கிருத்திகா கவிதை
கிருத்திகா கவிதை
தேடிய சீதைக்கு
நாண் பூட்டி சிவதனுசுடைத்து
மணமுடித்து
வனவாசம் சென்றான் ராமன்
அன்பன் கைகோர்த்து
அம்மை இவள் போக
தேடிக் கொண்டாள் புதுவாழ்வை
கண்ணாறக் கண்டாள் பல கனவை
கற்பின் காவலனே
நெறி தவறி அக்கினியிலேற்ற
இடித்து அழித்தான் அவன் கற்பை
அக்கணமே
ராமனோ ராவணனோ
யாரைப் போற்ற? யாரைத் தூற்ற?
-ச.கிருத்திகா
Comments
Post a Comment