தாத்தா சொன்ன கதை -தவிடன்
தாத்தா சொன்ன கதை -தவிடன்
ஒரு நாள் இரவு ஏகாம்பரம் உறக்கம் வரவில்லை என்று தன் தாத்தாவிடம் கதை கேட்டான். அதற்கு அவன் தாத்தா (மெல்லிய குரலில்) கதையை தொடங்க ஆரம்பித்தார்.
அழகான சேலை கட்டி அன்னமயில் நடந்து வர அதிர்ந்து போனான் சோலை ராசு
ஆகாயத்திற்கு பாதாளத்திற்கும் மனம் மகிழ்ந்தான் என தொடங்கினார் தாத்தா.
அதிர்ச்சியில் உறைந்த அவன் மேல் வெண்ணீர் ஊற்றியது போல வந்தான் நாட்டரசன் என்னும் வேளையில் நாட்டரசன் சற்று ஓரமாக எட்டிப் பார்த்தான். சுற்றி எரிக்கும் கதிரவன் பல்லை இடிக்க நாட்டரசனோடு நகர்வலம் வந்து நடனமாடி நாள் பொழுதை கழித்தான் சோம்பேறி சோலை ராசு நங்கையின் பாங்கிகள் பாங்கனோடு பளிச்சிட பகலவனை காட்டிலும் வெளிச்சத்துடன் கூடினர் மன கொள்ளைக்காரிகள். அதன்பின் சோம்பேறி சோலைராசு அவர்களை கடந்து சோர்ந்து சோர்ந்து நடனம் ஆடினான்.
நாட்டரசன் நல்லவனாக நடிக்க இவனும் இசைவு கொடுத்தான். சோலை ராசு தமையன் மீது கொண்ட சினத்தால் தன்னுடைய கடமைகளை செய்ய மறுதலித்தான். திசையறியாமல் சுற்றி திரிந்தான்.அவனுக்கு செய்தி ஒன்று வந்தது கொடுத்தவன் ஊனமற்ற ஊனம் சின்ராசு. அதில் வந்த குறுஞ்செய்தி அடுத்த நாள் தலைப்புச் செய்தி என்ன என்று பார்த்தால் எலி கூட்டத்தை கவனிக்க பெருச்சாளி.
அந்த “பெருச்சாளிக்கு துணையாக சுண்டெலி” சுண்டலியின் உயர்வு பிடிக்காத பெருத்த பூனை ஒன்று உள்ளது. அந்த பூனையின் நாமம் துரைசாமி. அந்த பூனை நீர் மட்டுமே குடிக்கும். அந்த பூனையை அனைவரும் சாமி பூனை என்று தான் அழைப்பார்கள்.
கொரணியிடம் இருந்து வந்தவை மூஞ்சுரும், பெரிய பெருச்சாளியும். பிறகு பெரிய பெருச்சாளியிடம் எலிக் கூட்டம் செல்ல மூஞ்சூறு தனியாக வாழ்ந்து வந்தது. அந்த மூஞ்சுருவிடம் வாழ்ந்தவை தான் சாமி பூனையும், பேய் குரங்கும். பிறகு சாமி பூனை பெருச்சாளியிடம் செல்ல பேய்குரங்கு மதயானைக் கூட்டத்தில் சவாரி வந்தது. இவ்வாறாக காலம் கழிய வயது முதிர்ந்த சாமி பூனைக்கு ஒரு அவா. எப்படியாவது பெரிய பெருச்சாளியின் மரணத்திற்கு பின் சின்ன பெருச்சாளியை அமுக்கி ஏகாம்பரம் மீட்டை தன் வசமும் கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்தது. முயற்சித்தும் பயனில்லாமல் போக சுண்டெலிக்கு கவரி வீச தயாரானது என்று ஏகாம்பரத்தின் தாத்தா கதை சொல்ல ஏகாம்பரம் தூங்க சென்றான்.
Comments
Post a Comment