பண்ருட்டி ச. சக்தி கவிதைகள்
பண்ருட்டி ச. சக்தி கவிதைகள்
உன் போல்
என்னால் பேச முடியாது
உன் போல் என்னால்
மேடை ஏற முடியாது
உன் போல் என்னால்
காடு கழனியெங்கும்
பாடித்திரிய முடியாது
உன் போல் என்னால் ஊருக்குள் செருப்பனிந்து நடக்க முடியாது
உன் போல் என்னால்
தேசியக்கொடி ஏற்ற முடியாது
உன் போல் என்னால்
இங்கே எதுவும் செய்ய முடியாது
உன் சாமி என் பின்னே
என் சாமி உன் முன்னே நகர அதிருகிறது
என் கையிலுள்ள ஆதிபறை
*****
சந்திக்கலாம் என்று
முடிவான பிறகு
ஏதோ ஒரு நாளில்
நாம் இருவரும் சந்தித்துக்கொண்டோம்
ஒரு டீ
ஒரு காபி
இரண்டு போண்டா
இரண்டு சமோசா என
இனிக்கிறது மாலை நேரம்
நடக்க தொடங்கினோம்
நீ அந்தப்பக்கம்
நான் இந்தப்பக்கம்
இருவரின் வானமெங்கும் எண்ணிடலடங்கா நட்சத்திர வடுக்கல்
காதல்
*****
திரும்பி வந்துவிடும் தூரம் அது திரும்புதலுக்கு
சாத்தியமற்ற பாதை
என் எதிர் எதிரே வருவோரின்
ஒவ்வொருவரின் கைகளிலும்
கொல்லிக்கட்டையும்
மண்வெட்டியும்
பெய்த படியே மழை
*****
ஏன் இவ்வளவு தூரம்
நடந்தா வந்திங்க
தண்ணீ குடிக்கிறீங்களா
கொஞ்சம் உட்காருங்க
சாப்பிட ஏதாச்சும் கொடுக்கட்டுமா
கால் வலிக்கவில்லையா
கேட்க கேட்க
எனக்குள்ளிலிருந்து பறக்கிறது
வலியும் வேதனையும்
நடந்த வழி நெடுங்க பல கண்கள்
எங்கே இவ்வளவு வேகம்
பல மரங்கள்
சில வெளிச்சம்
உடலெங்கும் வியர்வை கொப்புளங்கள் நடந்த தூரம்
தெரியவில்லை
கையில் கவிதை புத்தகம்
*****
https://www.facebook.com/61554987526965/posts/122277752156166250/?app=fbl
https://www.facebook.com/61554987526965/posts/122277752294166250/?app=fbl
https://www.facebook.com/61554987526965/posts/122277752438166250/?app=fbl
https://www.facebook.com/61554987526965/posts/122277752936166250/?app=fbl
Comments
Post a Comment