கவிதைகள்
கவிதைகள்
காது கொடுத்து கேளுங்கள்
சுருக்கென்று
ஒன்று சொல்லணும்
ஒரு கவிதையைப் படித்துவிட்டு
இப்படி சுருக்கென்று
இருக்கணும் என்றார்
சொல்லிவிட்டு உங்கள் கவிதையைச்
சொல்லுங்கள் என்றார்
சுருக்கென்றது...
-சு. வருண்குமார்
இருள் நிறைந்த சாலையில்
தன் தொழிலுக்காக நின்றிருந்தாள்
தேவையை மீறிய தன் வாழ்க்கைக்காக
அவளொரு அசிங்கம்
அவசரத்தில் பார்ப்போரின் கண்களுக்கோ தேவதை
எவரும் காணாத தேவதை
என்னுடனான அவளது பேச்சில்
சொற்களின் மதிப்பு மேலேறியது
நான் பேசி
நான்கு நாட்கள் கூட ஆகவில்லை
ஆணவப் படுகொலை
அன்றிலிருந்து இன்று வரை
இருள் வாழ்க்கை இருளை நோக்கி....!
-இர. பிரகாஷ்ராஜ்
Comments
Post a Comment