தொன்மக் கிணறு -ஆல்யன்

 

தொன்மக் கிணறு -ஆல்யன்

  இந்தப் பையனுக்கு வேற வேலை இல்ல எப்ப பார்த்தாலும் ஏதாவது நோண்டிக்கணும் கழட்டிக்கினும் மாட்டிக்கினும் தான் இருக்கும். சும்மாவா என்ன பணத்த தருதல அப்படிதான் ஆகும். கொஞ்ச நஞ்சம் ஓட்டாம ஓடுதுன்னு நாயகியும் பூனு பேசிக்கொண்டு போட்டாங்காட்டுக்கா லைட் எடுத்துக்கொண்டு போனாங்க.

   டம்மா டமார் -னு சத்தம் ராத்திரி அந்த தெருவை  கிழித்தது.. தெருவுல ஒன்னும் நிறைய வீடு எல்லாம் கிடையாது எண்ணி ஆறு வீடுதான் அதுவும் ஒரே பங்காளிங்க மட்டும் தான்.. முரளி சுத்தியால் அடித்தும் டிராக்டர் பாகங்களை கழட்டி எதோ சரி செஞ்சிகுனும் மொகத்தில சோர்வு இருந்தாலும் அடியில் கொஞ்சம் கூட கொரவு இல்லாம  சத்தம் கேட்டுது. காலையல ஆரம்பிச்சி வேல ராத்திரி 7 மணி வரைககஇழுத்துக் கொண்டே இருந்தது‌‌.கடுப்பான விக்கி “ஒத்த நம்ம கிட்டயே வேலை காட்டுது கிராக்கி வேற நிறைய இருக்குன்னா. ராத்திரிக்குள்ள மூணு நடையாச்சி அடிச்சா தான் சரியா இருக்கும் இல்லன்னா படம் ஓடாது” பசங்களுக்கு போன் போட்டு சொல்லிட்டேன் எல்லாரும் ரெடியா இருக்காங்கன்னு சொன்னா.. விக்கி முரளிக்கு சொந்த தம்பி இல்லனாலும் தம்பி மாதிரி தான் நடத்தியும் கூப்புடும் போதும் தம்பி தம்பி தான் கூப்புடுவான்.. விக்கி பன்னிரண்டாவது தான் படிக்கிறான் குடும்ப கஷ்டம் இவன் வேலைக்கு போனா குடும்பம் கொஞ்சம் தலை தூக்கும் அதோட அவன் செலவு தோதா இருந்தது.. வண்டி ஓட்டுறதுன்னா அவனுக்கு அவ்ளோ இஷ்டம் அத்தோடு இல்லாம நல்ல வேலைக்காரன் சும்மா சர் சர்னு  மம்முட்டி போடுவான். அவன் மம்முட்டி போட்ட தான் லோடு சீக்கிரம் ஏறும

    இன்னும் கொஞ்ச நேரம் தாண்டா ஆகும் தம்பி பேரிங் மட்டும்தான் போடணும். எண்ண மட்டும் பத்து லிட்டர் பசங்கள சாப்பாடு வாங்கிட்டு வரும்போது வாங்கிக்குனு வரச்சொல்லிடுனு சொல்லும்போது வீட்டுக்கு பின்னாடி கொஞ்சம் தள்ளி இருந்த கிணத்து ஓரமா சலசலன்னு சத்தம் ‌.

   முரளிக்கு சின்ன வயசுல இருந்து கிணத்துல நடந்த கதை எல்லாம் கேட்டு கேட்டு மனசுக்குள்ள ஒரு  பயம் இப்ப வரைக்கும்.. மொதல்ல துணி துவைக்கும் போது தடுக்கி நீச்சல் தெரியாமசெத்துப்போன ராஜி.. அதுக்கப்புறம் கொஞ்சம் வருஷம் கழிச்சு குச்சிபத்தார் ஆத்தங்கரையில் கழனி அவருக்கு.. வீட்ல இருந்து நாலு கிலோமீட்டர் போகணும் ஆத்து ஒட்டி . சின்ன வயசுல இருந்து தைரியமான ஆளு தினமும் கழனிக்கு நடந்து போயிட்டு வரப்போ ஒருநாள் பாம்பு கடிச்சு அங்க இருந்து பயப்படாம மழையில வேகமா நடந்து சரியா அந்த கிணத்துக்கா வந்து விஷம் தலைக்கு ஏறி போயிட்டாரு.நல்ல மனுஷன் வெவசாயத்துல நல்ல திறமையும் பக்குவமும்  நிறைந்த ஆளு.. யார் யார் எந்த வருஷம் எந்த ரகம் பயிர் வைக்கலாம் பட்டம் பாத்து சொல்லுறது பயிருக்கு அதிகமா பூச்சு இறங்கினா அவர் பார்த்து சொல்லுற மருத்த  வாங்கி அடிச்சா பயிறு தரமா இருக்கும்.என்னதான் இருந்தாலும் மத்தவங்க பயிரை பார்க்கும் போது அவரு கழனில தல தலன்னு பயிர் இருக்கும்.விடியங்காத்தால நாலு மணிக்கு எழுந்து பால் கறந்து சுசைட்டுல ஊத்திட்டு வருவாரு.. கணக்கு நோட்டு முடிஞ்சு புது நோட்டு மொதல் பக்கத்துல ஒரு திருக்குறள் எழுதுவாரு அப்படிப்பட்ட மனுஷன் பாம்பு கடிச்சா அன்னிக்கி தான் மழை வரணுமா,  காவலுக்கு இருந்த எல்லாரும் வீட்டுக்கு வந்துட்டாங்க “என்னென்னல கத்துனாரோ யாரெல்லாம் கூப்புட்டு இருப்பாரோ” னு சொல்லி சாவுல ஒரே ஒப்பாரி.

    அதே வருஷம் சின்ன கண்ணு வாரத்துக்கு வாங்குன ஆடு குட்டி போட பால் நல்லா சுரக்கணும்னு பால் தழையும் ஜௌண்டில் தழையும் தேடிக்குனுபோக கிணத்து பக்கத்திலேயே ஜவுண்டில் மரத்து மேலயே பால் தழ கொடியும் ஒன்னா நல்லா பச பசன்னு கொடி பரவி இருந்தது. தொரட்டுக்கொம்பு போட்டு சர சரன்னு கிளை எல்லாம் வலிச்சி போட்டாரு…ஒரு பெரிய கெள மேல பால் தர நல்லா வளர்ந்து கொடி ஓடி இருந்தது .அந்த கிளையில தொட்டி போட்டு வலிக்கு வலிக்க கொடி கொஞ்சம் வலுவா கெளையேட சுத்திக்குனு இருந்ததால உடைக்க கஷ்டமா இருந்துது…நல்லா வலுவா இழுத்துக்கிட்டே இருந்தாரு டப்புன்னு சத்தம் கெள முறிஞ்சு பின்னாடியே வந்து தடுப்பூ இல்லாம கிணத்து சுத்துகரையில சொரப்பாணம் வுட்டு மண்ட அடிச்சி கெணறு பூரா இரத்தம் ஆள் போயிட்டாரு…போன ஆள காணுமேனு தேடி வரும்போதுதான் பொண்டாட்டி பார்த்து ஊரையே கூட்டூற அளவுக்கு கத்துனா.

    ஒரு வருஷம் கழிச்சு சின்ன கண்ணு சினேகிதன் நாட்டார்  கிணத்து பக்கத்துல இருக்குற தடம் வழியா போன வீட்டுக்கு பின்னாடி சீக்கிரமா போய் சேர்ந்துடலாம்னு போனாரு…போறப்ப கட்டு விரியான் பாம்பு கடிச்சு கத்துனாரு அங்க வரப்புல பில் அறுத்துக்குனு இருந்த லட்சுமி எட்டி பார்த்து குடுகுடுன்னு ஓடி வந்து ஊருக்குள்ள எல்லாரையும் கூப்பிட எல்லாரும் வந்து ஆஸ்பத்திரி கூட்டிட்டு போகும் போது தாத்தா போயிட்டாரு…அந்த சீக்கிரத்துல ஊருக்குள்ள வந்த லட்சுமி கடிச்சது நல்ல பாம்பு நாகாத்தம்மா பத்து தலை இருந்தது..ஆள் உசரத்திற்கு எழுந்து நின்று படம் எடுத்தது அதை பார்த்து நான் அங்கேயே மூத்திரம் போயிட்டேன் சொன்ன உடனே எல்லாம் நம்பிட்டாங்க அடுத்த ஒரு வாரத்துக்கு நாத்து,களைனு வேலை செய்யற எல்லா இடத்திலும் பாம்பு கதை தான் ஓடுச்சு அது மட்டும் இல்லாம செத்துப்போன ராஜி தான் இது எல்லாத்தையும் பண்ற அப்படின்னு அரசு புறசா  பேச்சி.. அதுக்கப்புறம் ஊருக்குள்ள யாருக்கு  உடம்பு சரியில்லனு வேப்பிலை அடிக்க போனா எல்லாரும் ஒரு பொண்ணு தான் இவனை(ஹை) புடிச்சிருக்கா அவ காத்துதான் மேல அடிச்சி இருக்குன்னு  சொல்ல ஆரம்பிச்சாங்க.

  முரளி மனசுல இப்ப வரைக்கும் சின்ன வயசுல கேட்ட கதை எல்லாம் பயமா இருந்தது.மண்ணடிச்சிட்டு ராத்திரி வீட்டுக்கு வரும்போது கிணத்து பக்கம் திரும்பி கூட பாக்க மாட்டான். கிணத்து பக்கத்துல ஒரு வேப்பமரம் அது இன்னும் பயந்த கிளப்பி விடும்.

   நடுராத்திரி மூத்திரம் வந்தால் கூட பின்னாடி வர பயந்துகிட்டு அப்படியே அடக்கின்னு  முன்னாடி தெருவில் எல்லாம் படுத்துட்டு இருப்பாங்க பொறுமையா சந்துல போவான் அவன் சித்தப்பா மட்டும் தினமும் 10 மணிக்கு மேல தத்துவ பாட்ட போன்ல வச்சுக்கிட்டு லுங்கி கட்டி ஜம்முனு பேனுட்டு வருவாரு.

    ஒரு ஆர்வத்திலே 8:00 மணிக்கு போன எடுத்துக்குனு முரளி பேள போனா கிணத்து பக்கத்துல. நல்ல நிலா வெளிச்சம பயப்படாம கிணத்து பக்கத்துல ஓரமா போய் உட்காந்து டவுசர அவுத்து தோல் மேல போட்டான் சில்லுனு காத்து சுகமா இருந்தது.கிணற்றுக்கு கிழக்க மேற்க ஓரம் பனமரசால அத ஒட்டுனா போல புதருங்க பனைமரம் வேலி ஆட்டம் தெரியும் வெளியிலிருந்து பார்த்தா…. திடீர்னு மரத்திலிருந்து ஓல சரசரன்னு கீழ விழ முரளிக்கு கொஞ்சம் பயம் கிளம்பிச்சி. பாட்டி சொன்ன பீ பேய் கத நியாபகம் வந்தது.” பனைமரத்து மேல தான் பீ பேய் இருக்கும் யாரெல்லாம் ராத்திரி பேள வராங்களோ அவங்க பீய பின்னாடி இருந்து சாப்பிடும். திரும்பி எச்ச துப்பிட்டு திரும்பி பார்க்காம வந்தா எதுவும் பண்ணாதுனு” சொல்லி இருந்தா.. பயத்தோடு பின்னாடி திரும்பி எச்ச துப்பி மேல தலையை தூக்குன எலைங்க எதும் இல்லாம குச்சி போல வேப்பமரத்து கேளைங்க.. அதுக்கு பின்னாடி கருப்பா மப்பு நிலாவா மறைச்சு  இருந்தது…அவ்வளவுதான் சூத்துல பீ இல்ல குடு குடுனு டவுசர் கூட போடாம ஓடி வந்து தெருவுல போய் பொறுமையா படுத்தான். பயம் கொஞ்சம் கொஞ்சமா இறங்க தண்ணீர் தாகம் கரண்ட் வேற இல்ல மூணு மணி நேரம் கரண்ட் இருக்கும் 3 மணி நேரம் கரண்ட் இருக்காது இது ஒரு வழக்கமா இருந்தது அந்த ஊர்ல கொஞ்சம் மாசம்…பொறுமையா வீட்டுக்குள்ள கையால தடவிக்குனு  அண்டங்கா போயி சரசரன்னு சொம்புல தண்ணி எடுத்து குடிச்சு தண்ணியை மொண்டுக்குனு தெருக்கா வந்து திரும்பி பார்த்தான் தோட்த்து கதவு மேல கருப்பா யாரோ ஓட்காஞ்கிகுனு இருக்கிற மாதிரி இருந்தது. அம்மா அடிக்கடி வீட்டுக்கு பின்னாடி பார்த்ததா சொன்னேன் கதையெல்லாம் அவன் மனசுல இருந்தது.பயத்தோடு திரும்பி பாக்காம ஜம்களம் போத்திக்கினு படுத்துக்கினான். கொஞ்ச நேரம் அப்புறம் சித்தப்பா போனாரு பாட்டு சத்தம்” நெஞ்சம் இருக்கு துணிவாக நேரம் இருக்கு தெளிவாக” அவன் மனசுல இப்ப அந்த கருப்பு உருவம் ஓடிக்குனு இருந்துது.

    இப்பல்லாம் விக்கி வண்டி கூடயே வரத்துயில்லை வண்டி போனதுக்கு அப்புறம் ரொம்ப நேரம் அப்புறம் நடந்தே லோடு போட  வருவான். கேட்டா ஏதாவது சாகு சொல்லிட்டு இருந்தான் சின்ன பையன் அப்படித்தான் இருப்பானு முரளி எதுவும் கேட்டுக்கிறது இல்லை.. முரளிக்கு சின்ன வயசுல இருந்தே டாக்டர் மேல ஆசை எங்க உழவு ஓட்டுனாலும் குடுகுடுன்னு ஓடி போய் களப்ப மேல உக்காந்துக்குவான். மண்ண கீர கீர பின்னாடி நிறைய குருவி புழுவை துண்ண வரும் அதை பாக்குறதுக்கு அவனுக்கு அவ்வளவு விருப்பம்…பள்ளிக்கூடம் படிக்கும்போது நிறைய கூலி வேலைக்கும் மே மாத லீவுல  சைக்கிள் கடைக்கும் வேலைக்கு போவான்..பன்னிரண்டாவது பைலான அப்புறம் வண்டியே வாழ்க்கனு மாதிரி போச்சு. டிராக்டர் தொடங்கி அறப்புஅறுக்குற  வண்டிக்கு மாறுனா. சுத்து பட்டு பூரா அவன் பேரு பரவிச்சி மத்தவங்க ஓட்றதை விட அரை மணி நேரம் சீக்கிரமா முடிச்சிடுவான் எவ்வளவு தண்ணி களனியில் இருந்தாலும் நேக்கா அறுத்து தருவான்…குண்டு நெல்லுக்கு அவ அறுக்குற பதமே தனி  குண்டு நெல்லு போட்டவங்க முரளிதான் ஓட்டனும்  வேற யாரு வந்தாலும் வேணான்னு சொல்லுவாங்க.. என்னமோ  முரளி ஒன்றுக்கு அவ மேல ஒரு வெறுப்பு…எப்பவும் கவனமா இருக்கிறவன் வண்டியில் இருந்து இறங்கும்போது கால் தடுக்கி டமால்னு  கீழ விழுந்து தலையில ரத்தம் கழனி காரங்க தர்மாஸ்பித்திரிக்கு கூட்டிக்கிட்டு போனங்க ஓனர் வந்து ஒரு வாட்டி கூட அவனை பாக்கல.ஆசைப்பட்டு பைக் எடுக்க போனா சாட்சி கை ஏழுத்து போட சொன்ன உடனே ஓனர் மொற மொறைக்க வெளியே போயிட்டாரு…அப்படியே கொஞ்ச நாள் அப்புறம் அவனுக்கு மனசு விட்டு போய் வேலையில நின்னுட்டான்.

    வேலையவிட்டு நின்னு கொஞ்சம் நாள் அப்புறம்  பழைய டாக்டர் வாங்கி மணல் அடிக்கறதும் பங்காளிங்க கழனில வாரத்துக்கு பயிர் வச்சிக்கினு சொந்த விஷயத்துக்கு மட்டும் வண்டிய ஓட்டுனான். நிறைய பேர் வந்து வேலைக்கு டிராக்டர் ஓட்ட கூப்பிட்டும் ஓனர் தப்பா எடுத்துக்குவாரு அப்படின்னு போகல அவன் திறமையை மணல் அடிக்கிறதுல காமிச்சான்.

   அவ மணல் அடிக்க வரத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு நடைக்கு 100 ரூபாய் தான் ஆள் கூலி. இவன் நடைக்கு 150 தந்தான். ஒரு நாளைக்கு இரண்டு நடைக்கு மேல போனா ராத்திரி சாப்பாடு வாங்கி கொடுப்பான் அவன் கிட்ட வேலைக்கு வந்த நிறைய பசங்க காலேஜ் பள்ளிக்கூட பசங்க.. தான் செலவுக்கும் சில பேரு குடும்ப கஷ்டத்துக்காகவும் வந்தானுங்க.

    கூலி ஏத்துனதுனால மண் அடிக்குரவங்க நிறைய பேர் வந்து முரளி திட்டுனாங்க.அவங்க கிட்ட சம்பாரிச்சா என்ன பண்ண போற முன்ன விட மணல் நல்ல வெலை தான் போகுது பசங்க ராத்திரி பூரா கஷ்டப்பட்டா தான் நமக்கும் காசு. எல்லாம் சும்மா வந்து கஷ்டப்படல எல்லாரும் கஷ்டம் இருக்கு.முரளிக்கு உழைப்போட அருமை உனக்கு நல்லா தெரியும் அதே நேரத்துல வேலைன்னு வந்த வேலை மட்டும் பாக்காம பேசிட்டு இருந்தா அவ்வளவுதான் எல்லாருக்கும்…. சின்ன வயசுல இருந்து அவன் கத்துகுனது “உழைக்கணும் முடியிற வரைக்கும் உழைச்சுக்கிட்டே இருக்கணும்”... அதுக்கு மேல ஒன்னு நல்லா உணர்ந்திருந்தான்..”நம்ப சோர்ந்து போக கூடாது போகவும் முடியாது”

    வருஷம் கொஞ்சம் போச்சு அவனுக்குள்ள நிறைய மாற்றம் அவனோட உழைப்பு சாமி கிமின்னு எல்லா நம்பிக்கையும் போக வச்சிருச்சு. ஆனாலும், அந்த கருப்பு உருவம் கிணறு பற்றி பயமும் ராத்திரில  பனை மரத்திலிருந்து சத்தம் கேட்ட எச்ச துப்பிட்டு திரும்பி பாக்காம வர பழக்கம் அவன விட்டு போகல.

    ஒரு நாள் மண்ணுக்கு போக வண்டியில் ஏறும் போது கம்பி கீறி ரத்தம் வந்துச்சு சகுன சரியில்லைன்னு பசங்கள வீட்டுக்கு போக சொல்லிட்டான் வீட்டுக்கு போய் படுத்தான் மணி 11 வயத்த கலக்கிச்சி…இன்னைக்கு கிணத்துக்கா போறோம் என்னனாலும் பரவாயில்லனு வந்தான்…டவுசரை கழட்டி கிணத்துக்கு கொஞ்ச தூரம் தள்ளி உக்காந்தான் நல்லா சில்லுனு காத்து அதோட கொசு கடியும்.. ஏதோ பேச்சு குரல் பொறுமையா கெணத்து ஓரம் சின்ன மேட்டுக்கு பின்னாடி…டவுசர் போட்டுகின்னு பொறுமையா சுத்திகிட்டு மேட்டுக்கு எதிர் பாக்கமா பொதருக்கு பின்னாடி மறைவா ஒக்காங்சான்.

  ”ஏன் இன்னைக்கு லேட்டா வந்த எவ்வளவு நேரம் இந்த பொதருக்குள்ளேயே தனியா இருந்தேன் தெரியுமா”

      “வீட்ல எல்லாரும் தூங்க தேவயில்லையா உன்ன மாதிரியே எனக்கு”

   கோவமா கேட்டா. நான் வரலைன்னு நீ போயிட்டு இருப்பேன்னு பயந்துகிட்டு இருந்தேன்… அவனுக்கு சிறிய சிரிப்பு அவள் உடனே அவனை அனைச்சி ஒரு முத்தம் தந்தா. பொறுமையா முடிய எடுத்து பின்பக்கம் கொண்ட போட்டு இடதுபுறம் தோள்ல இருந்த புடவைய எடுத்து தரையில் விரிச்சு போட்டா…”கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்டியா இரு”ஒரு அணைப்போட அப்படியே படுத்தா.. திடீர்னு போன் மட்ட விழுந்தது அவன் பயந்து நழுவி எழுந்தான்.. அவனை இழுத்து படுக்கவச்சி  அவ தன்னோட ஆதிக்கத்தை காமிச்சா.. முரளி பொறுமையாக எழுந்து அவங்களுக்கு தெரியாம நடந்து வீட்டுக்கு வந்தான் .இந்த முறை மட்டை விழுந்தபோது அவன் எச்ச துப்ப மறந்துட்டான்.

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு