அன்னெ கார்சன் கவிதைகள் -தமிழில். மோகன் ஜெ
அன்னெ கார்சன் கவிதைகள்
-தமிழில். மோகன் ஜெ
ஆதலால் அவர்கள் சிவப்பு/இல்லை/அவன்
செம்மை /ஆம் / சிறகுகள் / ஆம் எனக்கு அவனைத் தெரியும் / பட்டாளத்தில் இருந்து / (ஆஹா ஹா) /
என்ன நகைச்சுவை/ அவன் சிந்தனை
பட்டாளத்தில் / ஏன் அவனைச்
சேர்த்தார்கள் / ஓ குடிகளின் நினைப்பு
நான் சிறந்தவள் பாதியை விட / என்பாதி / நான்
குறும்புத்தனங்களிலே திளைக்க தொடங்கியிருந்தேன் /குடிகள்
யாரைப் போல / தந்தை / குறும்பு
எதைப்போல் / இது ஒரு
நேர்காணலா / நான் மூட விரும்புகிறேன்
எல்லா ஓட்டைகளையும் / இதோ சங்கதிகள்
அட அல்லது நாம்
இங்கே அமர்ந்து ஓட்டைகளை மூடுங்கள் அல்லது
நாம் போய் அசிங்கத்தைக் கிளறுவோம்/
எதைப் போன்ற அசிங்கம் / எங்கே
அவன் மந்தையை வைத்திருப்பதாக சொன்னீர்கள்
/ மேம்பாலத்தில் அடியில் /
நல்லது இது அவ்வளவுதான்
*****
கடவுளின் பட்டியலில் நீர்மங்கள்
இது ஒரு நவம்பர் மாத இரவின் காற்று
கால்அதரைக் கடந்து இலைகள் முறிந்தன
கடவுள் வாழ்க்கை புத்தகத்தை
மகிழ்ச்சி எனும் பக்கத்தில் திறந்து வைத்திருந்தார்
அவர் மறு கையைப் பக்கங்களின் கீழே பிடித்திருந்தார்
கதவின் வழியே காற்று அடிப்பதனால்
' நான் அவர்களின் சதையை வடிகட்டியாய்
செய்தேன் '
பக்கத்தின் மேல் இதனை எழுதிவிட்டு பின் பட்டியலிடுகிறார்
மது
குருதி
நன்றியுணர்வு
நினைவு
உயிரணு
பாடல்
கண்ணீர்
காலம்
******
ஓ அன்பின் சிறுதுயர் பேருவகை
இமைகள் மூடி இரவெல்லாம் உன்னோடு இருக்க விரும்புகிறேன்
என்ன அதிர்ஷ்டம் - நீ இங்கே
வருகிறாய்
நட்சத்திரங்களுடன்
நான் ஒரு சாலை பயணம் செய்தேன்
என் மனம் முழுதும்
அங்கே தான் இருந்தாய்
சாலையின் ஓரத்தில் மண்டியிட்டு
உன்னுடைய சிறிய கருவிகளோடு
ஏதோ ஒன்றை சரிசெய்து
எனக்கு ஒரு உலகம் கொடு, நான் இருந்த உலகத்தை நீ அபகரித்துவிட்டாயே
*****
https://www.instagram.com/p/DPbhWkMEgHp/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
https://www.instagram.com/p/DPbhivYEsYv/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
https://www.instagram.com/p/DPbhq6WksTv/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
Comments
Post a Comment