Posts

LPGமயமான கல்வி -ஶ்ரீ அய்யனேஷ்வர்

Image
  LPGமயமான கல்வி -ஶ்ரீ அய்யனேஷ்வர்          டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டம் என்பது வெறும் NEET, தேர்வு முறைகேடு, அல்லது கல்வி அமைச்சரின் ராஜினாமா என்பதோடு சம்பந்தப்படுத்தப்படும் போராட்டம் மட்டுமல்ல. இன்று மாணவர்களுக்கும் கல்வி முறையின் மீது இருக்கும் தீர்க்கமான அதிருப்தியின் வெளிப்பாடாகவும், வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, வாய்ப்பு மறுக்கப்படுவது போன்ற அதி முக்கியமான பிரச்சினைகளில் சிக்கவைக்கப்பட்டு இருக்கும் இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் அரசியல் நிகழ்வாகவும் பார்க்கப்பட வேண்டும். அரசியல் அமைப்பு நமக்கு வழங்கி இருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்று கல்வி பெறும் உரிமை. இன்று கல்வியை உரிமை என்ற இடத்தில் இருந்து, வணிகமாக, பணம் படைத்தவர்கள் மட்டும் பெறக்கூடிய பண்டமாக தற்கால கல்வி முறை மாற்றி இருக்கிறது. அனைவருக்கும் கல்வி என்பதற்கு மாறாக, பணம் படைத்தவர்களுக்கு மட்டும் கூடுதல் வாய்ப்பு என்பதை ஊக்குவிக்கிறது. அதாவது "Formal Equality, Real Inequality". அனைவருக்கும் கல்வி என்பதுபோல் தெரிந்தாலும், குறிப்பிட்ட சிலர்தான் அதில் பலன் சென்ற சேரும். ...

கழிமுகம் -நெல்லை ஜிகே

Image
  கழிமுகம் -நெல்லை ஜிகே        திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே ஒரு மறியல் போராட்டம். "கல்வி உரிமை வேண்டும்! வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும்!" என முழக்கங்கள் விண்ணைப் பிளக்கின்றன. கூட்டத்தின் முன்னால் நின்று முழக்கமிடுகிறான் கதிர். ​       அப்போது, போலீஸ் தடியடி நடத்த முற்படும்போது, அண்ணா கல்லூரி மாணவிகள் குழுவோடு முன்னால் வந்து நிற்கிறாள் மகி ராணி. கதிரின் கண்களில் அவள் காட்டிய உறுதி ஆச்சரியத்தை வரவழைத்தது. ​      "ஏய் பிள்ளை... பின்னாடி போயிரு, போலீஸ் அடிக்கப் போறான்!" என்றான் கதிர்.        "அடிச்சா விழப்போறது எங்க முதுகுலதான், உங்களுக்கென்ன கவலை?" என்றாள் மகி ராணியின் பதிலில் நெல்லைக்கே உரிய ஒரு திமிர் இருந்தது. ​      அந்தப் போராட்டத்தின் முடிவில், கைதாகி போலீஸ் வேனில் அமர்ந்திருக்கும்போதுதான் இருவருக்கும் அறிமுகம் கிடைக்கிறது. வெவ்வேறு ஜாதி, வெவ்வேறு பின்னணி. ஆனால், இருவருக்கும் பொதுவானது தாமிரபரணி.        நாட்கள் நகர்கின்றன. நெல்லை டவுன் ஆர்ச் அருகே டீ...

வருணன் கவிதைகள்

  வருணன் கவிதைகள்    ஒவ்வொரு மலை உச்சியிலும் கடவுள் இருக்கிறார் அடிவாரத்திலிருந்து அண்ணார்ந்து பார்க்கையில் எம்மலையும் பிரம்மாண்டம் தான் வறண்ட குற்றுச் செடிகள், பெயரறியா மரங்கள் கடந்து மெல்ல ஏறுகிறது சப்பாத்துகளற்ற எளிய பயணியின் ஒரு ஜோடி காலடி பத்து முறை  நூறு முறை ஓராயிரம் முறை  ஏற ஏற  உலகம் கீழிறங்க  வானமும்  தவழும் மேகமும் கூட இரங்க படுத்தபடியே ஏறி வருகிற நிழலுக்குள் கணந்தோறும் பிடி நிலம் ஓய்வெடுக்க பொழுதும் பயணியும் உச்சியைத் தொடுகையில் கடவுளங்கு காத்துக் கொண்டிருக்கிறார் காற்றின் அரூபக் கரங்களால்  அணைத்தபடி பயணம் சுகமா என விசாரிக்க ***** வரிசை பிறழ்ந்த ஒரு நாள் கால வரிசைக்குள் நிற்கச் சலித்த  உன் நினைவு குடித்த நாளொன்று தனக்குள்ளேயே  நம்மை ஒளித்து வைத்துக் கொண்டது. மீண்டும் கண் தழுவவியலா உன்னை மட்டுமெயென்றால்  சலித்துப் பழகிய சல்லடைக் கண் மனதில்  இந்நாளை மீண்டுமொருமுறை  சலித்துத் தூங்கியெழுந்து இயல்பாகியிருக்கலாம். திருவிழாக் கூட்டத்தில்  காணமற்போன பிள்ளையைத் தேடி தானும் தொலைந்த தந்தையைப் போலிருக்கையில்...

முள் மரத்தின் நிழல் - மா. அன்பரசு

Image
  முள் மரத்தின் நிழல் - மா. அன்பரசு “நீ ஏன் அந்தச் சுவரையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்?” உளவியல் ஆலோசகர் நடராஜனின் குரல் அமைதியாக இருந்தது. மூலையில் அமர்ந்திருந்த சிறுவன் தலைநிமிரவில்லை. அவனுடைய பார்வை எதிரே இருந்த வெள்ளைச் சுவரிலேயே பதிந்திருந்தது. சுவரில் எதுவும் இல்லை. ஓவியமில்லை. ஜன்னலில்லை. இருந்தும், ஏதோ ஒன்றைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல அவன் கண்கள் அசையவில்லை. நடராஜன் மெதுவாக அவன் வழக்குக் கோப்பைத் திறந்தார். பெயர்: முன்னா வயது: 17 அடுத்த பக்கத்தில் செய்தித்தாள் வெட்டுப்பகுதி ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. “மாநிலத்தை உலுக்கிய கொடூரச் சம்பவம்... இளம் தம்பதியர் மீது மூவர் கூட்டாக வன்முறை... இருவர் கைது... சிறுவன் சீர்திருத்தப் பள்ளிக்கு...” அதற்கு மேல் படிக்க நடராஜனால் முடியவில்லை. அவர் கோப்பை மூடிவைத்தார். “பதினேழு வயது... ஒரு சிறுவன் எப்படி இவ்வளவு கொடூரமான குற்றத்தின் நிழலுக்குள் வந்தான்?” என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. அவர் முன்னாவைப் பார்த்தார். “உன் பெயர்?” “முன்னா.” “எந்த ஊர்?” “பீகார்.” “எவ்வளவு படிச்சிருக்க?” “ஆறாம் வகுப்பு.” “ஏன் நிறுத்திட்ட?” முன்னா சிறிது நேரம் அமை...

கவிதைகள்

மரணத்திற்கு பிறகு -மாரி மகேந்திரன் நான் இன்று இப்படிதான் சாகப் போகிறேன் எனச் சொல்வதற்கு  என்னிடம் ஏதுவான எந்தவொரு காரணங்களும் இல்லை? சாவுக்கும் வாழ்வுக்கும் இடையில் இருப்பது  கொஞ்ச காலங்களே... ஆயினும் எதற்காக  நான்? இங்கே சாகத்தானே வந்துள்ளேன்? வாழும் போது வசதிகளைப் பார்த்து  சாவைப் பற்றிய ஞாபகமே இருப்பதில்லை  எனக்கும் என்ன என்றாலும் எப்படி என்றாலும் இறுதிகட்ட முடிவு  சாவுதானே எனக்கும் ஆகவே இன்று நான் ஏதோவொரு விபத்தினாலோ எதாவது வியாதியினாலோ இன்னும் மழை வெள்ளத்தினாலோ சீறும் தீயினாலோ குண்டு வெடிப்பினாலோ கொலையினாலோ இன்று நான் செத்தாலும் சாவு ஒன்றும்  என்னைச் சாவடிப்பதில்லை ஏனெனின் இயேசு எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் ***** 30.8.2026         (நேபாளத்தில் பனிப்பாறை வெடிப்பில் மரணித்த ஆத்மாக்களுக்காக....) ***** நாளை முதல் உனக்கு பள்ளிக்கூடம் திறக்கப்பட இருக்கிறது நீ இல்லாத பொழுதுகளில் உன் பொம்மைகள் எல்லாம் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் என்றேன் நினைக்காது அது பொம்மை அதுக்குள்ள பஞ்சு தான் இருக்கிறது என்று எளிய உண்மைகளைச் சொல்லி அந்த உர...