வெறுப்பு வாடை -ம.வீ.கனிமொழி

 வெறுப்பு வாடை -ம.வீ.கனிமொழி


அந்திவானம் போல 

குழம்புகிறது நெஞ்சம் 


விண்மீன்களின் வரவிற்காக

காத்திருக்கும் நிலவு போல

ஒற்றைச் சொல்லிற்காக

காத்திருக்கிறது வானம்


சிதறிய செவித் துண்டுகளில்

இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது

அவள் குழந்தையின் அழுகுரல்


தெறித்து விழுந்த 

அவள் மார்பகங்களின் குருதி

அப்பிஞ்சின் பசியைத் தீர்க்க

பாய்கிறது


போர் நிறுத்தம்

தேவையெனக் கதறுகின்றன

அந்நிலத்தின் மரங்கள்


வீசப்பட்ட சதைகளின் திசுக்களை 

நக்கிக் கொண்டிருக்கும் காற்றில்

வெறுப்பு வாடை


https://www.instagram.com/p/DJk_XYlSB4h/?igsh=YzljYTk1ODg3Zg==



Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு