ஆர்த்தி -அகிலா சுப்பரமணி
ஆர்த்தி
ஆசை ஆசையாய்
பற்பல மொழிகள் பேசி
ஆடியவாறே ஓடித்திரிந்த
கால்களை நக்கி
மணலைத் தோண்டி கோட்டை கட்டும்
கைகளைக் கட்டி
கீச்சிட்டு ஒலிரும் மழலை சப்தத்தின்
வாயில் துணி திணித்து
முளைக்கா முலைகளை சப்பிக் கடித்து
பாவனைகள் பல செய்த
புன்முகத்தில் நச்சு தடவி நைத்து
நடப்பதேதும் அறியாது
கத்தி ஓலமிட
குரலில் சக்தியற்றிருக்க கிடத்தியதில்
பெண்ணுறுப்பு மிச்சம் கொஞ்சம்
மிஞ்சவில்லை
வில் கொண்டு காத்திடவும் கடவுள் இல்லை
தானாய் குருதி பீரிடும்
பருவம் கொள்ளாது
தொடையில் ஒழுகும் உதிரம்
ஓயாது அலையடிக்கிறது
காமன்களாலான உலகில்
-அகிலா சுப்பரமணி
Comments
Post a Comment