Posts

Showing posts from October, 2025

தீனன் கவிதைகள்

 தீனன் கவிதைகள் உயிர்ப்பசி இருண்மையின் முட்கள் குதறியெடுத்த புண்களைச் சுமக்கும் குறுகிய மனது  நைந்து கிழிந்த பழந்துணிபோல எலும்புக்கும் தோலுக்கும் உயிர்கொடுக்கிறது  எரிச்சலை சேமித்து  சலிக்கிறதெனக்கு  சலனத்திருந்தே பழகிய அசைவுகள்  செயலின்மைக்குள் அழுகுவதான கொச்சை எண்ணங்கள்   உடல்மேல் ஊரும் புலையான உணர்ச்சிக்குள்  விழிகள் விரிக்க திணறலில் இருக்கும் சுகங்களுக்காக  சுய இரக்கத்தைப் பிழியும்  கற்பனைத் துயரைக் கற்பித்துக்கொள்கிறேன் அழுகையில் அடைக்கும் மூச்சுப் பாதையில்  இரைகிற காதுகள்  ஒலியினில் நிசப்தித்திருக்க  நெற்றியில் துருத்தும் ஒற்றை நரம்பினில்  பின்னந்தலையில் துடிக்கும் இதயத்தில்  கணுக்கால் விரல்களில்  உயிர்ப்பினை நிறுத்தி  சுவரினில் தலையினை மோதிக்கொள்ளும்  தசையின்பத்தின் உச்சியில் பிதற்றிட  ஒரு பிடியவளில் சுருங்கிய உயிரை அசைவுகளின்றி வெறித்துக் கிடந்தேன்    உதடுகள் திறந்தே இருக்கும் புரியாமையின் பாவனை தலையை ஒருபுறமாகத் திருகும் பிரம்மையின் வெறியாய் எச்சில் சிந்தும் மூச்சிறைப்ப...

அரா கவிதைகள்

 அரா கவிதைகள்  பற்றுப்புள்ளிகளில் பொருத்தப்பட்ட  மரக் கைப்பிடிகள் பிடித்து  ஓட்டைகளுக்குள் கால் வைத்து மேலேறுகிறேன்  ஆங்காங்கே விடைத்து நிற்கும் கைப்பிடிகளும்  குழிந்து கிடக்கும் பொந்துகளுமாக  அச்சுவர் பரந்து கிடக்கிறது  ஒவ்வொரு நாளும் விடாமல் ஏறுவது  தொழிலாகிவிட்டது  புண்களிலிருந்து உலர்ந்து உதிரும் பக்குகளை  உருட்டி துளைகளை அடைப்பதற்கு  மயிரிழை வெற்றி கோப்பையாக கைகளுக்கு வரலாம்  உடைந்து போன முகத்தின் மேல் முனைகள் அறுக்கின்றன  பச்சை பூசிய மயிர்களைத் திண்ணும்  ஆடு மாடுகளின் தொண்டைக் குழிக்குள்  வெடுக்கென விழும் அழுக்குச்சட்டைகளுக்குள்  ஒரு மனித உடல் விழுங்கப்பட  கம்மிய குரலில் புத்தோசையில் மெட்டுக்கேற்ற  கதைப்பாடல் ஒன்று பிறக்கிறது  பிறப்பின் உற்சவத்தை கைப்பிடியைப் பிடித்து தொங்கி  கண் மூடி உள்ளிழுத்து ரசிப்பவர்கள்  நாளையிலிருந்து மீண்டும் மேலேற வேண்டும் ***** மிக சாவகாசமாக இடுப்புக்கு மேல் போடும் உன் கைகளைச் சுற்றி  இழுத்துவிடும் இயந்திரத்தின்  மூர்க்கமான மூக்குக்குள்...

அன்னெ கார்சன் கவிதைகள் -தமிழில். மோகன் ஜெ

  அன்னெ கார்சன் கவிதைகள் -தமிழில்.  மோகன் ஜெ  ஆதலால் அவர்கள் சிவப்பு/இல்லை/அவன் செம்மை /ஆம் / சிறகுகள் / ஆம்  எனக்கு அவனைத் தெரியும் / பட்டாளத்தில் இருந்து / (ஆஹா ஹா) / என்ன நகைச்சுவை/ அவன் சிந்தனை பட்டாளத்தில் / ஏன் அவனைச் சேர்த்தார்கள் / ஓ குடிகளின் நினைப்பு நான் சிறந்தவள் பாதியை விட  / என்பாதி /  நான் குறும்புத்தனங்களிலே திளைக்க தொடங்கியிருந்தேன் /குடிகள்  யாரைப் போல / தந்தை / குறும்பு எதைப்போல் / இது ஒரு  நேர்காணலா / நான் மூட விரும்புகிறேன் எல்லா ஓட்டைகளையும் / இதோ சங்கதிகள் அட அல்லது நாம் இங்கே அமர்ந்து ஓட்டைகளை மூடுங்கள் அல்லது நாம் போய் அசிங்கத்தைக் கிளறுவோம்/ எதைப் போன்ற அசிங்கம் / எங்கே அவன் மந்தையை வைத்திருப்பதாக சொன்னீர்கள் / மேம்பாலத்தில் அடியில் / நல்லது இது அவ்வளவுதான் ***** கடவுளின்  பட்டியலில் நீர்மங்கள் இது ஒரு நவம்பர் மாத இரவின் காற்று கால்அதரைக் கடந்து இலைகள் முறிந்தன  கடவுள் வாழ்க்கை  புத்தகத்தை மகிழ்ச்சி எனும் பக்கத்தில் திறந்து வைத்திருந்தார் அவர்  மறு கையைப் பக்கங்களின் கீழே பிடித்திருந்தார் கதவின் வழியே ...