ஆல்யன் கவிதை

ஆல்யன் கவிதை

 

அரை பாட்டிலில் தண்ணீர்

ஆடி அலைவது போல

மண்டைக்குள் ஏதோ கணம்

இரண்டாவது வகுப்பு பையனின் பையாய்

 

கையில் ஒட்டிருந்த

பஞ்சை கண்ட தாய்

நண்டாக வெடுக்கென

இழுத்தாள்

 

எங்கும் அழுக்குரல்

மனித ஆத்மா

முத்துக்காட்டு கரையாய்

 

கைகள் புடைத்து

என் வஜ்ராய்தம் வலுவிழைந்து

 

ஆதி ஆத்மாவின்

நினைவும் குரூரமும்

ஓநாயின் நசுக்கப்பட்ட

குரல் இசையாகவும்

 

குட்சிகளில் ஒழுகும்

கடைசி சொட்டு பசையில்

ஈக்களின் சண்டையும் அருவருப்பும்

 

எழுத்துகளில் கூட

வெளிவர தயங்குகிறது

சில நினைவுகள்

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு