'கௌதம் கனவுகள்' கவிதைகள்
'கௌதம் கனவுகள்' கவிதைகள்
செம்மஞ்சள் பூக்களென்
விரிந்த கைகளெங்கும்;
கண்களிலும்.
உதிர்கையில் சுழலும் அப்பூக்கள்
ஒளிபடா கதையொன்றின்
சொற்கள்.
நானொரு மரம்.
*****
அற்புத விளக்கின் அலாவுதீன் பூதங்கள்
பொழுது போகவில்லையென
பேண்ட் பாக்கெட்டில் இருந்த
அற்புத விளக்கையெடுத்து
இரண்டு மூன்று முறை தேய்த்தான் அலாவுதீன்.
அவ்வளவுதான்
எத்தனையெத்தனையோ நூற்றாண்டுகள்
சிக்கினான் அதற்குள்.
*****
https://www.instagram.com/reel/DeMsChhRMzY/?stkn=MWJkdDZncG9zbGk4OQ==
https://www.instagram.com/reel/DeMr0wgxQ8B/?stkn=M3Njb3d4YmI0YWY=
படைப்பாளருக்கு வாழ்த்துகள் ❤️
ReplyDelete