நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு . நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல் சந்திப்பு: ரா. அழகுராஜ் , ச. தணிகைவேலன் , இர. பிரகாஷ்ராஜ் ரா. அழகுராஜ்: நாடகம் , நடிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள் ? நான் ‘ கருஞ்சுழி ’ நாடகத்தை 2001 ல் பார்த்தேன். அப்போது , நாடகம் தொடர்பான எந்தவொரு அறிமுகமும் எனக்கு இல்லை. ஒரு பார்வையாளராக , அந்த நாடகம் எனக்குள்ளே ஒரு பாதிப்பை உருவாக்கியது. எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தியதென தெளிவான பதில் இல்லை. நான் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய பின் , அந்த நாடகத்தில் நடிப்பு தான் என்னை பாதிப்புக்குள்ளாக்கியது என்ற தெளிவான பதில் கிடைத்தது. இப்போது , நடிப்பு என்பதில் இருக்கும் கற்பனைகள் தான் என்னைத் தொடர்ந்து நாடகத்தில் இயங்கவைக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். அந்த நாடகத்தில் நடித்தவர்கள் என்னைப் போன்ற பார்வையாளர்களை கவர்ந்திழுக்கவே நடித்தார்களா ? புதிதாக நாடகத்திற்குள் வருபவர்களையும் இள...
Comments
Post a Comment