தாகூரின் உடைந்த கூடு (நஸ்தானிர்ஹ்) -ப. பட்டி திவ்யா

 

தாகூரின் உடைந்த கூடு (நஸ்தானிர்ஹ்) -ப. பட்டி திவ்யா

 

    உடைந்த கூடு(நஸ்தானிர்ஹ்) என்ற குறுநாவல் 1901ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட வங்க மொழி நாவல் ஆகும்.1800களின் இறுதி என்பது வங்க மறு மலர்ச்சி காலகட்டமாகும். இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தின் தொடக்கம் என்றும் கூறலாம்.

    மனம் அதை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதானதல்ல. அவ்வளவு சுவையானது; சுகமானது. அதை மொழிவழி அறிந்து உணரலாம். ஆழ்மனமொழியை  அறிவின் பகுத்தறிவின் துணை கொண்டு நோக்க வேண்டும்.

   நாவலில் சாருவிடம் ஏற்பட்ட மன மாற்றத்தை அவள் கணவன் பூபதி நுண்ணிய மனமொழியறிவு கொண்டு பார்க்க முற்படுதல் வேண்டுமாய் தாகூர் தன் மொழிவழி முனைந்துள்ளார்.

   மேல் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ங்காள அறிவுஜீவி பூபதி. உயிர் மூச்சாக தீவிரத்துடன் அரசியல் பத்திரிகை ஒன்றினை நடத்தி வருபவர். சதா எந்நேரமும் அவருக்கு தன் வேலை மட்டுமே முக்கியம். சுதந்திரம் கிடைத்து எல்லோரும் நல்வாழ்க்கை வாழ தன் பத்திரிக்கை எழுச்சி கொள்ள செய்யுமானால் அதைவிட வேறு எதுவும் தனக்கு வேண்டாம் என தன்னலமற்ற உயர்ந்த லட்சியத்துடன் போராடி வருபவர் பூபதி.

    பூபதியின் வருகைக்காக காத்திருந்து காத்திருந்து சலித்த வாழ்க்கையை அலுப்புடன் வாழ்கிறாள் சாரு. அவளின் தனிமையை அறிந்து ஏதும் செய்ய முடியாத பணிச் சூழலில் பூபதி ஒரு யோசனை சொல்லி சாருவின் அண்ணன் உமாபதனையும் அவன் மனைவியையும் இவர்கள் வீட்டிலேயே தங்கச் செய்கிறான். அண்ணியின் அரட்டைப் பேச்சுகளைவிட தனிமையே சாருவுக்கு உகந்ததாகிவிட்டது. தன் அறையில் படுத்திருந்தபடி ஏதேதோ கற்பனையில் லயித்திருப்பாள் சாரு. இளமையில் உடலின் தினவென்பது மனத்தின் சோம்பலும் கூடத்தான். செய்வதற்கு ஏதுமில்லாதபோது கற்பனை பாழ்வெளியில் அலைந்து திரியும் பறக்க விரும்பும் தனிமைப் பறவையெனத் தன்னை நினைத்துக் கொள்வாள் சாரு. இந்நிலையில் பூபதியின் ஒன்றுவிட்ட தம்பி அமலன் கல்லூரி படிப்பை முடித்து விட்டு அண்ணனிடம் ஏதேனும் வேலை செய்யலாம் என கல்கத்தாவிற்கு வருகிறான். அண்ணனுக்கும் தம்பியை உடன் வைத்துக் கொள்ள ஆசை. தன்னுடைய பத்திரிகையில் பிழை திருத்தம் பார்க்க விருப்பமா எனக் கேட்கிறார். ஆனால் இலக்கியத்தின் மீது நாட்டமுடைய அமலக்கு அந்த பத்திரிகை அலுவலகம் சிறையைப் போலவே தோன்றுகிறது. மேலும் கவிஞன் எனும் அடையாளத்தை தேட முயன்று கொண்டிருப்பவனுக்கு அவ்வேலை விருப்பமான ஒன்றாக இருக்கவில்லை. அமலனைக் கட்டாயப்படுத்தாமல் வீட்டில் தங்கி விருப்பம் போல இரு என சொல்கிறார் பூபதி. மேலும் சாரு வாசிப்பனுபவம் மிக்கவள். அவள் தனிமையில் வாடுகிறாள், அவளுடன் உரையாடி முடிந்தால் அவளை ஏதாவது எழுதச் செய்யப் பயிற்சி கொடு என தம்பியிடம் கேட்டுக் கொள்கிறார் பூபதி. அமலன் சரியென்று வீடு வந்து சேருகிறான்.அமலனுடன் நட்புறவு ஆரம்பமாகிறது. உரிமை உறவும் தொடங்கி விட்டது. அமலன் கல்லூரிக்கு போகும்போது அணிந்துகொள்ள நல்ல அழகான பூ வேலைப்பாடமைந்த அங்கவஸ்திரம் தைத்து தருகிறாள். அவன் கேட்டவற்றையெல்லாம் செவிமடுக்காதது போல சென்று பின்பு அவனை திகைப்பூட்டும் வகையில் பரிசளித்து மகிழ்கிறாள்; மகிழ்விக்கிறாள் சாருலதா என்கிற சாரு.

    மலன் எழுதும் கவிதைகளில் பிழை கண்டுபிடிக்கிறாள். அவன் நீங்கள் இவ்வளவு பேசுகிறீர்கள் ஏன் எழுதக் கூடாது என அவளை தூண்டுகிறான் அமலனிடம் எழுதுவதற்கு விஷயங்கள் ஏதுமில்லை என்கிறாள் சாரு. அவளின் கிராம வாழ்க்கை, குழந்தைப் பருவம், சந்தை என எதாவது எழுத வேண்டியதுதானே என யோசனை சொல்கிறான் அமலன். ஆனால் அவள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அன்றாடும் நிகழும் உரையாடல்களின் பொழுதுகளை மனத்துக்கு மிகவும் நெருக்கமாக உணர்கிறாள் சாரு. யாருமற்ற தன் வெளியில் அறிவுச் சுடரொன்றை ஏந்தியபடி இளைய ஒருவன் கூறும் சொற்கள் ஒவ்வொன்றும் அவளது பாழ்நிலத்தில் பூக்கின்ற மலர்களாகின்றன. அழியாத கோலமாகிவிட்டிருந்த அவளது தனிமை மெள்ள கரையத் தொடங்கியது.

    அவர்களுக்கென தோட்டம் உருவாக்கினார்கள். அதில் அவர்கள் மட்டுமே பாடம் கற்றார்கள். அதில் அவன் நண்பனான் சாருவுக்கு, அவள் மாணவியானாள். அமலனுக்கு. ஒவ்வொரு மாலை வேளையும் அவர்களுக்கென அந்த தோட்டம் காத்திருந்தது. அது அழகான இலக்கிய சோலையாக மாறியது.

     அந்தச் சோலையில் மாணவி காத்திருந்து, நண்பனான ஆசிரியன் பல நேரங்களில் தாமதமாகவே வந்தான். அனைத்தையும் சாரு ரசித்தாள்.லாதித்தாள். மனம் உருகிய சாருவுக்கு உற்ற தோழனான் அமலன். அவளுடைய தனிமை அமலனால் காணாமல் போனது.அவளது உறக்கத்தின் கடைசி நினைவாகவும், விழிப்பின் முதல் முகமாகவும் அமலன் மாறிக் கொண்டிருந்தான்.

    இருவருக்குமேயான இலக்கிய உலகில் ருவருமிணைந்து ஒரு பத்திரிக்கை நடத்தினார்கள். யாருக்கும் அது தெரியக்கூடாது. யாரும் அதை படிக்க கூடாது. இது அவள் கட்டளை. ஏனென்றால் அது அவளின் மனவார்த்தைகளால் வடிந்த கவிதைத் தொகுப்பு. இரு படைப்பாளிகள்- இரு வாசகர்கள். அது அவளும் அவனும்.

     அவளின் மன வார்த்தைகள் வேறொரு இதழில் அச்சேறிவிட்டது. ஆசிரியனையும் மிஞ்சிவிட்டது. அவள் வார்த்தைகளின் வீச்சுகள் கணவருக்கு தெரியக்கூடாது என்றிருந்த அவளின் அமுலன் மீதானகள்ள மனதாக்கங்கள் பாராட்டப்பட்ட தாளீன் வழியாக தெரிந்து விட்டது.அந்த எழுத்தின் மூலம் அவள் அடைய விரும்புவது அமலன் தான் என சொல்லாமல் சொல்லி செல்கிறாள் என்று கூறிவிட முடியாது.

    அவளின் எண்ணத்தை அவன் மட்டுமே அறிய வேண்டும் என்.றிருந்தவற்றை பிறர் அறியும் வண்ணம் செய்ததால் இருவருக்குள் சிறிது மன நெருடல் ஆகிவிட்டது.

         இதற்கிடையில் அமலனின் விவாக நிகழ்வு அரங்கேற இருக்கிறது.

    இவள் மீதி இருந்த கோபம் கலந்த மன வருத்தத்தினால் அமலன் சாருவை ஏறிட்டு கூட பார்க்கவில்லை. அவர்களுக்கான சோலை மறைந்து ற்றிவாடி விட்டது. இப்போதெல்லாம் அமல்யனின் கட்டுரைகளை சாரு பிழை திருத்தம் செய்யவில்லை.

   குற்றவுணர்வும் காதலும் எதிர் எதிரே நிற்க காதல் கள்ளத்தனமாய் உட்புகுந்து அவர்களை நல்லிதயங்களை கூராக்கி பிளந்து அதில் கிளைத்து அமர்ந்து கொண்டது. அதன்பின்னான இரவுகள் பகல்களில் ஏதும் தனிமையின் கொடும் கரங்கள் சாருவை தீண்டவில்லை. ஆனால் அதைவிட கொடிய நாகமொன்று அவளது மூளைக்குள் பதுங்கி தனது தீநாவுகளினூடே விஷக் கங்குகளை அவளுள் புகுத்திக் கொண்டிருந்தது.

    சாருவின் கணவன் பூபதி நடத்தி வந்த பத்திரிக்கை விஷயத்தில் மைத்துனர் செய்த ஊழலால் பெரிய பண பிரச்சனையை சந்தித்தாலும் அவன் மீது சிறிது பழிச்சொல் கூட  கூறாத நம் பூபதி மனம் வெண்மையானது கபடமற்றது. அதன் காரணமாகவே சாருவுக்கும் அமலனுக்கும் இடையேயான உறவை தந்தை பிள்ளைகள் ஸ்தானத்திலிருந்து மகிழ்ந்தான். அமலன் திருமணம் ஆகி தேசம் சென்று விட்டான். அவன் எழுதிய சில கடிதங்களில் மண்ணி என்ற மரியாதை நிமித்தம் மட்டுமே காணப்பட்டது தவிர மனது நிறைந்த சிறுபிள்ளைத்தனமான, அன்பு மொழி நிறைந்த உரிமையான வார்த்தை மொழி அன்புகளை காணவில்லை. இது அவளை வாட்டி எடுத்தது. பெண்ணல்லவே நேராக தேசம் சென்று அவனிடம் கேட்டு விடலாமா என்று கூட யோசித்தாள். இதற்கிடையே இவ்வளவு நாள் பத்திரிக்கையை மணந்திருந்த பூபதி உண்மை மனைவி சாருவிடம் தஞ்ச வருகிறான். அதை அவளால் பரீசளிக்க்கூட முடியவில்லை. இறுதியாக கணவனால் மனைவியிடம் ஏற்பட்ட அந்த இடைவெளியை அமலனால் நிரப்பப்பட்டது. அன்பு மட்டும்தான் இந்த உலகத்தில் வஞ்சிக்கப்பட்ட ஒன்று. அவள் அமலனிடம் இழந்த அன்பை மட்டுமே கோருகிறாள் என்பது மட்டும் நிதர்சன உண்மை. சில நேரங்களில் அது தனக்கானது மட்டும்தான் என்ற நிலைப்பாட்டில் மனம் செல்லும் போது மெனக்கெடுத்து உறவைப் பேண வேண்டும். பொதுவாக பெண்கள் மட்டுமல்ல மனித மனதில் ஏற்படும் அன்பு இடைவெளியை நிரப்பும் மற்றொரு மனித மனத்திடம் மனம் செல்வது இயல்பு தானே.

    சாருலதாவில் புதுவித மனோ தத்துவத்தைக் காண்கிறோம். மதனிக்கும் மைத்துனனுக்கும் உள்ள உறவை வருணிக்கும்போது டாகுர், வெகு ஜாக்கிரதையாக விஷயத்தைக் கூறுகிறார். அது நட்பா. காதலா என்று சில சமயம் ஐயுறவேண்டி வரும். ஆனாலும் கணவனிடம் சாரு நடந்துகொள்ளும் விதத்தைக் கடைசி வரையில் கவனித்தால் சந்தேகங் கொள்வது தவறு என்று புலப்படும். மைத்துனன் மேல் அவள் வைத்த அன்பு, சகோதர வாஞ்சையும் சிரத்தையும் கலந்த ஒரு மன நிலையாகும். பூபதி தன் மனைவியை அறியாது சந்தேகிக்கவும் முற்படுகிறான். சாருவோடு நெருங்கிப் பழகாமல், வெளி விஷயங்களில் ஈடுபட்டிருந்தவனுக்கு அவள் மனோபாவம் எப்படி விளங்கும்?

     கதைக்கு முடிவு ஏற்படவில்லையே; திடீரென்று நின்று விடுகிறதே' என்று சிலர் கேட்கலாம். இறுதியில் சாருவின் நிலையைப் பார்த்ததும், பூபதியின் மனம் இளகி விடுகிறதல்லவா? சரி, என்னோடு வா!' என்கிறான். அத்தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படும் என்பதற்கு இதை ஏன் ஒரு சூசகமாகக் கொள்ளக்கூடாது? உடனே 'வருகிறேன்' என்று சொல்வது ஊடலுக்கு அழகன்று. அங்ஙனமே சாரு, இருக்கட்டும், பரவாயில்லை' என்கிறாள்.

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு