிடக்கிறது 
கவுக்கப்பட்ட சொப்புசாமான்
*****

யார் முதலில் பேசுவது
நீயா? நானா?
வென்றது ஈகோ
*****

காலம் காட்டிப் போனது
உன் மீது வைத்த காதலை
கல்லறையின் மேல் பூக்கள் 
*****

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு