மொழிபெயர்ப்பு கவிதைகள்
மொழிபெயர்ப்பு கவிதைகள்
Bothi tree- Mina Gajbhiye
போதி மரம் -பிரகதி (தமிழில்)
நான் ஓரிடத்தில் குடியேறப் போகிறேன்
சிவந்த காரை ஓடுகள் மேய்ந்த வீடுகளில்,
திட்டமிட்டு போடப்பட்ட சாலைகளில்,
தோட்டங்களும் புல்வெளிகளுமான இடத்தில்.
ஆய்வுகூடத்தில் குடியேறுகிறேன்..
அங்கு,
போலியான மனங்களை கட்டமைக்கின்றனர்
என்ன வகையான உலைக்களம்
அங்குள்ளதென தெரியவில்லை
புறத்தில் புன்னகையும்
அகத்தில் நஞ்சும் கலந்திருக்கிறது.
எண்ணங்களிலும் செயல்களிலும்
எவ்வித ஒற்றுமையும் இல்லை.
பழைய வழக்கங்களை மீண்டும்
துளையிட்டு வைத்திருக்கும் இடமது.
கணக்கிடும் முகங்களோடு
வசதிமிகு வாழ்வோடு
முகமூடிகளை எல்லாம்
மாற்றியமைத்து வெளியேற
எனது வரவேற்பிற்காக ஆரத்தி எடுக்கின்றனர்.
எனது மனம் நிறைவைத் தந்தது.
நான் விதைகளை தூவினேன்.
முன்பே அதற்கான முன்னேற்பாடுகளை துவங்கி வைத்திருந்தனர்
ஆனால் அது எதிர்ப்பிற்காக …
எனக்கு ஒரு ஐயம்
தூவிய விதைகளிலிருந்து ஒரு செடியேனும் முளைத்திடாதா ?
போதி மரம்.......
*******
The Well Belongs to the Landlord
(Kuan thakur ka)
-Om Prakash Valmiki
English Translation by : Archit Guha
கேணியெல்லாம் நிலக்கிழாருடையது
-பிரகதி (தமிழில்)
தீயடுப்பு மண்ணில் செய்து வைக்கப்பட்டது
மண் ஏரியிலிருந்து எடுக்கப்பட்டது
ஏரி நிலக்கிழாருக்கு சொந்தம்
ரொட்டி வேண்டி பசியெடுக்கிறது
ரொட்டி திணைகளால் ஆகின்றது
திணை நிலங்களில் விளைகிறது
நிலம் நிலக்கிழாருக்கு சொந்தம்
காளை நிலக்கிழாருடையது
ஏர் நிலக்கிழாருடையது
கைகளில் ஏந்தியிருக்கும் கலப்பை
மட்டுமே நம்முடையது
அறுவடையும் நிலக்கிழாருடையது.
கிணறு நிலக்கிழாருடையது.
நீர் நிலக்கிழாருடையது
பயிர்கள் மற்றும் வயல்கள் நிலக்கிழாருக்கு சொந்தமானது.
அதில் இருக்கும் பாதைகள் கூட நிலக்கிழாருடையது
அக்கம் பக்கம் இருப்பவர்களும் நிலக்கிழாருக்குரியவர்கள்.
பிறகு நம்முடையது எது ?
இந்த ஊர் ?
இந்த நகரம் ?
இந்த நாடு ?
******
Comments
Post a Comment