எடுத்தாளப்பட்ட பகுதி
அயோத்திதாசர் சிந்தனைகள்
யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
வேதம்
வேதமென்னும் வார்த்தையின் உற்பவத்தையும். சுருதியென்னும் வார்த்தையின் உற்பவத்தையும், அதன் தன் பொருட்களையும், அவைகளின் உற்பவத்திற்குக் காரணம் யாவரென்பதையும், முன்பு விசாரித்து பின்பு பிரம உற்பவத்தையும், பிராமணோற்பவத்தையும் விசாரிப்போமாக.
வேதமென்னுமொழி பேதமென்னு மொழியினின்று வடபாஷையில் பரதனென்பது வரதனென்றும், பைராக்கியென்பது வைராக்கியென்றும், பண்டியென்பது வண்டியென்றும், பாலவயதென்பது வாலவயதென்றும் வழங்குதல்போல், பேத வாக்கியங்களென்பதை வேத வாக்கியங்களென்றும் தமிழில் வழங்கி வருகின்றார்கள்.
அத்தகைய பேதவாக்கியங்கள் யாதென்பீரேல் ஜெகந்நாதனென்றும், ஜெகத்ரட்சகனென்றும், ஜெகத்குருவென்றும் வழங்கும் புத்தபிரானாலோதிய முப்பிடசுமென்றும் திரிபீட வாங்கியங்களே திரிபேத வாக்கியங்களென வழங்கலாயிற்று. அப்பேத வாங்கியங்கள் யாதெனில்:-
ஸப்ப்பாபஸ்ஸ அகரணம்
குஸ்வஸ் உப ஸம்பதா
ஸச்சித்த பரியோதபனங்
(ஏதங் புத்தான ஸாஸனம்)
அதாவது;- பாபஞ் செய்யாதிருங்கள், நன்மைக் கடைபிடியுங்கள். உங்கள் இதயத்தை சுத்தி செய்யுங்கோளென்னும், மூன்று வாக்கியங்களும் மூன்று பேதமாயிருந்தபடியால் திரிபேத வாக்கியங்களென்றும், பசுவன் மூன்று, வேத வாக்கியங்களையோதுங்கால் அட்சரங்களுடைத்தாய வரிவடிவில்லாமல், ஒலிவடிவாம் மிகடபாஷையாகும் பாலி பாஷை வழங்கிவந்தபடியால், மேற்கூறியுள்ள மூன்று பேதவாக்கியங்களையும் ஒருவர் நாவினாலோதயும், மற்றோர் செவியினாற் கேட்கவுமிருந்தது கொண்டு அவற்றை கருதி வாக்கியங்களென்றும் வழங்கிவந்தார்கள்.
தெளிதல்
மேற்குறித்த வேதம், உபநிடதம், பிடசம், உபநயனம், தேவநிலை. தேவர்கள் முதலிய பகுதிகளை நன்கறிதல் மானிடராய் ஒவ்வொருவருடைய கடன் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஒன்றைப் பரியாலோசியாமல் அங்கீகரித்தல் மூட மதியாகும். மணிதரென்பாரொவ்வொருவருக்கும். அறிவு உண்டு, அவ்வறிவைச் சிறுக சிறுக விசாலப்படுத்திப்பார்த்தால் தான், நமது மானிடரென்ற பெயருக்கு ஒருவித மதிப்புண்டாகும். இல்லாவிட்டால் சொன்னதைச் சொல்லும் கிள்ளைப்போலும், காட்டிய கைபக்கம் குலைக்கும் நாயைப்போலுந்தான் நம் நாட்டில் நாம் விளங்குவோம் என்பது திண்ணம்.
சில்லாண்டுகட்கு முன்னர், நமது இந்தியாவில் பல வேதக்காரர்கள் தோன்றினார்கள். அவர்களுள் பல வாதங்களேற்பட்டிருந்தது. அவர்கள் மதத்தின் நிமித்தம் பல அரசர்களைப் படைத்தார்கள். ஒருவருண்டாக்கிய மதத்தை மற்றொரு அரசாங்கத்தார் அழித்தார்கள். ஒருவர் கடவுளை, மதத்தை, குருக்களை, கோவில்களை, அரசாங்கத்தை, பிரஜைகளை இன்னொரு கூட்டத்தார்கள் தொலைத்தார்கள். இப்படியே எப்போதும் மதச்சண்டையும், கடவுள் சண்டையும், கோவில், குருக்கள் சண்டையும், அரசர், குடிகள் சண்டையும், நீடித்திருந்தது. இவைகளுக்கு காரணம், தற்காலம் “நாங்களே! யதார்த்த பிராமணர்” என்று பொய்சொல்லி இந்திய பைத்தியக்காரர்களை வசப்படுத்தி ஆண்டு அடிமையாக்கி வைத்துக்கொண்டுள்ள பாரசீக ஆரியர்களென்னும் பார்ப்பாரப் படு பாவிகளேயாகும்.
இப்பாரசீகர்களாகிய ஆரியர்கள், பிராமணர்களாக இருக்கின்றார்கள் என்று சத்தியஞ்செய்ய, அக்கினி மதத்தாருக்கு ஆத்திரம் அதிகரித்திருக்கின்றது. பூர்வ பவுத்தர்களெல்லாம் ராக்ஷசர்களென்று உரக்கக்கூற இந்துக்களுக்குப் பகைமை இருக்கின்றது. இந்துக்களெல்லாம் கருங்குரங்குகளென்று நிக்ஷயமாகச்சொல்ல, பார்ப்பார்களுக்கு அதிகாரமும், அறிவும் இருக்கின்றது. இவ்விதமான பொருமையுரைந்த இந்தியாவில் 'யதார்த்த பிராமணன்' இருக்கின்றானென்றால் அவனது லக்ஷணம் இன்னதென்று நமக்குத் தெரியவேண்டுமல்லவா? நாமெல்லாம் வேதத்தின் சிற்சில விதிகளைப் படித்திருந்தாவல்லவா கயிறு மாட்டிக்கொண்டிருப்பவன் பிராமணன். கத்தி வைத்துள்ள கசாயி அரசன், படி வைத்துள்ளவன் வாணியன், புல் சுமை தூக்கியவன் சூத்திரன் என்று நமக்குத் தெரியும். படித்தறிவதற்கில்லாமல் ஒருவன் சொல்லுவதில் நம்பிக்கை வைப்பதால்தான். அன்னம் சமைப்பவனையும், அன்னம் பரிமாறுகிறவனையும் (கூக், பட்லர்) பிராமணனென்றும், மதுபானக் கடைகளில் எச்சில் பாத்திரம் எடுப்பவனை வைசியவனென்றும் தோல் தைப்பவனையும், மலமெடுப்பவனையும் சூத்திரனென்றும், அரபியா தேசத்து மதக்காரர்களை சகோதரர்களென்றும் இந்தியாவில் உடன்பிறந்த சொந்த பவுத்த சகோதரர்களைப் பகைவர்களென்றும் நம்பிக்கைக் கொண்டிருக்கின்றோம்.
இவ்வித மோச மூட கேவல புத்தியுள்ள நமது தேகம் ஒரு உண்மையில் நின்று, ஒரு மனமாக எதையும் ஆலோசிக்க முடியாமலிருக்கின்றது. அதின் காரணம் இது தானென்று தெரிந்துகொள்ள, நமக்கு நமது இந்தியாவின் சொந்த இரத்தம் நமது தேகத்தில் ஒடிக்கொண்டிருக்கவில்லை. ஒரு பக்கம் பார்ப்பார தந்தையின் விந்துவால் உண்டான இரத்தமும், இன்னொரு பக்கம் இந்திய தாயால் உண்டான இரத்தமும் ஒடிக் கொண்டிருக்கின்றன. அவை ஒன்றோடொன்று சண்டித்துவிட்டால் கருங்குரங்குகளாகியவர்களுக்கு கோபம் பெருகி விடுகிறது. அக்கோபம் தணிய பவுத்தர்களை அழிக்க நேரிடுகின்றது. இந்த நிலைமை நமக்கிருக்குமட்டும் அதெப்படி பிராமணனைக் கண்டுக்கொள்ள முடியுமென்பது பெருஞ்சங்கையேயாகும்.
இந்தியாவில் இருக்கும். வேதங்கள் ஒன்றுக்கொன்று ஊசியைப்போலும் உதவக்கூடியதேயாகும். ஒரு மனிதன் வயிறு நிறைய புசித்தால், அடுத்த மனிதன் அடையும் பலன் என்ன? ஒன்றுமில்லை.
தேவர்கள்:- மனிதர் கண்களுக்குத் தெரியாமல் இருக்கும் ஒரு கூட்டத்தார்களுக்கும் பூலோகத்தில் நம்மை ஏமாற்றி வாயடைத்து நமது தன தான்யத்தை உண்டு வளர்பவர்களாகிய பிராமணர்களுக்கும் பெயராகும். நமது கண்களுக்குத் தோன்றா தேவர்களுக்கு மேலுலக தேவர்களென்றும், நமக்குத் தோன்றும் தேவர் (பிராமணர்)களுக்கு பூலோக தேவர்களென்றும் சொல்லப்படும். தன்னை, ஒருவன் பிராமணன் என்று சொல்லிக் கொள்வதற்கு, தான் எவ்வகையான பொய் நியாயங்களைக் காட்ட வேண்டுமோ, அத்தனையும் அவன் காண்பித்தே தீருவான். அப்படிப்போலவே முற்காலத்தில் இருந்த சிற்சில பெரியோர்கள் தன்னையறியாத மூட பிராமணர்களிடத்தில் தீக்ஷைப்பெற்று உபநயனக் கயிற்றைத் தாங்கி தெய்வநிலையை யடைந்து தேவர்களாய் இருக்கின்றோம் என்று கொடிகட்டி தெருவெல்லாஞ் சுற்றி தன்னையறிவித்து ஏழைக்குடிகளை பலாத்காரமாய் வணங்கச்செய்தார்கள்: அவர்கள் சாகுங்காலங்களிலே சமாஜத்தில் சேருவார்கள். அப்படிச் சேருபவர்களுக்கு சமாஜி என்றும் சமாதி என்றும் சொல்லி வைத்தார்கள்.
முற்கால பிராமணர்களிடத்தில் உபநயனம் பெற்றுத் தெய்வ நிலையடைந்து தேவர்களாக இருந்து சமாதியடைதலே பிராமணர்களின் அல்லது தேவர்களின் முடிபாகையால். அத்தேவர்கள் செத்து சேரும் இடங்களுக்கு மோக்ஷமென்று வழங்கினார்கள். இந்த மோக்ஷமும், சிவமதம், நாராயணன் மதம், பிரமன்மதம் என்ற மத தேவதாஸ்தலங்களாக பாவிக்கப்பட்டிருக்கின்றது. இதில் பவுத்தமென்பதும் ஒரு மதமென நினைத்து பார்ப்பார் மத மோக்ஷத்தில் ஒன்றாகக் கணக்குக்கூட்டி காட்டி வைத்திருக்கிறார்கள்.
*******
வேஷபிராமண வேதாந்த விபரம்
சகோதரர்களே! வேஷப் பிராமணன் என்றபோதே அவன் உண்மையான பிராமணன் அல்ல என்பது அதின் பொருளாம் என்பதுங்களுக்குத் தெரியும். அதாவது ஓர் தேயத்தைக் குடிபடையமைச்சுடன் ஆண்டுவரும் அரசனை மன்னனென்றும், இறைவனென்றுங் கொண்டாடி குடி படைகள் யாவும் அவனடைக்கலத்திலு மடங்கினிற்கும் அவனே யதார்த்த ராஜனாவன்.
ஓர் எளிய குடும்பத்தோன், அவ்வரசனைப்போல் நடையுடை பாவனைக் காட்டி, அரசனென்று சொல்லி நடிப்பானாயின், அவனை வேஷராஜனென்று கூறுவர்.
இலட்சம் பொன்னுக்கு மேற்பட்ட திரவியமுடையவளை இலட்சுமியென்றால் அவன் இலட்மியேயாவாள். உடுக்கக் கந்தையும் குடிக்கக் கூழுமில்லாதாள் இலட்சுமியென்றழைக்கப்படுவாளேயாயின், அவன் நாமலட்சுமியேயாவாள்.
அதுபோல் நீதியும், நெறியும், வாய்மையும், தண்மையு நிறைந்த ஒருவனை, மற்றும் விவேகிகள் பிராமணனென்றழைப்பார்களன்றி, அப்பிராமணன் தன்னைத்தானே பிராமணனென்று சொல்லித் திரியமாட்டான்.
பிராமணர் செயலோ, தன்னைப்போல் சருவ உயிர்களையும் பாதுகாத்தலும், சாந்தகுண பெருக்கமுற்று சகல பற்றுகளுமற்று, சமதர்ம நிலையில் நின்று சருவசீவர்களுக்கும் பகாரியாக விளங்குவார்கள். இவர்களையே யதார்த்த பிராமணரென்று கூறப்படும்.
இந்நியாயர்களை மகடபாஷையில் பிம்மணரென்றும், சகடபாஷையில் பிராமணரென்றும், திராவிடபாஷையில் அந்தணரென்று மழைத்தார்கள். ஒரு க்ஷத்திரியன் முத்துசாமியென்னும் பெயர் வைத்துக்கொண்டிருப்பானாயின், அவனை க்ஷத்திரியனென்று மற்றவரறிய முத்துசாமி வர்மாவென்னுந் தொடர்மொழியை சேர்த்துக்கொள்ளல் வேண்டும். ஒரு வைசியன் பொன்னுசாமியென்னும் பெயரை வைத்துக் கொண்டிருப்பானாயின், அவனை வைசியனென்று மற்றவரறிய பொன்னுசாமி பூதியென்னுந் தொடர்மொழியைச் சேர்த்துக் கொள்ளல்வேண்டும். ஈதன்றி 44-ம் வசனத்தில் இவர்கள் வருணாசிரம விதிப்படி பிராமணன் பஞ்சு நூலினாலும் க்ஷத்திரியன் சணப்பநூலினாலும், வைசியன் வெள்ளாட்டு மயிரினாலுத் திரித்த பூணூலணைதல்வேண்டும்.
*******
தெளிதல்
உலக மடங்களிலும் உள்ள மத ஆசிரியர்கள் தங்கள் மத ஸ்தாபனங்களைத் தங்களால் கூடியமட்டும் நுட்ப திட்பமாகவே சொல்லிவைத்திருக்கின்றார்கள். அந்நூற்களைச் சாமானிய மனிதர்கள் படித்தோ கேட்டோவிட்டால் உடனே அவர்களைப் பின்பற்ற நடையொன்றுமிராது. ஏனெனில் முற்கால மனிதர்கள் தங்கள் மூளையைச் செலவிட்டு எழுதிய பொய்க்கதைகள். இக்கால மக்களுடைய மூளையைத் தகனம் பண்ணுகின்றது. அதனால் அறிவு சாம்பலாகின்றது. ஆராய்ச்சி என்னும் பவுத்தத்திற்கு தடையுண்டாக்குகின்றது. சமதர்ம பாட்டைக்கு முன்னிட்டு அடைக்கின்றது. தேச தெய்வமென்னும் விளக்கை அணைத்துவிடுகின்றது. கல்வி, கைத்தொழில், மருத்துவம் முதலிய அபிவிர்த்தியை வேரோடு பிடுங்கி எறிகின்றது. இது பிரத்தியக்ஷம் மனிதருடைய மூளைப் பழுதுபட்டபின்பு அவர்கள் எதையும் ஆராய்ச்சி செய்யமுடியாது. முதலில் மதஸ்தாபகர்கள் சொல்லிவைத்த மதபித்தில் மூழ்கி பாபத்திற்கு ஒரு கடவுள், புண்யத்திற்கு ஒரு கடவுள், மோக்ஷத்திற்கு ஒரு கடவுள். நரகத்திற்கு ஒரு கடவுன், கண்களுக்கு தெரிய ஒரு கடவுள். தெரியாதிருக்க ஒரு கடவுள், சுருங்கச் சொல்லின், காற்று, மழை, கடல், பூமி முதலிய வஸ்துக்களும் கடவுளென்று ஏற்படுத்தி விட்டு அவர்களுடைய சந்ததிகள், வம்சங்கள், குலங்கள், ஜாதிகள், நாங்களே என்றும், எங்கள் மூலமே நீங்கள் சர்வ கைங்கர்யங்களும் செய்யவேண்டும். உங்களுடைய சுகபோகங்களுக்காகவே எங்களை பிர்மா பூமியில் படைத்து தரகுவேலைச் செய்ய, ஆக்ஞாபித்து, பஞ்சாங்கப் புத்தகத்தைக் கையில் கொடுத்து வைத்துள்ளார். என்று நமக்குச் சொக்குபொடி போட்டுவிட்டார்கள் - போட்டு வருகின்றார்கள்.
இங்ஙனங்கூறித் திரியும் கட்டுக்கதைகளுள், தங்களை ஆதி மனிதரென்றும், பூமியில் தங்களுக்குயர்த்தவர்களொரு வருமில்லை, நாங்களே பூதேவர்கள் என்றும், நெடுநாளாக பொய் சொல்லி ஜீவித்து வந்திருக்கின்றார்கள். இவர்கள் தங்களை பிராமணர்களென்று சொல்லிக்கொள்ள கடமைப்பட்ருக்கின்றார்களே அன்றி பிராமணர்கள் ஒழுக்கம் இன்னது. அதன்படி நான் நடந்து வருகிறவன், அல்லது எவன் அவ்விதம் நடக்கின்றானோ அவனும் பிராமணனேயாகுவான், எவன் நடவாமலிருக்கின்னோ அவன் மெய்யாகவே நீச்சனாவானென்று, வெளிவந்து சொல்லி பூர்வ பிராமணத்துவத்தை நிலைநாட்டக் காண்கிலோம்.
முற்காலத்தில் யாரோ சிலர் பிரமாவின் முகத்தில் பிறந்து வளர்ந்துவரும் கூட்டத்தார்கள் இவர்களே என்று குறித்து வைத்திருந்தாலுஞ் சரியே, அல்லது இன்னின்ன நூல் (வேதங்)களைக் கையில் வைத்திருப்பவன். படித்துப் பார்ப்பவன், கேழ்கப்படிப்போன் பிராமணன் என்று குறித்து வைத்திருந்தாலுஞ் சரியே. அக்கூட்டங்களில் யாதார்த்த பிராமணன் இருந்தாலும் சரி, வேஷ பிராமணன் இருந்தாலும் சரி. இவ்விருவகை பிராமணர்கள் பிரபஞ்சத்தில் ஜீவித்திருந்தால் உலகிற்கு என்ன பலன் உண்டாகப்போகின்றது? எந்த ஏழை எளிய குடும்பங்கள் சீர்திருத்தமும் செவ்வச்செருக்குமடையப் போகின்றது? அதொன்றும் முடியாது. இப்படியிருக்க, மெய்யான பார்ப்பான் இருக்கிறான், பொய்யான பார்ப்பான் இருக்கிறான் என்று சொல்வோமே யாமாயின் அவ்விருவகைப் பார்ப்பார்களும் தற்காலமுள்ள பிராமணர் கூட்டத்தில் தானிருக்கின்றார்கள். அக்கூட்டத்தில் ஒருவனை ஏற்றும் மற்றொருவனைத் தூற்றியும் வருகின்றோம் என்றதாயிற்று.
ஆனாலும் நம்மவர்கள் பிராமணம் என்றால் என்ன? அதின் உற்பவம் எது? நமக்கு பிராமணம் என்னத்திற்கு? ஆடும் பைத்தியர்கள் பிராமணத்தைப் பூஜிக்குங் காரணம் என்ன? பிராமணன் முகத்தில் யோனி இருக்குமா? முகத்தில் பிறந்தவன் பிரமாவாகுவானா? பிராமணன் (பிரமா) விந்துக்குப் பிறந்தவனுக்கு என்ன பெயர் வழங்கல்ஸவேண்டும் என்ற ஆராய்ச்சியில் இறங்கினோமில்லை. எவனாவது நான் பிராமணனென்றால், பிராமண பீஜாய நம என்று கும்பிடு போடத்தான் கற்றுக்கொண்டிருக்கின்றோம். இங்ஙனம் நாம் கும்பிட்டெழ தமக்கு நமது தேசத்தில் பிராமணன் தேவை என்றால் அது எந்த நீதி ஸ்லத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்? ஒரு தாய்க்குப் பிறந்த நான்கு குமாரர்களில் மூத்தவனுக்கு. சர்வ சுதந்தரமுண்டு. அவனை நாடோறும் மற்ற மூன்று சகோதரர்களும் கும்பிட்டு வழிபடவேண்டும். மூவர் சம்பாத்தியங்களையும் மூத்தவன் ஒருவனே அனுபவிக்க வேண்டும் என்று இந்த அகில உலகத்தில் எந்த மதத்திலாவது, ஜாதியிலாவது, தேசத்திலாவது. நீதிமன்றத்திலாவது புத்திமான்கள் ஒப்புக்கொள்வார்களா? இல்லை இளையவன் உஜ்ஜீவிக்க மூத்தவன் அன்னாகாரம் உட்கொள்ளவேண்டுமென்று நாம் சொன்னால், இதைக்கேட்டு சிரிக்காதவர்கள் உலகத்தில் யாராவது இருப்பார்களா? அப்படியிருந்தால் அவர்களை நாம் மிருகத்துடன் சேர்க்கமாட்டோமா? யோசித்துப் பாருங்கள்.
இக்காலத்தில் நமக்கு வேண்டுவது நல்ல அறிவு, நல்ல கைத்தொழில், நல்ல நாகரீகம், நல்ல நடக்கை, நல்ல சகோதரத்துவம், நல்ல கல்வி, நல்ல ஜீவனம் முதலியவைகளேயாகும். இவைகளை விடுத்து மனிதரில் பிராமணன் இருக்கின்றான் என்றும், அவனுக்கிருப்பது. உடல் அடையாளமா? பாஷையடையாளமா? அப்படிக் கொன்றும் நிர்ணயித்து வைத்திருக்கவில்லை ஆதல் பற்றி இக்காலத்தில் பிராமணனே தேவையில்லை. எல்லாரும் பிராமணர்தான். எல்லாரும் சூத்திரர்தான் என்று வாழ்தலே மேலாகும் சிறிது காலங்களுக்கு முன்னர், பவுத்தத்திலும் பிராமணர்கள் இருந்ததாக பல கதைகள் எழுதி காட்டுவார்கள் அது உண்மையில் ஏற்றுக் கொள்ளப்படாததே பிராமணத்திற்கும் பவுத்தத்திற்கும், சம்பந்தமே கிடையாது. பவுத்தம் உலக சீர்திருத்த தர்மமாகும். அதற்கு ஜாதி, மதம், வேதம், ஆசாரம் முதலியன கிடையாது. ஆரிய வேஷபிராமணர்களே தங்கள் ஜீவனவிர்த்திக்காகப் படைத்துகொண்ட பொய்க் கடவுளர்களையும், மதங்களையும் பவுத்தத்தோடு சேர்த்து புத்தரும் எங்கள் தெய்வமென்று சொல்லி இந்தியாவைக் கெடுத்துவிட்டார்கள். இந்து மதமே பிராமண மதம்.
ஆனால், நம்மை நெடுநாளாக ஏமாற்றி வருகிற பிராமண கொள்கை, மிகத் தந்திரமானது. அதின் லக்ஷணமோ நம்மைக் கவரும் மந்திரத்தால் கட்டப்பட்டுள்ளது. அது இருண்ட இந்தியா என்னும் பெரியமரமாகும் அம்மரத்திற்கு கடவுள், மதம், வேதம், ஜாதி என்ற நான்கு கிளைகள் உண்டு. அக்கிளை நடுவில் இந்து என்னும் கூடு கட்டியுள்ளது. அக்கூட்டில் மும்மூர்த்தி மதமென்னும் கல் முட்டை இட்டு, அதைப் பார்ப்பார் என்னும் கழுகு அடைக்காத்துள்ளது. தனது கல்முட்டையை பொன் முட்டை என்று சொல்லி இந்திய மக்களின் மதியை மயக்கி வருதலைக் கண்ணிற் கண்டும் காதாற் கேட்டும், மனதிலுணர்ந்தும், கவலையற்றிருக்கின்றோம். ஆராய்ச்சி என்னும், கல்லெறிந்து கழுகைத் துரத்தாமலும், சுயசமதர்மமென்னும் வாள் கொண்டு மரத்தை வெட்டி கூட்டை வீழ்த்தாமலும் பவுத்தம் என்னும் சஞ்சீவியை அக்கன் முட்டைமேல் பிரயோகித்து முட்டையை உடைத்து உண்மை அறிதற்கின்றி, மவுனஞ் சாதித்து சாகின்றோம். இவ்வித ஞாய விரிவை எடுத்துரைக்கும் பவுத்தர்களை நிந்திப்பதல்லாமல் சிந்திப்பதில்லை. பிராமணர் அல்லாதவர்களால் எழுதப்பட்டுள்ள பிராமணத்துவத்தைத்தான் யாதார்த்த பிராமண வேதாந்த விவரமென்று நாம் சொல்கின்றோம். பிராமண மதத்தார்களே எழுதி வைத்துள்ள பிராமணத்துவத்தை, வேஷபிராமண வேதாந்த விவரமென்று இழிவுபடுத்துகின்றோம். காரணமோ மேற்கூறிய இருவகை பிராமணத்துவத்திற்கும் அப்புறப்பட்டவர்களாக, இக்கால பிராமண ஜாதிகள் உயிருடனிருக்கின்றன.
இப்படியாக நம் நாட்டு பிராமணன் நிலையை நாம் கூற வேண்டிய காரணமென்னவெனில், இக்காலத்திலிருப்பவர்கள் அந்தணர்களாயின், இவர்களுடைய ஒழுக்கத்தை நாம் நேரில் கண்டுள்ளோம். இவர்கனது ஆதிகால நிலமை இன்னதென்று நாம் ஆராய்வதில்லை. ஆதிகால அந்தணனுக் கொப்பானவனே இக்கால அந்தணனென்று நாம் சத்தியம் சொல்கின்றோம். இவனுக்காக சண்டைப் பிடிக்கின்றோம். இவனுக்காக நம் சகோதரர்களை இம்சிக்கின்றோம். இதனால் பிராமண நிலையை அறிந்தோதுகின்றோமில்லை.
தன்னிற்குள்ளே தோன்றும் சிற்றின்ப துற்செயல்விருத்தியால், தேகங்கெட்டு சதா துக்கத்திலாழ்வதுபோல், தன் அறிவு வளர்ச்சியால் தோன்றும், பேரின்ப நற்செயல் விருத்தியாம் உண்மையுணர்ந்து, உலக போதகனாகவும், உலக நீதிமானாகவும், உலக ஒளியாகவும், சமதர்மத்திலும், சத்தியதர்மத்திலும் நிலைப்பதியல்பு. இவனே உலக மர்மத்திலிருந்து சிந்திபெற்றோன். ஆதலால் தான் கீழ் உலகம், மேலுலகம், மோக்ஷம், நரகம், கடவுள். பேய் என்று பொய் சொல்லாமல் உண்மைப் பேசுகிறவனெவனோ அவனே அந்தணனென்று சொல்லிவைத்தார்கள்.
******
விபூதி ஆராய்ச்சி
வள்ளுவர்கள் கூறும் மாபூதி விவரம்.
வட இந்தியாவில் ஸாக்கா ஸாக்கை என்று வழங்குங்கூட்டத்தார்களுக்கு, தென்னிந்தியாவில் வள்ளுவர் என்றும் நிமித்தகரென்றும் அழைக்கப்படும். வள்ளுவர்களுடைய நிலைமையைப்பற்றி சிறிது முன்பே கூறியுள்ளது. அவர்கள் தென்னிந்தியாவில் சில பாகங்களில் ஊருக்கு வெளியே வசித்தவர்கள்; வசிப்பவர்கள். சென்னைக்கு அருகில் திருவளூர் என்ற கிராமமும் ஒரு ஆலயமும் இருக்கின்றது. வள்ளுவர்கள் ஒரு பழங்குடிகளென்று நம்பலாம். வட இந்தியாவில் எப்படி சிலர் இந்துக்களாகாமலிருக்கின்றார்களோ? அப்படியே தென்னிந்தியாவில் இந்த சாக்கையர்களிருக்கின்றார்கள். இவர்களுடைய கொள்கை இக்காலத்தில் இவர்களிடமில்லை. இவர்களின்னாரென்றுந் தெரியவில்லை. இவர்கள் பெரும்பாலும் விபூதி பூசினவர்கள்; பூசி வருகின்றார்கள். நடு நெற்றியில் மூன்று கோடுகளும் அதற்கு கீழ் தாமரை மலர்போல் சிறிய கோடும் பூசுவார்கள். பூசும் முன்னால் சாம்பலைக் கையிலெடுத்து மாபூதியின் காரணத்தைப் பாடி தியானிப்பார்கள். அப்பாடலில் மாபூதியுண்டாகிய சரியான காரணத்தை அறியலாம். அது குலகுரு சாக்கையரின் தேகமே சாம்பலானதென்று விளங்குகின்றன.
தெளிதல்
இந்திய சகோதரி சகோதரர்களே! ஒரு விஷயத்தை ஆராய்ந்தறிய புகு முன்னம் தங்கள் மனதை நிதானப்படுத்தி, தாங்கள் எடுத்துக்கொண்ட காரியத்தில் புத்தியை உபயோகித்தல் விவேகமாகும். அப்படியே ஒன்றை அநுஷ்டிக்கு முன்னும் அதனை விசாரித்தறிதல் மேன்மையாகும். ஏனென்றால் நமது தேசத்தில் வெகு சிலர் மனமொப்பி சாம்பலைப் பூசிக் கொள்கின்றார்கள். சிலர் சர்வ ரோகங்களும் சாம்பலால் தீருமென்பார்கள். ரோகங்களென்பதென்ன? அதனைப் போக்கும் ஒளஷதங்களென்ன? பாபங்களென்பதென்ன? அதனைப் போக்கும் உபதேசங்களென்ன என்று விசாரித்தறியுமுன்னம் ஒருவர். மாபூதியை, திருநீற்றை, விபூதியை முகத்தில் பூசிக்கொண்டாரென்றால், அதின் பலனை, அதின் உற்பவத்தை, அதின் ஆரம்பகாலத்தை, எப்போதறிவார்? இம்மையிலா? மறுமையிலா? குருவைச் சுட்டச்சாம்பல், பிணங்கள் வெந்த சுடுகாட்டு ஈரம்பல், ஒருவனுடைய காதலி இறந்து வெந்த சாம்பல், எருமுட்டைச் சாம்பல், அடுப்பஞ் சாம்பல், ஜபமாலைகள் வெந்த சாம்பல், காட்டடுப்புக்கரியில் சாம்பிராணி வெந்த சாம்பல் என்னும் விபூதிகளில் பெரிய அற்புதங்களிருப்பதாகச் சொல்லி மக்களை ஏமாற்ற, சாம்பல், சந்தனம், செந்தூரம் கரி, சாந்து, குங்கம், முதலிய வர்ணங்களை நெற்றியில் பூசி வருகின்றீர்கள். விபூதியணியாத பவுத்தர்களைப் பாழ் நெற்றியுடையரென்று தூஷிப்பார்கள் பவுத்தர்கள் வந்து தர்க்கிக்காமலும், யமதூதர்கள் வந்து உயிரைக்கவராமலும், சாம்பல் பாதுகாக்கின்றதென நம்பி குப்பைப்புழுதியைக் காப்பென்பீர்கள். இது நியாயமா? பகுத்தறியுங்கள்.
திருநீற்றுக்கவ்வளவு மகத்துவமிருப்பதாற்றனோ சிவனும் தன் பாபங்களைப் போக்கிக்கொள்ள, சுடுகாட்டுச் சாம்பலில் கிடந்தார் என்கின்றீர்கள்? அவ்விதமே அடியார்களும் சாம்பல் பூசந்தலைப்பட்டு விட்டீர்களாக்கும் சாம்பல்பூசி பாபமற்ற சைவர்களே! நீங்கள், சாம்பல் பூசாத பவுத்தர்கனைச் செய்துவந்த துன்பங்களுக்குப் பயந்து நடுங்கி ஒடுங்கி, தங்கள் பரிசுத்த நெற்றியைக் கொண்டுபோய், சாம்பல் மூஞ்சிகளாகிய சைவர்கள் அகந்த நெற்றியில் தேய்த்துக்கொண்டார்களென்றால், சிவன் புரண்டிருந்த சுடுகாட்டு சாம்பலினால் நீங்கள் ஜீவகாருண்யம் அடையவில்லையே? பாபத்தைப் போக்கிக்கொண்டதாகத் தோன்றவில்லையே? சிவச்சாம்பல் மருத்துவம் பெரியதோ? அடியார்கள் நடந்துகொண்ட ஒழுக்கம் பெரியதோ? முஹமதியர் வாளால் மதம் போதித்ததும், சைவர்கள் சாம்பலால் மதம் போதித்ததும் ஒரே கருத்தென்று உண்மைச் சைவர்களுக்கு விளங்காமற்போகாது. மூடர்களுடைய ராஜ்யத்தில், விபூதியணியாதவர்களை சுடலையாண்டிகள் செய்துவந்த அக்கிரமங்கள் பலவே. இவர்களுக்கு மூடவரசர்களுடைய உதவியும் இருந்தது. ஒரு பலனும், ஒரு அறிவும். ஒரு உபகாரமுமற்ற மந்திர மொழிகளும், பஞ்சாக்ஷரம் சடாக்ஷரங்கம்ளும் படித்துத் திண்ணைத் தூங்கிகளாகச் சாம்பல் பூசி காலந்தள்ளி வந்துள்ளார்கள்.
க. அயோத்திதாசப் பண்டிதர் சிந்தனைகள் தொகுதி: ஒன்று, தலித் சாகித்திய அகாதமி, சென்னை.
Comments
Post a Comment